...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Monday, November 28, 2005

காதல்..





எப்போது பிறந்தது?
மொட்டு மலரும் கணம்
இதழ் விரியும் அந்த ஷணம்
உள்ளத்தில் ஓர் ஆனந்தம்
எனக்காக அவளும்
அவளுக்காக நானும்
என்னை நேசிக்கும்
என்னை நினைக்கும்
ஓர் ஜீவன் - காதல்
தந்தை பாசம் கடமை
உந்தன் பாசம் கரிசனம்
இதுதான் காதலா?
காதலில் காத்திருத்தல்
காத்திருத்தல் காவியம்
காவியம் கண்ணே நீ!
காதல் பருவ மாற்றமா?
உள்ளத்து உருவ மாற்றமா?
வசந்தத்தின் வழி தோற்றமா?
எனக்குள்ளும் காதலா?
எனக்கும் தெரியாமலா?
உன்னை பார்த்த நாள் முதல்
காணவில்லை இதயம்
திருடிய பெண் நீயே
இதயம் இன்றி வாழும் உயிரினம் ஏது?
நான் மட்டும் வாழ்வது எப்படி?
என் உடம்பில் வெறும் குருதி
மட்டும் ஓடி இருந்தால்
என்றோ நான் இறந்து இருப்பேன்
உன் நினைவுகள் கலந்த உதிரமல்லவா
ஓடுகின்றது- எங்ஙனம்
நான் மட்டும் இறப்பேன்
காதலிக்கிறேன் என்று சொல்
நேரில் கூட வேண்டாம்
என் கனவிலாவது?
கனவுகள் சுகம்-என் காதலும் சுகம்!

Receomand this post to other reades :

0 Comments:

Post a Comment

<< Home