...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Monday, March 06, 2006

வலைப்பதிவர் மாநாடும் துளசி வருகையும்

இதோ வருகின்றேன்! அதோ வருகின்றேன்! என்ற பரபரப்பின் ஊடே ஒரு வழியாக இயக்கத்தின் தலைவி துளசி கடந்த வியாழன் காலை (02.03.2006) சிங்கப்பூர் ஏர்லைன்சில் ட்ரான்ஸ்சிஸ்டில் சிங்கப்பூர் வந்தடைந்தார்.








செராங்கூன் சாலை கேங்ஸ் இரண்டாம் தளத்தில் சிங்கை முரசின் தலைவர் அன்பு வின் சீறிய ஏற்பாட்டில் வலைபதிவர் மாநாடு சரியாக மதியம் ஒரு மணிக்கு துவங்கியது.சிறப்பு விருந்தினர் துளசி ஜெட் லேக்கையும் பொருட்படுத்தாமல் மாநாட்டுக்கு முன்கூட்டியே வந்து சேர்ந்தார். சிங்கை நண்பர்கள் அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி. தம்பதி சகிதமாக இந்திய பயணம் மேற்கொண்ட தலைவி தனி ஆளாய் சிங்கை வந்து சேர்ந்ததுதான் .
சென்னை சுற்று பயணத்தின் போது நல்லி ,குமரனை நலம் விசாரிக்க செல்கிறேன் என்று லட்சங்களை காலி செய்த தலைவி,அதோடு நிற்காமல் பழகிய நண்பர் RMKV ஓனர் .பாவம் அல்பாயுசுல போயிட்டாரு,நல்ல மனுசனுகெல்லாம் இது காலமில்லப்பா.வந்தது வந்துட்டோம்.அந்த கொடுமையும் கொஞ்சம் விசாரிச்சிட்டு வந்துருவோம்னு சொல்லிட்டு நடையை கட்டி இருக்காங்க. கோபால் மாமாவும் சிவனேன்னு கூடவே போயிருக்காரு.
நம்ம அக்காவுக்கு சொல்லவா வேணும், ஏம்ம்பா தம்பி இந்த அம்பதாயிரம் பொடவையாமே , அத இங்க கொஞ்சம் காமிக்கிறது! அதற்குள் துளசியின் வருகை மேனெஜரில் காதுக்கு செல்ல பலத்த உபசரிப்பின் ஊடே ,இதெல்லாம் வேண்டாங்கம்மா உங்களுக்கு. எல்லாம் ஜோதிகா கட்டி கசங்கி போன புடவைங்க. உங்களுக்காக –ஸ்பெஷல அருவதினாயிரம் கலர்ல ....... அதற்க்குள் நியூசி-லேர்ந்து கோபால் மாமாவுக்கு அவசர போன் கால் வர மாமா அடுத்த பிளைட்டுலேயே கெளம்பி போயிட்டாரு.

பயண காலங்களில் சில திருமண வைபவங்களில் கலந்து கொண்ட அவர் சென்ற இடங்களெல்லாம் சகோதரி தன் கட் அவுட்களை பார்த்து கண் கலங்கி இருக்கிறார்.என் மேல் மதிப்பு வைத்து இருக்கும் தம்பி தங்கைகளுக்கக என்றும் நன் கடமை பட்டு இருப்பதாக அறிவித்தார்.

மாநாட்டின் சிறப்பு பேச்சாளர் ஆட்டோகிராப் சித்ரா துளசிக்கு என்றும் சளைத்தவரில்லை என்ற ரீதியில் அரங்கமே அதிரும் படியாக கலகல உரையாற்றினார். முன்னனி எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் கல்கியில் புதிய படைப்பான அப்பாவின் மனைவிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக செராங்கூன் சாலையிலுள்ள எல்லா நகைக்கடையும் ஏறி இறங்கியும் திருப்திபடாத சிறப்பு விருந்தினர் கடைசியாக தனது கிரிடிட் கார்டை எடுத்து விருப்பபட்டதை வாங்கி கொள்ளுங்கள் என பர்ஸில் இருந்த சில கார்டுகளை ஜெயந்தியின் கைகளில் திணித்தார். மதிய நேரம் தாண்டிவிட்டது மன்னித்து கொள்ளுங்கள் துளசி என்று எல்லோரையும் சப்பிட அழைத்தார் எம்.கே .குமார்.

