...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Tuesday, November 29, 2005

கன்னியாகுமரி..

முக்கடல் சங்கமம்
முழுமதி குங்குமம்
எழுஞாயிரும்
வெண்திங்களும்
விடியலுக்கு வணக்கமும்
விடிய விடிய காத்த மயக்கமும்
வாண் கொண்ட அழகு
விண்ணும்
கண்ணிலடங்கா கடலும்
காண கிடைத்த அழகே!
கன்னியாகுமரி












திக்கெட்டும் தெரிந்தவராம்
தெய்வ மொழி புலவர்
அய்யன் வள்ளுவன்!
அகண்ட கடலின் நடுவே
திரண்ட அலைகடல் சங்கமம்
வான் தொடும் உன் சிரசு
வின் அதிரும் உன் செந்தமிழ்
பால் மூன்றும்
பக்குவமாய்
நாலு மூனு வார்த்தைகளில்
நறுக்காக உரைத்தவரே!
உன் புகழ் வான் முட்டும்
உன் உருவம் கூட!








நீல வானம் கொண்டு
மேனியெங்கும் மஞ்சள் பூசி
அலை ஆர்ப்பரிப்பும் இங்கே
அமைதியின் சின்னமும் இங்கே
ஐந்தறிவு ஜீவனுக்கும்
சொந்த சுகத்தோடு
பந்த பாசத்தோடும்
அடைக்கலம் தந்தாய்
ஆறறிவு இருந்தும்
அடி மனதில்
பொடியும் ஈரமின்றி
சுனாமி எனும் சொல் கொண்டு
சுட்டெரித்தாய் நீயும்
ஒன்றும் அறியா
கன்றினை போல
ஒய்யாரமாய்
ஓடி ஆடும் உன்
விளையாட்டே
பாசமுள்ள மக்களும்
நேசத்தோடு நித்தமும்
நெடுந்தொலைவு பயணம்
தொட்ட பாவம்
விட்ட பாவம்
கொட்டி அழ உன்னிடம்!







Receomand this post to other reades :

Monday, November 28, 2005

காதல்..





எப்போது பிறந்தது?
மொட்டு மலரும் கணம்
இதழ் விரியும் அந்த ஷணம்
உள்ளத்தில் ஓர் ஆனந்தம்
எனக்காக அவளும்
அவளுக்காக நானும்
என்னை நேசிக்கும்
என்னை நினைக்கும்
ஓர் ஜீவன் - காதல்
தந்தை பாசம் கடமை
உந்தன் பாசம் கரிசனம்
இதுதான் காதலா?
காதலில் காத்திருத்தல்
காத்திருத்தல் காவியம்
காவியம் கண்ணே நீ!
காதல் பருவ மாற்றமா?
உள்ளத்து உருவ மாற்றமா?
வசந்தத்தின் வழி தோற்றமா?
எனக்குள்ளும் காதலா?
எனக்கும் தெரியாமலா?
உன்னை பார்த்த நாள் முதல்
காணவில்லை இதயம்
திருடிய பெண் நீயே
இதயம் இன்றி வாழும் உயிரினம் ஏது?
நான் மட்டும் வாழ்வது எப்படி?
என் உடம்பில் வெறும் குருதி
மட்டும் ஓடி இருந்தால்
என்றோ நான் இறந்து இருப்பேன்
உன் நினைவுகள் கலந்த உதிரமல்லவா
ஓடுகின்றது- எங்ஙனம்
நான் மட்டும் இறப்பேன்
காதலிக்கிறேன் என்று சொல்
நேரில் கூட வேண்டாம்
என் கனவிலாவது?
கனவுகள் சுகம்-என் காதலும் சுகம்!

Receomand this post to other reades :

Sunday, November 27, 2005

தேடி வந்த சாவி!

வழக்கம் போல அன்றும் வீட்டினை பூட்டிகொண்டு அலுவலகம் செல்லும் முன் காலணியை அணிகையில் எனது சாவி கொத்தினை அங்கேயே தவற விட்டு விட்டேன். அலுவலக வாயிலை அடைந்துவிட்டேன்.என் கைத்தொலை பேசிக்கு ஓர் குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது."உங்களுடைய சாவியை எங்கேனும் தவற விட்டீர்களா"
உடனே எனது பேண்ட் பாக்கெட்டையும் தோல்பையயும் துழாவினேன். சாவி கொத்தினை காணவில்லை.
செய்தி சுமந்து வந்த எண் எனக்கு அறிமுகம் ஆகாத எண். என் வீட்டிற்கு மேல் வீட்டில் வசிக்கும் தன் நண்பரை பார்க்க வந்த அந்த சீன இளைஞர் என் சாவி கொத்தை பார்த்து விட்டு எனக்கு தகவல் கொடுத்துள்ளார்.பின் குறிப்பிட்ட பேருந்து நிலையத்தில் காத்து இருப்பதாக சொன்னார்.
அவருக்கு நன்றியினை தெரிவித்து சாவிகொத்தினை பெற்றுகொன்டேன்.
எப்போதும் அலுவலகத்துக்கு கொஞ்சம் முன்கூட்டியே செல்வேன்.எனவே அலுவலக சாவி என்னிடம் தான் இருக்கும். நல்லவேளையாக நான் யாரையும் காக்க வைக்க வில்லை. எப்படியோ என்னுடைய சாவி என்னிடமே வந்து விட்டது. ( நல்ல காலம் என்னுடைய பெயரும் கைதொலைபேசி எண்ணும் பொறித்த பிளாஸ்டிக் பட்டையை சாவி கொத்துடன் இணைத்து இருந்தேன்)

Receomand this post to other reades :

Wednesday, November 23, 2005

காத்திருப்பாய்...

