நான் யாரை கண்ணாலம் கட்டிக்கலாம்?
முத்தான மூன்று நண்பர்கள்
முகேஷ் கணேஷ் சதீஷ்
சின்ன வயசில் சாலையில் கோலி
பம்பரம் பனங்காய் விளையாட்டு
பின்னே பெரிய வயதில்
பல்திசை பயணம்
ஆளுக்கு ஒரு வேலை
நாளும் ஒரு சாதனை
இருந்தும் நண்பர்கள் சந்திப்பு
நாள்தோறும்
வேலையில்லா நாளில்
வெளியூரில் விளையாட்டு
மலையே அழகு
மலையில் மண்டியிட்டு
உளியோடு சண்டிதனம்
உருவம் காண
ஓர் நாள் அல்ல
பருவம் பல கடந்து
யுகங்கள் காணும்
சிற்பம் செய்யும்
கல் தச்சர் கனேஷ்
பெண்கள் அழகு
பேரழகு பெண்ணோடு பொன்னகை
பொன்னகைதானே பெண்களின் சொர்க்கம்
கால் மிஞ்சு கொலுசு முதல்
நெத்தி சுட்டியில் நூறுவகை
தங்கம் தாமிரத்தோடு
மங்கள நகைசெய்யும்
பொற்கொல்லர்
மங்கா புகழ் முகேஷ்
வாய் வார்த்தை
பொய்யா மந்திரம்
ஜீ பூம்பா
கண் முன்னே காணும் பொருள்
மண்ணுள்ளே சென்ற மாயமென்ன
மண் மூடி மண்ணோடு மண்ணாய்
போன சென்மங்கள்
கண் முன்னே காணும் அதிசயம்
பொல்லா வேலை
புண்ணியவான்
சமத்து சதீஷ்
இலையுதிர் காலம்
தொலைதூரமாய் ஓர் நாள் பயணம்
பொழுதெலலாம் கொண்டாட்டம்
இரவோடு இளைப்பாற
அரவம் இல்லா ஆற்றங்கரையில்
அரைகுறை தூக்கம்.
கனேஷ்க்கு காலையிலேயே எண்ணம்
கரு நிறத்தில் கல்லொன்று கண்டானே
வேறென்ன கை வண்ணத்தில்
புன்னகையோடு புது பெண்
நடு ராத்திரியில்
நல்ல பிள்ளையாய்
நண்பர்களோடு மீண்டும் தூக்கம்
நாங்கள் மட்டும் சலைத்தோமா
மீதி இரவில்
கற்சிலைக்கு பொற்கலனோடு புத்தாடையும்
முகேஷின் மகத்தான பணி
புது மண கோலத்தில் நான்
நல்ல தூக்கம் நண்பர்களுக்கு
வல்லவரான சதிஷ்க்கு
சொல்ல முடியா சந்தோஷம்
பின்னே அழகான பெண்
ஆடை அணியோடு
உயிர் மட்டும் இருந்தால்
ஊரில் இல்லை உன் போல் பெண்
வாய் சொல்லும்
கைசொல்லும்
வகையான மந்திரமும்
செதுக்கிய சிலையாள்
இப்பொது செந்தமிழ் செல்வி
சதீஷின் சாமர்த்தியம்
இப்பொ சொல்லுங்கோ
நான் யாரை கண்ணாலம் கட்டிக்கலாம் ?
Receomand this post to other reades :
6 Comments:
மகேஸத்தான்., ஏன்னா கணவந்தான் பெண்ணை அலங்கரித்துப் பார்ப்பாராம்(?!)., உயிர் கொடுத்தவர் தாய்க்கு சமம்., ஆடை கொடுத்தவர் அண்ணனுக்கு சமம். ம்... பழைய கதை., இருந்தாலும் தெரியாதவர்கள் முயன்று பார்க்கலாம்.
சீக்கிரம் போய் கண்ணாலம் முடிங்க.. வீட்டுல சொல்லவா?
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
வலை பதிவுக்கு வந்தமைக்கு நன்றி, நண்பரே அப்டிபோடு
ஆனாலும் உங்க பதில் சரியானதா இல்லைன்னு நெனைக்கிறேன்
தேங்க்ஸ் ஞானியாரே உங்களுக்கு புரியுது !
பொண்ணு முகேஷுக்குதான்.
உயிர் கொடுத்தவர் , உருவம் கொடுத்தவரெல்லாம் தெய்வத்துக்கும் பெற்றோருக்கும் சமம்.
மானத்தை காப்பவந்தான் கணவன்.
வாங்க கீத்ஸ் அக்கா!
என் பார்வையில்!
உருவம் கொடுத்தோன் தந்தை
உடை கொடுத்தோன் உடன்பிறந்தோன்(கல்யாண சீரெல்லாம் யார் செய்வா?)
உயிர் கொடுத்தோன்...அவனே...
அந்த பாக்கியசாலி மாப்பிள்ளை
Post a Comment
<< Home