...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Friday, November 11, 2005

ஒற்றை புன்னகை!





உந்தன் ஒற்றை புன்னகை!
எந்தன் இதயமெங்கும் மின்னலே!
எனக்குள்ளும் ஓர் கர்வம்!
பின்னே எத்தனை நாள்
உன் பார்வை என் மேல் விழ
ஏழு மணிக்கு எழும் நான்
எழும் ஞாயிறும் எனக்கு பின்னே
அழுக்கு பேண்ட் பழுப்பேறிய சட்டை
வெளுத்து கட்ட
நாளும் ஓர் சலவை கட்டி
வருஷ கணக்கில் வழிக்கா தாடிக்கு
வாரம் பத்து ரூபாய் வரி
கரித்துண்டும் கை விரலும்
கோல்கேட் சுவைகண்டு
எண்ணெயும் கிரேஸும் காணாத
என் சைக்கிள்
வண்ணங்களோடு வகையாய்
தினமும் குளியல்
உந்தன் கூந்தல் அழகுக்கு
என் அப்பா சட்டை பையில்
காசெடுத்து
உயர்வகை தைலம்!

பார் பெண்ணே இது அழகா?

என் உழைப்பில் நான் வாங்க
இன்றோடு நல்ல வேலை
நாளை எப்படியோ
நல்லவிலை கொடுத்து
நிச்சயம் தைலம் உனக்கு
உந்தன் ஒற்றை புன்னகைக்கே
என்னுள் எத்துனை மாற்றம்!
என்னோடு கலந்து விடு
மண்ணோடு சேறும் காலம் வரை
கண்ணில் இமை போல
கரிசனமாய் காத்திடுவேன்
ஊர் கழனியில்
ஊறுகாய் அளவு விற்று
நானும் நீயும்
நாளொரு மேனியும்
பொழுதொரு நடையுமாய்
நாடெல்லாம் சுற்றி
வீடு பேறு காண்போம்!
கார் காலம் வந்தால்
கம்பளி போர்த்தி
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
உயர் வகை உலகம் செய்வோம்
பைந்தமிழே பார்த்தாயா!-உன்
ஒற்றை புன்னகைக்கே
என்னுள் எத்துனை மாற்றம்
கண்ணே கார் குழலே
வேண்டாம் கண்ணாம்பூச்சி
பொன்வாய் திறவாய்
போவோமா ஊர்கோலம்....

Receomand this post to other reades :

6 Comments:

At 8:32 AM, Blogger சினேகிதி said...

kavithai nalla iruku sing.

 
At 5:24 PM, Blogger சிங். செயகுமார். said...

சந்தோஷம் ! நன்றி சினேகிதி.

 
At 11:04 AM, Blogger Hari said...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி,
தற்பொழுதுதான் உங்களின் வலைதளம் பார்வையிட்டேன், அருமையாக உள்ளது. ஊர் புஷ்பவனமோ?. புஷ்பவனம் குப்புசாமி போல ஓர் புஷ்பவனம் செயகுமார் உருவாக வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,

எதிரி
(சொல்லி அடிப்பேன்)

 
At 10:24 PM, Blogger சிங். செயகுமார். said...

உங்கள் நல்வாக்கு நனவாககட்டும் நண்பரே .(மன்னிக்கவும் நீங்கள் எதிரி அல்லவா?)
நம்ம வலைபக்கம் கை நனைத்த எதிரிக்கும் நன்றிகள்.அடிக்கடி இந்த பக்கம் வாங்க!

 
At 7:57 PM, Blogger சத்தியா said...

அவளின் ஒற்றைப் புன்னகைக்கே இவ்வளவு மாற்றமா? ம்... இந்தக்
காதல் வந்தால் இப்படித்தான்....

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

 
At 11:43 AM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் சத்தியா நலம்தானே! வலைதள வருகைக்கு நன்றி! அப்புறம் ஏதாச்சும் சிக்குமான்னு நானும் பாத்தேன் .ம்ம்கூம் ஒன்னும் நடக்கிற மாதிரி இல்லை. கடவுள் விட்ட வழி!

 

Post a Comment

<< Home