உன்னோடும் நான்
உறங்குகின்றேன்
கன்றோடு கனிவாய்
மன்றாடும் மாட்டினம்
மன ஊஞ்சல் தனில்
தினம் உன்னோடு சதிராட்டம்
கனநேரம் காணவில்லை
என் கனவில்
உடன் கட்டை ஓர் நினைவு
கடன் என வாழ்க்கையேன்
கண்ணாடி பார்க்கையில்
முன்னாடி உன் முகம்
நினைவுகள் தினம்
அனைவுகள் சுகம்
உன் மடி சேரும் நாள்
கண் மூடி காத்துருப்பேன்
மன் மூடி செல்லும் முன்னே
மனையே உன்னில் சேர்வேன்
கலங்காதிரு
துலங்கும் ஓர் பொழுது
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
கண்ணோடு இமை போலே
கைசேர்வோம்
மைவிழியாளே
உன்னோடு சேர்வேன்
உன் நினைவோடு இங்கே
கடிமனம் வேண்டா
நொடி பொழுது சாரல்
பொடி நடை போடுவோம்
புயலென வருகிறேன் !

Receomand this post to other reades :

Tuesday, November 22, 2005

கொஞ்ச நாள் பொறு தலைவி..

முதல் காதல் பெண்ணே!
முழு காதலும் நீயே!
கண் கொண்ட ஈரம் காயும்
உன் சொல் கொண்ட வார்த்தை?
கடி சொல் வேண்டாம் பெண்ணே!
கொடி இடையாளே
கொஞ்சம் பொறு
பஞ்சமின்றி பாசமும்
நெஞ்சோடு நேசமும்
அஞ்சாறு மாசத்தில்
அது வரையில்
எனக்கேன் இன்னொரு காதலி?
வம்பே வேண்டாம்
நீ இருக்கும் நெஞ்சமதில்
நிறைவாய் எந்நாளும்
உன்னோடுதான் விளையாட்டு
கண்ணோடு காண்பதெல்லாம்
கண்ணே நீ நம்பாதே
ஒடோடோடி வருவேன்
இலையுதிரும் காலமிது
வசந்த காலம் வரும்
வாழ்ந்த காலம் சுகம்
மற்க்கவில்லை பெண்ணே
உன்னோடு ஓர் நாளும்
கண்ணோடு நீர் வானம்
நான் என்ன செய்ய?
நிறைய வேலைகள்
நிறைவாய் சம்பளம்
நித்தம் உன் ஞாபகம்தான்
நித்திரை கொண்டு நிம்மதி வாங்கு!
சத்திரம் ஒன்று கண்டு
சடுதியில் கல்யாணம்!

Receomand this post to other reades :

Saturday, November 19, 2005

சிம்பிளாய் தியானம் செய்யலாம் வாங்க!

அன்றாட அலுவல்களில் அனேக நேரங்களில் வேளைபளுவின் ஊடே வெருப்பான எண்ணங்கள்,சோம்பேறி தனங்கள், அதன் விளைவாக வேலையிடத்திலும் வெளி இடங்களிலும் நம் நடை முறையிலுள்ள மாற்றங்களை சீர் செய்ய தியானமும் ஓர் வழிமுறையே!
தியானம்= Balancing our passitive negative thoughts.
எனக்கு தெரிந்த வரையில் சிம்பிளான முறையில் உலகத்தில் விரவியுள்ள அனைவருக்கும் ஏற்ற முறையில் ஓர் தியானம் " சகஜ மார்க்கம்"
சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகின் அனைத்து பாகங்களிலும் அமைந்துள்ள ஓர் அமைப்புதான் "ஸ்ரீ ராம்சந்த்ரா மிஸன்"

உத்த்ர பிரதேசத்தில் அறுபது ஆண்டுக்கு முன் ஸ்ரீராம்சந்த்ரா என்பவரால் தோற்றுவிக்க பட்டு அங்கே இருந்த தலைமையிடம் பின் சென்னைக்கு மாற்றபட்டு சீரோடும் விளம்பரங்கள் இன்றி சிறப்போடும் கட்டணங்கள் இன்றி கனிவோடும் மனித குலத்திற்க்கு ஓர் ம்கத்தான சேவை நிறுவனம்
நங்கு பயிற்சி உள்ள ஒருவரை தலைவராக கொண்ட இந்த அமைப்பு இப்போது பார்த்தசாரதி ராஜகோபாலச்சாரி என்பவரின் தலைமையில் இயங்கி வருகிண்றது
மாஸ்டர் என அழைக்கப்படும் இவரால் நியமிக்க பட்ட பல ஆண்டுகள் தியான பயிற்சியில் தேர்சிபெற்ற பலர் தியானம் செய்வோர்க்கு வழிகாட்டியாக உலகெங்கும் உள்ள்னர்
மாஸ்டரால் நியமிக்கபட்ட அவர்கள் "பெர்செப்டர்" எனவும் தியனம் மேற்கொள்பவரை "அபியாசி" என்றும் அழைப்பர்
மாஸ்டர் 18 மொழி அறிந்த மஹான்

சரி தியானம் எவ்வாறு மேற்கொள்வது?

