எனக்கும் கிடைக்குமா? . ப்ளீஸ் ...!
எழுந்த காலையில்
இத்தனை சிரமமா?
விழுந்த பார்வையில்
என் மனைவி!
காப்பி கேட்கலாம்…
சர்க்கரை இல்லாமல்
சாய தண்ணீர் எதற்ககு?
தேக ஆரோக்கியம்
போதவில்லை
தண்ணீர் குடியுங்கள்
காலையில் நடை பயணம்
மூளைக்கு சுருசுருப்பு
காப்பி கொடு
கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து
என் தாலி பாக்கியம்
உங்கள் கண் உள்ள வரை
சர்க்கரை வேண்டாம்!
சந்தோஷம் வேண்டும்!
நேரங்கள் ஆக
நிறைய தொந்தரவு
பஞ்சாயத்துக்காரன்
பட்டியல் போட்டு
எட்டணா எழவும்
பொறாதபட்ட மரத்தை
வெட்டியதால்
எட்டு மணிக்கே
கிளம்பினேன்
வாது வழக்கு
வழி சேர்க்க
ஊர் பெரியவர்
உறவு தலைவர்
தன்னிலை விளக்கம்
தலைமை பொறுப்பு
ஒரு பக்கம் தீர்ப்பு
ஒரு பக்கம் தண்டனை
தண்டனைகாரன் கோபம்
என்தலையில்
இறங்கிய வேகம்
மயங்கிய மாலைபொழுதில்
மாதுக்கள்சூழ்ந்து நிற்க
நான் எங்கே?
என்மனைவி எங்கே?
உடம்பெல்லாம் வலிக்கின்றதே!
ஊனெல்லாம் இழுக்கின்றதே!
மீண்டும் காப்பி.............
சுண்ட காய்ச்சியபாலில்
துண்டு சர்க்கரையோடு
வாழும் நாளில்
வகையாய் சாப்பாடு
தொகையாய்செழித்த வாழ்க்கை.........
சந்தோஷம்...........
வேண்டாம் எனக்கு!
வெறும் செல்வங்கள்
நிறமாய் மாறும் சொந்தங்கள்.....
வேண்டாம்!
ஒரு திருவோடு
இரு வீடு சோறு
மதிய களைப்புக்கு
மர நிழல்
இரவு நேர பிளாட்பாம்
இதெல்லாம் வேண்டும்
எனக்கும் கிடைக்குமா?
பிளீஸ்.....!
0 Comments:
Post a Comment
<< Home