ஹாய் ..மிர்சா..........!
என்னழகே!
என்றோ ஒரு நாள்
நேரில் வருகின்றேன்......
உன்
வெட்டிய நகத்துளி
வீசிய காகிதம்
வாழ்ந்த பொம்மை
உதிர்ந்த கேசம்
இதோடு
என்
எழுதிய காகிதம்
இடம் பெறாத வார்த்தைகள்
கடன் கேட்டு
வாங்கிய கடிதம்
நழுவிய தபால்காரன்
உடன் இருந்தோர்
உயர்ந்த செயல்
நண்பர்கள் என்றெண்ணி
நாசமாய் போனாலும்
உறவினர்கள் ......?
வேண்டாம் கண்ணே!
கடிதம் எழுத மாட்டேன்
கண்ணோடு கண் சேரும்
கண நேரம் போதும்
காலமெல்லாம்
காத்திருப்பேன்.
காதலோடு.............!
Receomand this post to other reades :
8 Comments:
ரொம்ப முத்தி போச்சா :-) ( சீரியசா எடுத்துக்காதீங்க).
எங்களையாவது வாழ விடுங்களேன்! ( சீரியசா எடுத்துக்காதீங்க)
அட இந்தக் கவிதைக்கு ஏன் சானியா மிர்சா புகைப்படம் போட்டீங்க..? சானியா மிர்சாவை லவ் பண்றீங்க போலிருக்கு.?
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
ஆஹாஹா. தலிவரே! சானியாவ நான் லவ் பண்ணலாம். என்னை.................
//காலமெல்லாம்
காத்திருப்பேன்.
காதலோடு.............! //
செயகுமார்
வணிக பத்திரிக்கைகள் போல் - பிரபலம் ஆக வேண்டும் என்ற உந்துதலீல் எதையாவது எழுதிகொண்டே இருந்தீர்களானால் உங்கள் பார்வை விரிவடையாது. உங்கள் உழைப்பை, திறனை விரயமாக்காதீர்கள்.
காலம் கழித்து பார்த்தாலும் உயிர்ப்போடு இருக்கும் கவிதைகளை எழுதுங்கள்.
விரைவில் உங்களிடம் மாற்றம் தென்படும் என்றூ நம்புகிறேன்
அன்புடன்
முத்துகுமரன்
நன்றி நண்பரே ஆரம்ப கட்ட பதிவுகள் ,இவை , நீங்கள் சொவதும் நியாயம்தான்!
சானியா மிர்சா இந்தியாவின் இன்றைய மங்கை. அவரை விரும்பாத இந்தியர் யாராய் இருக்க முடியும்! அவர் விளையாட்டில் இன்னும் புகழ் பெற்று இந்தியத் திருநாட்டின் பெருமையை உலகேற்ற வேண்டும்.
ராகவன் சார் வணக்கம் வாங்க! நீங்களும் சானியா விரும்பியா சந்தோஷம்!.
Post a Comment
<< Home