பெர்செப்டர் என அழைக்கபடும் வழிகாட்டியாளர்களிடம் குறைந்து மூன்று சிட்டிங் மேற்கொள்ள வேண்டும் எவ்வறு தியானம் மேற்கொள்ளலாம் என எல்லா வழி முறையும் ஓர் தோழமையுடன் நமக்கு தோள் கொடுப்பர்.
இந்த அமைப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் மேற்கொள்லும் எளிதான முறையாகும்.
யோகாசனத்திற்க்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.மனதினை ஒருமுக படுத்தும் பயிற்சியே இதனுள் மேற்கொள்ளபடுகின்றது.இந்தியர்களைவிட பலமடங்கு வெளிநாடுகளில் இந்தியர் அல்லாத மற்ற இன மக்கள் இந்த முறையை மேற்கொள்ளுகின்றனர்.
ஞாயிறு தோறும் நடைபெரும் கூட்டு தியானத்தில் எவ்விதபாகு பாடுமின்றி சகோதர தன்மையோடு பழகும் விதம் மனிதற்கு ஓர் மாற்றமளிக்கும்.
அதி காலையில் நம் அன்றாட கடன்களுக்கு பின்னே ஓர் அரை மணி நேரம் அல்லது உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் நம் வீட்டிலோ வெளி இடங்கலிலோ தியானம் மேற்கொள்ளலாம்.

எடுத்த உடனே தியானம் என்பது எவரலும் இயலாத காரியம்.
கண் மூடி அமர்கையில் பல எண்ணங்கள், நினைவுகள் நம்மை ஒரு முக சிந்தனையிளிருந்து சிதறடிக்கும்.
பயிற்சி பழக்கத்தின் மூலமே நாம் நம்மை ஒருமுக படுத்தமுடியும்!
மேலும் வேண்டிய தகவல்கள் இந்த வலைதளத்திலிருந்து நீங்கள் பெற்று கொள்ளலாம் .
நன்றி நண்பர்களே!

Receomand this post to other reades :

Monday, November 14, 2005

அன்புடன் சுஹாசினிக்கு ....







மணி ரத்னம் எனக்கு புடிக்கும்

இனிய உங்கள் நடிப்பும் புடிக்கும்

கனிவான கரிசனதோடு எழுதுகின்றேன் ..

சிங்காரகுமரன்

எங்கள் தமிழ் மணத்தில் மட்டும்

எத்துனை பிரச்சனைகள்

இந்த எழவெடுத்த குழ்பூ வினால்......

அத்துனைக்கும் நான மட்டும்

இல்லையென்றால்.!?

பாம்பு திண்ணும் ஊரிலே

நடு கண்டம் வேண்டாம் என்றால்

நிச்சயம் தலை கண்டம் தனக்கு வாரா

கோவில் கட்டியவரே!

குல தெய்வத்தையும் இடிப்பார்!

மண் சோறு தின்ற மக்களும் இங்கே!

விண்ணதிற பண்ணாட்டுக்கும்

பாடம் சொன்ன கலாமும் இங்கே!

மறந்தும் போய்

மேற்கத்திய கல்ச்சர்க்கு

வக்காலாத்து வாண்டாமே!

பரம குடிக்கு டிரங்கால் போட்டேன்

சிரமமான சூழ்நிலைதான்

ஊர் பக்கம் வந்த

கார ஒடப்போம்!

உறவு காரங்க அதுக்கு மேல

வெறகு ரெடிண்றாங்க!

வேண்டாங்க பொல்லாப்பு

சின்னதா ஒரு வார்த்த

மன்னிச்சிகுங்க மக்களே!

மக்களுக்கு நல்ல மனசுங்க!

உங்களுக்கு நல்லா தெரியுங்க!

அப்புறம் அடுத்த படம் எப்போங்க?

நமக்கும் அப்பிடியே ஒரு சான் ஸ்!

நல்லா பாட்டு எழுதுவேங்க

சொல்லமா பூச போடாதீங்க

சொன்னதெல்லாம் மனசுல போடுங்க


- சினேகமுடன் சிங்காரகுமரன்

Receomand this post to other reades :

Friday, November 11, 2005

ஒற்றை புன்னகை!





உந்தன் ஒற்றை புன்னகை!
எந்தன் இதயமெங்கும் மின்னலே!
எனக்குள்ளும் ஓர் கர்வம்!
பின்னே எத்தனை நாள்
உன் பார்வை என் மேல் விழ
ஏழு மணிக்கு எழும் நான்
எழும் ஞாயிறும் எனக்கு பின்னே
அழுக்கு பேண்ட் பழுப்பேறிய சட்டை
வெளுத்து கட்ட
நாளும் ஓர் சலவை கட்டி
வருஷ கணக்கில் வழிக்கா தாடிக்கு
வாரம் பத்து ரூபாய் வரி
கரித்துண்டும் கை விரலும்
கோல்கேட் சுவைகண்டு
எண்ணெயும் கிரேஸும் காணாத
என் சைக்கிள்
வண்ணங்களோடு வகையாய்
தினமும் குளியல்
உந்தன் கூந்தல் அழகுக்கு
என் அப்பா சட்டை பையில்
காசெடுத்து
உயர்வகை தைலம்!

