...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Saturday, November 19, 2005

சிம்பிளாய் தியானம் செய்யலாம் வாங்க!

அன்றாட அலுவல்களில் அனேக நேரங்களில் வேளைபளுவின் ஊடே வெருப்பான எண்ணங்கள்,சோம்பேறி தனங்கள், அதன் விளைவாக வேலையிடத்திலும் வெளி இடங்களிலும் நம் நடை முறையிலுள்ள மாற்றங்களை சீர் செய்ய தியானமும் ஓர் வழிமுறையே!
தியானம்= Balancing our passitive negative thoughts.
எனக்கு தெரிந்த வரையில் சிம்பிளான முறையில் உலகத்தில் விரவியுள்ள அனைவருக்கும் ஏற்ற முறையில் ஓர் தியானம் " சகஜ மார்க்கம்"
சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகின் அனைத்து பாகங்களிலும் அமைந்துள்ள ஓர் அமைப்புதான் "ஸ்ரீ ராம்சந்த்ரா மிஸன்"

உத்த்ர பிரதேசத்தில் அறுபது ஆண்டுக்கு முன் ஸ்ரீராம்சந்த்ரா என்பவரால் தோற்றுவிக்க பட்டு அங்கே இருந்த தலைமையிடம் பின் சென்னைக்கு மாற்றபட்டு சீரோடும் விளம்பரங்கள் இன்றி சிறப்போடும் கட்டணங்கள் இன்றி கனிவோடும் மனித குலத்திற்க்கு ஓர் ம்கத்தான சேவை நிறுவனம்
நங்கு பயிற்சி உள்ள ஒருவரை தலைவராக கொண்ட இந்த அமைப்பு இப்போது பார்த்தசாரதி ராஜகோபாலச்சாரி என்பவரின் தலைமையில் இயங்கி வருகிண்றது
மாஸ்டர் என அழைக்கப்படும் இவரால் நியமிக்க பட்ட பல ஆண்டுகள் தியான பயிற்சியில் தேர்சிபெற்ற பலர் தியானம் செய்வோர்க்கு வழிகாட்டியாக உலகெங்கும் உள்ள்னர்
மாஸ்டரால் நியமிக்கபட்ட அவர்கள் "பெர்செப்டர்" எனவும் தியனம் மேற்கொள்பவரை "அபியாசி" என்றும் அழைப்பர்
மாஸ்டர் 18 மொழி அறிந்த மஹான்

சரி தியானம் எவ்வாறு மேற்கொள்வது?

பெர்செப்டர் என அழைக்கபடும் வழிகாட்டியாளர்களிடம் குறைந்து மூன்று சிட்டிங் மேற்கொள்ள வேண்டும் எவ்வறு தியானம் மேற்கொள்ளலாம் என எல்லா வழி முறையும் ஓர் தோழமையுடன் நமக்கு தோள் கொடுப்பர்.
இந்த அமைப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் மேற்கொள்லும் எளிதான முறையாகும்.
யோகாசனத்திற்க்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.மனதினை ஒருமுக படுத்தும் பயிற்சியே இதனுள் மேற்கொள்ளபடுகின்றது.இந்தியர்களைவிட பலமடங்கு வெளிநாடுகளில் இந்தியர் அல்லாத மற்ற இன மக்கள் இந்த முறையை மேற்கொள்ளுகின்றனர்.
ஞாயிறு தோறும் நடைபெரும் கூட்டு தியானத்தில் எவ்விதபாகு பாடுமின்றி சகோதர தன்மையோடு பழகும் விதம் மனிதற்கு ஓர் மாற்றமளிக்கும்.
அதி காலையில் நம் அன்றாட கடன்களுக்கு பின்னே ஓர் அரை மணி நேரம் அல்லது உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் நம் வீட்டிலோ வெளி இடங்கலிலோ தியானம் மேற்கொள்ளலாம்.

எடுத்த உடனே தியானம் என்பது எவரலும் இயலாத காரியம்.
கண் மூடி அமர்கையில் பல எண்ணங்கள், நினைவுகள் நம்மை ஒரு முக சிந்தனையிளிருந்து சிதறடிக்கும்.
பயிற்சி பழக்கத்தின் மூலமே நாம் நம்மை ஒருமுக படுத்தமுடியும்!
மேலும் வேண்டிய தகவல்கள் இந்த வலைதளத்திலிருந்து நீங்கள் பெற்று கொள்ளலாம் .
நன்றி நண்பர்களே!

Receomand this post to other reades :

0 Comments:

Post a Comment

<< Home