...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Sunday, November 27, 2005

தேடி வந்த சாவி!

வழக்கம் போல அன்றும் வீட்டினை பூட்டிகொண்டு அலுவலகம் செல்லும் முன் காலணியை அணிகையில் எனது சாவி கொத்தினை அங்கேயே தவற விட்டு விட்டேன். அலுவலக வாயிலை அடைந்துவிட்டேன்.என் கைத்தொலை பேசிக்கு ஓர் குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது."உங்களுடைய சாவியை எங்கேனும் தவற விட்டீர்களா"
உடனே எனது பேண்ட் பாக்கெட்டையும் தோல்பையயும் துழாவினேன். சாவி கொத்தினை காணவில்லை.
செய்தி சுமந்து வந்த எண் எனக்கு அறிமுகம் ஆகாத எண். என் வீட்டிற்கு மேல் வீட்டில் வசிக்கும் தன் நண்பரை பார்க்க வந்த அந்த சீன இளைஞர் என் சாவி கொத்தை பார்த்து விட்டு எனக்கு தகவல் கொடுத்துள்ளார்.பின் குறிப்பிட்ட பேருந்து நிலையத்தில் காத்து இருப்பதாக சொன்னார்.
அவருக்கு நன்றியினை தெரிவித்து சாவிகொத்தினை பெற்றுகொன்டேன்.
எப்போதும் அலுவலகத்துக்கு கொஞ்சம் முன்கூட்டியே செல்வேன்.எனவே அலுவலக சாவி என்னிடம் தான் இருக்கும். நல்லவேளையாக நான் யாரையும் காக்க வைக்க வில்லை. எப்படியோ என்னுடைய சாவி என்னிடமே வந்து விட்டது. ( நல்ல காலம் என்னுடைய பெயரும் கைதொலைபேசி எண்ணும் பொறித்த பிளாஸ்டிக் பட்டையை சாவி கொத்துடன் இணைத்து இருந்தேன்)

Receomand this post to other reades :

15 Comments:

At 3:29 PM, Blogger பரஞ்சோதி said...

செயக்குமார்,

மிகவும் பயனுள்ள தகவல், நானும் கடைபிடிக்க தொடங்குகிறேன்.

இதே போன்று சின்னஞ்சிறு குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போதும் அவர்கள் பையில் நம்ம தொலைபேசி எண் கொடுத்து வைப்பது நல்லது.

 
At 3:47 PM, Blogger சிங். செயகுமார். said...

சந்தோஷம் நண்பர் பரஞ்சோதி அவர்களே "மிகவும் பயனுள்ள தகவல், நானும் கடைபிடிக்க தொடங்குகிறேன்.

இதே போன்று சின்னஞ்சிறு குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போதும் அவர்கள் பையில் நம்ம தொலைபேசி எண் கொடுத்து வைப்பது நல்லது.".எனக்கு அதிர்ச்சியும் சந்தோஷமும் அளித்த நிகழ்வு

 
At 5:07 PM, Blogger சிவா said...

செயகுமார்! நல்ல பயனுள்ள தகவல். நானும் கீ செயினில் செய்துவிடுகிறேன்.

 
At 5:24 PM, Blogger சிங். செயகுமார். said...

நல்லது சிவா . சீக்கிரம் செஞ்சு வச்சுக்கோங்க

 
At 6:37 PM, Blogger முத்துகுமரன் said...

நல்லது.நல்லது நானும் அது மாதிரி செய்கிறேன். ஆனா பாருங்க இந்த மறதி எனக்கு ரெம்ப அதிகம். எந்தப் பொருளையும் அதற்குரிய இடத்தில் வைக்க மாட்டேன். இன்னொன்று கண்ணுக்கு முன்னாடி இருக்கிறது கூட தெரியாம மத்த இடங்கள்ல தேடிக்கிட்டு இருப்பேன்....

கண்ணை தொறந்து கிட்டே கனவு காண்ற ஆளுன்னு எல்லோரும் கிண்டலடிப்பாங்க.

ஆமாம் நீங்க இப்ப எங்க இருக்கீங்க.....

 
At 7:28 PM, Blogger சிங். செயகுமார். said...

முத்து குமரன்! நல்லது மறதி உள்ள நீங்க நிச்சயம் இதையும் செய்து பார்க்கலாமே!.
நான் எங்கே இருக்கேன்? என்னோட வலைதள முகவரியே உங்களுக்கு சொல்லலவில்லையா?

 
At 7:28 PM, Blogger சிங். செயகுமார். said...

முத்து குமரன்! நல்லது மறதி உள்ள நீங்க நிச்சயம் இதையும் செய்து பார்க்கலாமே!.
நான் எங்கே இருக்கேன்? என்னோட வலைதள முகவரியே உங்களுக்கு சொல்லலவில்லையா?

 
At 7:36 PM, Blogger முத்துகுமரன் said...

புஷ்பவனத்துல ஏது சீனாக்காரன்னு கொழம்பிட்டேன்.....

 
At 9:06 PM, Blogger சிங். செயகுமார். said...

பொறந்த ஊரும் போய் சேரும் இடமும் புஷ்பவனம் தான் ! இருக்கிற எடம் தான்.................
என்னோட வலைதளம் உங்களுக்கு சொல்லலையா?(முதல் பாதி)

 
At 9:13 AM, Blogger துளசி கோபால் said...

முத்துக்குமரன்,

//இன்னொன்று கண்ணுக்கு முன்னாடி இருக்கிறது கூட தெரியாம மத்த இடங்கள்ல தேடிக்கிட்டு இருப்பேன்....//

இதைத்தான் 'டொமெஸ்டிக் ப்ளைண்ட்னஸ்'ன்னு சொல்றது:-))))

 
At 11:45 AM, Blogger முத்துகுமரன் said...

நன்றி துளசி அக்கா. உங்களால் இந்த பெயரை அறிந்து கொண்டேன்....

 
At 12:49 PM, Blogger பரஞ்சோதி said...

மக்கா,

எல்லோரும் கீ செயினில் தொலைபேசி எண் மட்டுமே கொடுங்க.

தப்பி தவறி முழு முகவரியையும் வைத்திருந்தா அப்புறம் லொடுக்கு பாண்டி கதை தான். சாக்கிரதை ஆமாம்.

அப்புறம் நம்ம செயக்குமாரைத் திட்டக்கூடாது ஆமாம்.

 
At 5:00 PM, Blogger சிங். செயகுமார். said...

நம்ம வலைதளம் வந்த துளசி அக்காவுக்கு நன்றிகள்!

 
At 5:02 PM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி பரஞ்சோதி !

 
At 1:55 PM, Blogger சிங். செயகுமார். said...

சந்தோஷம் நண்பரே! நிச்சயம் வருகிறேன் பெமன்!

 

Post a Comment

<< Home