பார் பெண்ணே இது அழகா?

என் உழைப்பில் நான் வாங்க
இன்றோடு நல்ல வேலை
நாளை எப்படியோ
நல்லவிலை கொடுத்து
நிச்சயம் தைலம் உனக்கு
உந்தன் ஒற்றை புன்னகைக்கே
என்னுள் எத்துனை மாற்றம்!
என்னோடு கலந்து விடு
மண்ணோடு சேறும் காலம் வரை
கண்ணில் இமை போல
கரிசனமாய் காத்திடுவேன்
ஊர் கழனியில்
ஊறுகாய் அளவு விற்று
நானும் நீயும்
நாளொரு மேனியும்
பொழுதொரு நடையுமாய்
நாடெல்லாம் சுற்றி
வீடு பேறு காண்போம்!
கார் காலம் வந்தால்
கம்பளி போர்த்தி
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
உயர் வகை உலகம் செய்வோம்
பைந்தமிழே பார்த்தாயா!-உன்
ஒற்றை புன்னகைக்கே
என்னுள் எத்துனை மாற்றம்
கண்ணே கார் குழலே
வேண்டாம் கண்ணாம்பூச்சி
பொன்வாய் திறவாய்
போவோமா ஊர்கோலம்....

Receomand this post to other reades :

சித்திரமும் கை பழக்கம்

எனக்கு வந்த மின்னஞ்சலில் கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சிங்க. கையினாலயே கைக்கு ஓர் ஓவியம்






Receomand this post to other reades :

Wednesday, November 09, 2005

நான் யாரை கண்ணாலம் கட்டிக்கலாம்?

























முத்தான மூன்று நண்பர்கள்
முகேஷ் கணேஷ் சதீஷ்
சின்ன வயசில் சாலையில் கோலி
பம்பரம் பனங்காய் விளையாட்டு
பின்னே பெரிய வயதில்
பல்திசை பயணம்
ஆளுக்கு ஒரு வேலை
நாளும் ஒரு சாதனை
இருந்தும் நண்பர்கள் சந்திப்பு
நாள்தோறும்
வேலையில்லா நாளில்
வெளியூரில் விளையாட்டு
மலையே அழகு
மலையில் மண்டியிட்டு
உளியோடு சண்டிதனம்
உருவம் காண
ஓர் நாள் அல்ல
பருவம் பல கடந்து
யுகங்கள் காணும்
சிற்பம் செய்யும்
கல் தச்சர் கனேஷ்

பெண்கள் அழகு
பேரழகு பெண்ணோடு பொன்னகை
பொன்னகைதானே பெண்களின் சொர்க்கம்
கால் மிஞ்சு கொலுசு முதல்
நெத்தி சுட்டியில் நூறுவகை
தங்கம் தாமிரத்தோடு
மங்கள நகைசெய்யும்

பொற்கொல்லர்
மங்கா புகழ் முகேஷ்
வாய் வார்த்தை
பொய்யா மந்திரம்
ஜீ பூம்பா
கண் முன்னே காணும் பொருள்
மண்ணுள்ளே சென்ற மாயமென்ன
மண் மூடி மண்ணோடு மண்ணாய்
போன சென்மங்கள்
கண் முன்னே காணும் அதிசயம்
பொல்லா வேலை
புண்ணியவான்
சமத்து சதீஷ்
இலையுதிர் காலம்

தொலைதூரமாய் ஓர் நாள் பயணம்
பொழுதெலலாம் கொண்டாட்டம்
இரவோடு இளைப்பாற
அரவம் இல்லா ஆற்றங்கரையில்
அரைகுறை தூக்கம்.
கனேஷ்க்கு காலையிலேயே எண்ணம்
கரு நிறத்தில் கல்லொன்று கண்டானே
வேறென்ன கை வண்ணத்தில்
புன்னகையோடு புது பெண்
நடு ராத்திரியில்
நல்ல பிள்ளையாய்
நண்பர்களோடு மீண்டும் தூக்கம்
நாங்கள் மட்டும் சலைத்தோமா
மீதி இரவில்
கற்சிலைக்கு பொற்கலனோடு புத்தாடையும்
முகேஷின் மகத்தான பணி
புது மண கோலத்தில் நான்
நல்ல தூக்கம் நண்பர்களுக்கு
வல்லவரான சதிஷ்க்கு
சொல்ல முடியா சந்தோஷம்
பின்னே அழகான பெண்
ஆடை அணியோடு
உயிர் மட்டும் இருந்தால்
ஊரில் இல்லை உன் போல் பெண்
வாய் சொல்லும்
கைசொல்லும்
வகையான மந்திரமும்
செதுக்கிய சிலையாள்
இப்பொது செந்தமிழ் செல்வி
சதீஷின் சாமர்த்தியம்
இப்பொ சொல்லுங்கோ
நான் யாரை கண்ணாலம் கட்டிக்கலாம் ?



