அந்நியன் அவதரித்தால் ஒழிய...
எனது கால ஓட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டு. அரசினர் மருத்துவமணையில்
தெரிந்தவர் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அதே சமயம் என் கண்ணெதிரே நடந்த நிகழ்வு.
30 வயது மதிக்கதக்க ஆடவர் வீட்டில் ஏதோ பிரச்சனை. அதன் காரணமாக வயல் சாகுபடிக்கு வைத்திருந்த பூச்சிமருந்தை அருந்திவிட்டார். வயிற்றில் இருந்த விஷம் முழுவதும் சுத்தம் செய்தபின் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார்.
இருப்பினும் இந்த வேளையில் வெளியிலிருந்து பிராணவாயு செலுத்தினால் சுகம் என தனியே ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போதும் நன்றாகதான்இருந்தார். நான் இந்த நிகழ்வுகளை கவனித்தேன்.பொதுவாக பிறாணவாயு நேரிடையாகஉடலுக்குள் செலுத்தமாட்டார்கள்.நீர் நிறைந்த பாட்டிலின் வழியேதான் செல்லும்.ஏனெனில் பிறாணவாயு செலுத்தபடும் ஏற்ற இறக்கங்களை வெளிவரும் நீர் குமிழி மூலம் அறியலாம். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த வாயு பரிமாற்றம் பின் மித வேகத்தில் செலுத்தபட்டது. நான் யாரும் அறியாவண்ணம் அந்த பிறாண வாயு கலணை அசைத்துப்பார்த்தேன்.மிகவும் லேசான எடையே இருந்தது .சிறிது நேரத்தில் அந்த நபருக்கு மூச்சுதிணறல் வந்தது.எனக்கோ மருத்துவதை ஒன்றும் தெரியாது.இருந்தும் இந்தசூழ்நிலையை மனதில் கொண்டு கண்ணில் பட்ட தாதியை அழைத்து விவரம் சொன்னேன். தாதியும் பார்த்து விட்டு மருத்துவரிடம் தகவல் சொன்னார். ஆனால் சம்மந்தபட்டவரை கண்டு கொள்ளவே இல்லை.
மீண்டும் நான் அந்த வாயு பறிமாற்றத்தை கவணித்தேன் . நீர் குமிழிகள் குறைந்து சில மணிகளில் என் கண்ணெதிரே அநியாயமாக ஓர் உயிர் பரிக்கப்பட்டது.மீண்டும் தாதி பெண்ணிடம் என் கருத்தினை சொன்னேன். விழி அகல பார்த்து ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அந்த மனிதரின் உடல் அகற்ற பட்டது . உடன் இருந்தோரும் சென்று விட்டனர். சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவர் என்னிடம் வந்து அவரின் அறைக்கு அழைத்தார் . இத்தனைக்கும் இறந்த நபர்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானோ சிறு வயதுக்காரன் . இருந்தும் சின்ன தைரியத்தை மனதில் கொண்டு அவரின் அறைக்கு சென்றேன்.சற்றும் எனக்கு புரியாத வகையில்(ஆங்கிலத்தில்) இறந்து போன நபரின் உடல் நிலை மற்றும் சம்பந்த பட்ட விவரங்களை விவரித்தார். எனக்கும் அந்த நபருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை இருந்தும் இந்த விளக்கங்கள் ஏன் என்றேன்.மீண்டும் உடலில் அது கெட்டு போய் விட்டது இது செயல் இழந்து விட்டது என பேச ஆரம்பித்தார்.இப்போது என்னுடைய முறை ,நானும் பேச ஆரம்பித்தேன் நீங்கள் இவ்ளோ பேசறீங்க, அதுவும் எனக்கு பரிட்சயம் இல்லாத நபரைப்பற்றி ,உங்கள் வேலை பளுவின் இடையே என்னை அழைத்ததால் கேட்கின்றேன். என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன் என்றேன் . கேளுங்கள் என்றார். அந்த நபருக்கு ஏற்றப்பட்ட பிறாண வாயு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். இதனுள் ஆக்சிசன் உள்ளது உயிர் காக்கும் வாயு என்றார் . என்னுடைய எண்ணம் அந்த வாயு கலனில் பிறாண வாயு தீர்ந்து விட்டது இதற்கு உஙகள் பதில்? என்னை அகல கண் பார்த்துவிட்டு தன் உதவியாளரை அழைத்து அந்த வாயு கலனை எடுத்து வரச்சொன்னார். ஆனால் நான் குறித்து வைத்திருத்த பழைய கலனின் என்னும் தற்போது கொண்டு வரப்பட்ட கலனின் எண்ணும் மாறுபட்டிருந்தது.
மேலும் என்னால் அங்கு ஒன்றும் செய்யமுடியாது.பாதிக்கப்பட்ட நபர்களே இல்லாத சூழ்நிலையில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான் பெரிய மனிதர்களின் போர்வையில் உள்ளவர்களை அன்று என்னால் எதுவும் செய்ய முடிய வில்லையே. அதற்ககுமேல் அவர்களிடம் பேச விருப்பமின்றி எழுந்து வந்து விட்டேன்.
சாதாரண பாமர மக்கள் ஒன்றும் அறியாத சூழ்நிலையில், விலை மதிக்க முடியாத உயிர் ஒன்று என் கண் எதிரே கண நேரத்தில் பிரிந்தததே!
மனிதர்களை தெய்வமாக போற்றும் மருத்துவ துறையில் சுயநலம் ஒன்றே குறிக்கோளாய் கொண்ட சில புல்லுருவிகளை என்ன செய்ய?
நாளை நமக்கும் இதே சூழ்நிலை வராது என்பது என்ன நிச்சயம்?
மக்களிடையே விழிப்புணர்வு வரும்வரை இவர்கள் தஙகளை மாற்றி கொள்ள முயற்சி மேற்கொள்வார்களோ என்னவோ!
"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது-
இல்லையேல் அந்நியன் அவதரிப்பதைவிட வேறு வழி இல்லையே!”
Receomand this post to other reades :
2 Comments:
வணக்கம் ராணி
வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றிகள்!
அடிக்கடி வந்துட்டு போங்க!
பரிதாபம் தான்.
பிழைத்திருந்தால் இதைவிட கொடுமையை அனுபவித்திருப்பார்.. என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த தாதி மற்றும் மருத்துவருக்கு? காலம் தக்க நேரத்தில் பதில் சொல்லும்.
Post a Comment
<< Home