Receomand this post to other reades :

Wednesday, November 02, 2005

என்னோட லைலா.!





எப்போதும் போல அந்த சனிக்கிழமையும் சைனா டவுன் மார்க்கெட்டுக்கு சென்றாள்.ஆர்ச்சார்டு ரோடு விலைவாசிக்கு முற்றும் எதிரான சகாயமான விலையில் கிடைப்பதாலும் மேலும் பேரம் பேசி வாங்கும் சவுகரியத்தாலும் சுதிர்தா அங்கே செல்வது வழக்கம். நார்த் பிரிட்ஷ் ரோட்டுக்கும் அப்பர் கிராஸ் ஸ்ட்ரீட்டுக்குமிடையே அந்த காப்பி ஷாப்பில் அவளுடைய பழைய முதலாளியை சந்தித்தாள். அவரிடம் தான் திருமணத்திற்கு முன் காரியதரிசியாக வேலை பார்த்தாள்.

ஹலோ சுதி எப்பிடிம்மா இருக்கே? உன்னை சந்திச்சதில ரொம்ப சந்தோழம்.ஆமா இங்க எங்கே வொர்க் பன்ரே?
சுதி சின்ன புன்னகையோடு தலையை இடமும் வலமும் அசைத்தாள்.
நீ ஏன் மறுபடியும் நம்ம ஆபிஸ் வரக்கூடாது?
உனக்கே தெரியும் எனக்கு எப்போதும் ஒரு செக்கரட்டரி வேனும்னு. இப்போ வொர்க் பன்றவங்க இந்த மாச கடைசில ரிசைன் பன்றதா சொல்லி இருக்காங்க. நான் இனி புதுசா ஒரு செக்கரட்டரியை அப்பாயிண்ட் பண்றதவிட ஏன் உன்னையே மீண்டும் வேலைக்கி அமர்த்த கூடாது? என்னால இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியல, கல்யாணம் ஆயிட்டா உடனே வேலையை விட்ரனுமா என்ன? இந்த போட்டியான சூழ்நிலையில என்னோட ஒரே தேர்வுன்னா அது சுதிர்தா நீதான்!

மிஸ்டர் ஈஸ்வர் நீங்க சீரியசா பேசரீங்க, நான் அத பத்தி ஒன்னும் நெனச்சி பாக்கல.
ஆமாம் உண்மையாதான் சொல்றேன்.
ஆனா எனக்கு ரொம்ப நாளா டச் விட்டு போச்சு என்னால இந்த கால போட்டியோட ஈடு கொடுத்து வொர்க் பண்ண முடியுமான்னு தெரியல
ப்ளீஸ் அத மாதிரியெல்லாம் சொல்லாதே ,உன்கிட்டேர்ந்து பாசிட்டிவ் பீட் பேக் எதிர் பாக்கிறேன் நீ எப்ப வேணும்னாலும் வந்து சேரலாம்.
பொருளாதார வளர்ச்சி பயங்கர வேகமா வளர்ந்துட்டு வருது ஐ மீன் கம்ப்யுட்டர்லே இப்போ எல்லா வேலையையும் முடிச்சிராங்க. இந்த சூழ்நிலையில என்னால எப்பிடி உங்க ஆப்பிஸ்ல திறம்பட வொர்க் பண்ண முடியும்னு நெனைக்ரீங்க?
அது ஒரு பெரிய பிரச்சனையே இல்ல,சில கோர்ஸ் ரீபிரஷ் பண்ணுனாலே போதும் எனக்கு தெரியும் நீ
ஈசியா எல்லத்தையும் பிக்கப் பண்ணிப்பே நம்ம கவர்மென்ட் மணமான பெண்கள் மருபடியும் வேலைக்கு செல்ல எங்கரேச் பண்ராங்க.
உன்னோட மூளை துருபுடிச்சிட்டுன்னு சொல்லாதே, முன்னே வாங்கினத விட எக்ஸ்ட்ரா சேலரி தர்ரேன்
நீ பார்ட் டைமா கூட வந்து வொர்க் பண்ணலாம் கல்யாணம் ஆன பொண்ணுங்க நல்ல பொருப்போட வொர்க் பன்றாங்க உன்ன விட திறம் பட வொர்க் பன்ரவங்கள என்னால தேட முடியாதும்மா. உனக்கு பிறகு என்கிட்ட வொர்க் பண்ணுனவங்க அவ்ளோ பொருத்தமா இல்ல
.ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஏகப்பட்ட பொருப்புக்கள் வீட்டு வேலைகள் ,குழந்தைகள், என் கஸ்பன்ட் ரொம்ப பிசியானவர் அவர்கிட்டேயும் பேசனும், இருந்தும் எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்
எனிவே உன்கிட்டேர்ந்து சாதகமான பதில் எதிர்பார்க்கிறேன்
ஓகே பை சுதிர்தா
பை மிஸ்டர் ஈஸ்வர்
"நல்ல விழயங்கள் ஒருமுறைதான் கதவை தட்டும். இதையே ஒரு நல்ல வாய்ப்பா ஏன் எடுத்துக்க கூடாது? குழந்தைங்க ஸ்கூல் போய்டபோறாங்க வீட்டு வேலைக்கு நிர்தா இருக்கா. சமையலும் அவளே பண்ணிடுவா ஸ்கூலேர்ந்து அவளே பசங்கள அழச்சிட்டு வந்துடுவா ,வீட்டுலேயே இருந்தா ரொம்ப போர் அடிக்கும், என்ன இது மீனிங்லெஸ் லைப் இன்னிக்கி நைட் அவ்ர்கிட்ட பேசனும்”
பல யோசனைக்கு நடுவில் இன்னும் அவள் சந்தீப்பிடம் இந்த விஷயம் பற்றி பேசவே இல்லை.

ட்ட்ரிரிர்ங்ங்..!
அய்யோ சுதி அரை மணி முன்னமே அலாரம் செட் பண்ண மறந்துட்டேன்,இன்னிக்கி ஆபீஸ்ல முக்கியமான ஆடிட் இருக்கு,இதோ குளிச்சிட்டு வந்துரேன் ,அதுக்குள்ள பசங்க்ள எழுப்பி ரெடி பண்ணிடு .சிறிது நேரத்திற்கெல்லாம் அலுவலக உடையில் சந்தீப் துரிதமானார்.
பொம்மி,அம்மு எழுந்துறீங்க டாடிக்கு டயமாச்சு தலையணை போர்வையை சரி செய்தபடியே துரித படுத்தினாள்
இன்னிக்கி காலை டிபன் யாரும் சாப்பிட நேரம் இல்ல .பொம்மி,அம்மு அவங்க ஸ்கூல் கேண்டீன்ல சாப்பிடுவாங்க. அந்த இரட்டை குழந்தைகள் யுனிபாம் ஷு சகிதம் ரெடியானார்கள் புத்தக பையில் எல்லாவற்றையும் சரிபார்த்து குழந்தைகளை வாசலுக்கு அழைத்து வந்தாள்.தயாராக இருந்த காரில் கணவனுடன் அனுப்பி வைத்தாள் .கார் சென்று மறையும் வரை கையசைத்து கொன்டு இருந்தாள்
இரவு சந்தீப் சொன்னது நினவில் வந்தது “சுதி இந்த லெட்டரை நாளை போஸ்ட் பண்ணிடு,ரெஜிஸ்தர் போஸ்ட்.தென் மாலன் ஹேமாவுக்கு போன் பண்ணி பேசிடு, அவங்க பையனோட பர்த்டே பங்க்ஷ்னுக்கு லேட்டாதான் போக முடியும். “
சரிங்க கவலையை விடுங்க எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்.
அந்த இரண்டு குழந்தைகளும் வழக்கம் போல அழும் முகத்தோடு பை சொல்லி காரில் பயணம். கார் மெதுவாக சாலையில் ஊர்ந்து பயணிக்க,கார் கண் பார்வையிலிருந்து தொலைதூரம் செல்லும் வரை வாசலில் நின்று பின் வாசல் கதவை அடைத்து கிச்சனுள் தன்னுடைய காலை உணவுக்காக நுழைந்தாள்.
என்றும் இல்லாத ஓர் அமைதி அவளை சூழ்ந்தது. சந்தீப் குழந்தைகளை அழைச்சுண்டு ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ் போய்ட்டார்.வீட்டுபணிப்பெண் நிர்தா காலையிலேயே மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டாள் .சுதி மீண்டும் வேலைக்கு செல்வது பற்றி யோசித்தாள். சந்தீப்கிட்ட இதபத்தி பேசலாமா? இல்ல ரகசியமா போய்ட்டு வந்துடலாமா? சந்தீப் வீடு திரும்ப லேட்டாகும் ,நிர்தா அதற்குள் இரவு உணவு தயார் செய்து விடுவாள். மேலும் என் விஷயத்தில் நிர்தா ரகசியம் காப்பாள்.
இருந்தாலும் என்றோ ஒரு நாள் நிச்சயம் சந்தீப் அறிய கூடும். அது அவ்ளோ நல்லா இருக்காது.
சுதி காலை உணவிற்கு பின் தனது படுக்கை அறையில் உள்ள ஆளுயர கண்ணாடி முன் நின்று தனை தானே நோட்டமிட்டாள்.சந்தீப் எப்பிடி என்கிட்ட அவர தொலச்சார்? ஆமா அப்பொதெல்லாம் ஆபீஸ் கெளம்பும் போது சின்னதா ஒரு கிஸ் ,பை பை ஆனா இப்பொதெல்லாம் கொஞ்சம் மாற்றம். ஆனா அதெ சந்தீப் தான்.மறக்காம் மாலையில வீடு திரும்பும் போது அழகிய ரோஜா என் கையில்!ஒவ்வொரு வெள்ளிகிழமையும் வெளியே டின்னர்.
அவருக்கு எவ்ளோ அழகான பொன்னுஙக நட்பு இருந்தும் ஏன் என்னை காதலித்தார்? நான் என்ன அவ்லோ அழகா? இல்லையே. ஆனாலும் வசீகரிக்கும் முகவெட்டு. அதுதானே சந்தீபை அவளுல் வீழ வைத்தது! கிச்சனிலிருந்து கிளம்பிய பாத்திரங்களின் ஓசை அவளின் கவனம் திரும்பியது. நிர்தா அப்போதுதான் மார்கெட்டிலிருந்து வந்திருந்தாள்.சுதி கையிலிருந்த அன்றைய செய்திதாளை மேய்ந்தாள், ஒரு கணவன் - மனைவிக்கு தெரியாமல் வீட்டு பணிப்பெண்ணிடம் ஆசை கொண்டான் மனைவிக்கு தெரிய வர வேறென்ன டைவோர்ஸ்தான். ஆனாலும் அங்கே பிரச்சனை அவர்கள் குழந்தைகளுக்கு யார் பொருப்பு ஏற்பது?

சுயநினைவுக்கு வந்தவள் தன் அழகிய வாழ்க்கையில் சின்ன பதற்றம் தொற்றியது.
நிகிதா 20 வயது பருவபெண் . நன்றாக ஆங்கிலம் பேசகூடியவள் பள்ளி இறுதி வரை படித்திருக்கிறாள் அழகான அறிவுள்ள பணிப்பெண். குடும்ப சூழ் நிலை காரணமாக இவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாய் விட்டாள்.ஒவ்வொரு மாதமும் தன்னுடைய ஊதியத்தை தன் குடும்பத்திற்கு அனுப்பி விடுவாள். சுதிர்தாவின் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள்.தன் குழந்தைகளின் ஹோம் வொர்க் கூட இவள் கவனிப்பதில்லை, எல்லாமே நிகிதா தான், ஈஸ்வர் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வர, இந்த சூழ்நிலையில் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிகிதாவை போஸ்டாபீஸ் அனுப்பி விட்டு ஹேமா மாலன் வீட்டுக்கு போன் செய்தாள். “ஒகெ நெவர் மைண்ட் சுதி , நீங்க பொறுமையா வாங்கோ, பொம்மி அம்முவை மறக்காம அழச்சிட்டு வந்துடுங்கோ. என்னோட சுட்டி பையன் ரொம்ப சந்தோழப்படுவான், இதோ பசங்க வர நேரம் , நேரமாயிடிச்சி சுதி நான் கொஞ்சம் லேட் பண்னி கால் ப்ண்றேன்.”
சுதிக்கு ரொம்ப சந்தோழம் , வீட்டு வேலையெல்லம் நிகிதா முடிச்சுட்டா, குழந்தைகளை கூட்டியார போய்ட்டா ,அவங்க வந்துட்டா லஞ்ச் முடிச்சிரலாம் மதிய உனவை டைனிங் டேபிளில் கடை பரப்பினாள். நாசி துளைக்கும் நான் வெஜ் இருந்தும் நாவில் சுவைக்க எண்ணமில்லையே! குழந்தைகளை குளிக்க செய்து மதிய உணவை முடித்தாள், ஹோம் வொர்க் எல்லாம் செக் பண்ணும்போதே குழந்தைகள் ரொம்பவும் அயர்ச்சியாக இருக்கவே அவர்களுக்கு படுக்கை சரி செய்து உறங்க வைத்தாள்.
இந்த ரொட்டீன் வாழ்க்கை அவளுக்கு அலுத்துவிட்டது, மருபடியும் வேலைக்கு சென்றால் அன்றி லைப்ல ஒரு இன்ரஸ்டிங் இருக்காது , வீட்டை பாத்துக்க நிகிதா இருக்கா , ஸ்கூல் முடிஞ்சி அவளே குழந்தைகளை கொன்டாந்துருவா,படிப்புல சில சமயம் லேக்கா இருப்பாங்க ,ஒரு பிரைவேட் டியுஷன் வச்சுட்டா சரியாய்டும். இன்னும் இத பத்தி சந்தீப்கிட்ட பேசல, ஒரு வேளை இது அவருக்கு புடிக்காம போய்டிச்சுன்னா? இதனால எனக்கும் அவருக்கும் நெருக்கங்கள் குறைஞ்சிடிச்சின்னா? நாம ரிஸ்க்கான யோசனை பன்றோமா? என்னோட சொந்த விருப்பங்கள் அவரோட வேலையை எந்த வகையில் பாதிக்குமோ? இந்த எண்ணங்களூடே மணி ஏழாயிற்று.
நிகிதாவிர்கு உதவியாக டைனிங் டேபிளை ஒழுங்கு படுத்தினாள்.சந்தீப் மெயின் கதவின் சாவி துவாரத்தில் சாவியிடும் சத்தம் அவன் வருகையை அவளுக்கு சொன்னது.
என்றும் இல்லாத குதூகலத்துடன் சின்ன விசிலடித்த படியே ஹாலில் நுழைந்தான் லெதர் பேக், பைலை ஷோபாவில் ஸ்டெய்லாக வீசியபடியே கிச்சன் பக்கமாக துள்ளலோடு வந்தான்.
ம்ம்ம்ம் .... நல்ல வாசனை சோ இன்னிக்கி நல்ல விருந்துதான் ஒரு சின்ன குழந்தையின் குதூகலத்தோடு சுதிர்தாவை ஆதரவோடு அனைத்தான் ,மெல்ல அவள் வாசனை நுகர்ந்த படியே கழுத்து உதடு என முன்னேறி அவளது வலது கன்னத்தில் முத்தமிட்டான்.
என்னை விடுங்க ,சின்ன விசும்பலோடு அவனை உதறினாள் .என்ன ஆச்சு இவளுக்கு? எப்பொதும் இல்லாத ஓர் ஊடல் இன்று மட்டும்!
சந்தீப் அவளை மெல்ல விடுவித்து சின்ன அதிர்ச்சியோடு
ஹேய் சாரி கண்ணம்மா, நீ ஏதோ அப்செட்டா இருக்கே, இருந்தாலும் ஏதோ சொல்ல நெனக்கிரே ப்ளீஸ் சொல்லும்மா.
அவள் மவுனத்தை நீட்டித்தாள் . அவளை ஆதரவாக அனைத்து அவளின் பூமுகத்தை தன் சுட்டு விரலால் உயர்த்திய அவன் கரங்களில் இரண்டு மூன்று கண்ணீர் துளிகள்.
ஹேய் ரியலி சாரிம்மா இன்னிக்கி ஆபிஸ்ல கொஞ்சம் பிசி தட்ஸ்ஒய் ஆம் லேட்
இல்லங்க ,அது இல்ல பிராப்ளம் ... நான் என்ன சொல்ல வர்ரேன்னா....

ம்.. என்ன சொல்ல வர்ரேன்னா
காலையிலேயிலெயெ உங்கிட்ட பேசிட்டு என்கிட்டேயும் ஈஸ்வர் பேசினார்
ஓகே அதுக்கு முன்னால ஒனக்கு ஒரு குட் நியூஸ் எனக்கு புரமோஷன் கெடச்சிருக்கு . இன்னியிலேர்ந்து நான் ஜி.எம். என்னோட அமெரிக்கன் பாஸ் அவரோட துணை நிருவனங்களில் ஒன்னுல என்ன பாட்னரா சேர்த்துகிட்டார் .சுதிக்கு ஆச்சரியம் அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை . அவன் தோள் சாய்ந்து அவள் அதரங்களால் அவனை ஈரபடுத்தினாள்
டேய் சுதி என்னோட இந்த முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் உண்மையாகவே யாருக்கு பொறுப்பு தெரியுமா? நீ இல்லாம எனக்கு எந்த புரொமோஷனும் இல்ல!
"ஏன் முடியாது " மெல்லிய குரலில் அவனுள் நோக்கினாள்.
ஒனக்கு தெரியுமா ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கா! அந்த வகையில் நான் குடும்பத்தை பற்றி எந்த கவலையும் வைக்காமல் எல்லாத்தையும் நீயே ஈசியா ஹேண்டில் பன்னிடுற.. என்னுடைய முழு முன்னேற்றமும் உன்னை சார்ந்தே அமைகிறது .வீட்டுக்கு வந்துட்டா சில சமயம் என்னோட அப்பாயின்மெண்டெல்லாம் மறந்துடுவேன். நீ மட்டும் என்ன சரியா வழி நடத்தலன்னா எனக்கு ஏது இந்த புரமோஷன்?

மாலனை பாத்தியா ரியல் எஸ்ட்டேட் பிசினெஸ் பன்றார். அவரோட வைப் வீட்டுல இருக்கிறதே இல்ல.எவ்ளோ போராடுரார், பிசினெஸ் முடிச்சி வீட்டுக்கு வந்தா வீட்டு வேலைகள். ஹேமா மட்டும் பொருப்பா இருந்திருந்தா அவர் எவ்ளோ சந்தோழப்படுவார். நானே பல முறை சொல்லிட்டேன் வீட்டு வேலைக்கி ஒரு ஆள் வச்சுக்கோங்கன்னு, பாவம் மனுஷன் ரொம்ப செரம படுரார். சுதியை தன்னருகே இழுத்து அவள் கண்களில் தன்னுருவம் பார்த்தான். பாத்தியா நான் மட்டும் இந்த உலகத்தில் எவ்ளோ ஆசீர்வதிக்க பட்ட சென்மம்! மென்மையாக அவள் காதினுல் கிசுகிசுத்தான்.
திடீரென்று அவள் எண்ணங்களிலிருந்து விடுதலையானாள் , அவன் கையிலிருந்த ரோஜாஅவள் கையினுள் பரிமாரியது.
அந்த ரோஜாவின் சுகந்தம் அவளை என்னவோ செய்ததது.
ஹேய் சுதி இட்ஸ் டூ லேட் ரொம்ப பசிக்குதும்மா.
அவனின் சிரிய தொப்பயில் செல்லமாக தாளமிட்டாள்.
எங்கே நம்ம கண்மணிகள் ஹால்ல நான் அவங்கள பாக்கலையே
லஞ்ச் முடிச்ச உடனே தூங்கிட்டாங்க இன்னும் எழுந்திரிக்கல , நான் போய் எழுப்புறேன்
ஹேய் நீ எழுப்ப வேணாம் நிர்தா எழுப்பட்டும்
நீ மெய்டு இல்ல
என்னோட லைலா..!

Receomand this post to other reades :