நன்பர்களே நம் சகோதரியின் ஆசிய – பசிபிக் பயணத்தின் நோக்கங்களை விரைவில் சகோதரி அறிவிப்பார்.அதன் பொருட்டு மதுரையில் தருமியையும் சென்னையில் மதுமிதா .டோண்டு ராகவன்,பெங்களூரில் இளவஞ்சி,ராகவன் ஆகியோரை சந்தித்து இருக்கிரார். பேச்சுவாக்கில் சில செயல் பாடுகளை சுட்டி காடினார்.

இந்தியாவில் இருந்த காலங்களில் தினத்தாள்கள் ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு பரவசப்பட்டிருக்கிறார். மக்கள் சேவை செய்ய இந்தியாவில் அமிர்தானந்தமாயி போன்ற பெருமான்கள் இருப்பதை கண்டு,தமிழ்மணத்தில் நடக்கும் சின்ன சின்ன சச்சரவுகளை தீர்க்கவே தானும் ஏதேனும் செய்யலாம் என்பதே இந்த பயணத்தின் நோக்கமாக தெரிகின்றது. பாரதிராஜாவின் என் இனிய தமிழ் மக்களே என்றழைப்பது போல சகோதரி நம்மையெல்லாம் மக்களே நல்லா இருங்க நீங்கள் கவனித்து இருக்கலாம்.


வியாழன் அன்று அலுவல் நாள் என்பதால் மற்ற நண்பர்கள் தொலை பேசியில் சகோதரியை தொடர்பு கொண்டு தங்கள் இயலாமையை தெரிவித்து கொண்டனர். அன்று இரவே நியூசி விமானம் தயராக இருந்ததால் மாலை மணி 4.30க்கெல்லாம் மாநாடு இனிதே நிறைவு பெற்று பிரியா விடை பெற்றார் நமது சிறப்பு விருந்தினர். இன்னும் சில மாதங்களில் மீண்டும் சுற்று பயணம் இருப்பதாக அறிகின்றோம்.



சிங்கை நண்பர்கள் சார்பில் சிங்.செயகுமார்.

Receomand this post to other reades :

4 Comments:

At 10:02 AM, Blogger ilavanji said...

//இதெல்லம் வேண்டாங்கம்மா உங்களுக்கு. எல்லாம் ஜோதிகா கட்டி கசங்கி போன புடவைங்க. உங்களுக்காக –ஸ்பெஷல அருவதினாயிரம் கலர்ல ....... //

:))))))))))

 
At 4:22 PM, Blogger சிங். செயகுமார். said...

வருகைக்கும் தருகைக்கும் நன்றி நண்பரே இளவஞ்சி!

 
At 5:29 AM, Blogger துளசி கோபால் said...

உங்களுக்கு 100 ஆயுசு( போனதெல்லாம் போக!) இப்பத்தான் குமரனுக்கு 'உங்களைப்பார்த்தா ஏன் கவிஞர் போல இல்லை'ன்னு
பதில் சொல்லிட்டு வந்தேன்.

ப்திவைப் படிச்சேன். ஆனா 'ஊட்ட'தான் முடியாம ஓடவேண்டியதாப் போச்சு. வீட்டுக்கு வந்தோடனே
கணினியைப் புடிச்சுக்கமுடியுமா? கொஞ்சம் வீட்டு வேலை செய்யறாப்புலே பாவனையாவ்து செய்யணுமுல்லே?:-)

 
At 5:37 AM, Blogger சிங். செயகுமார். said...

பரவாயில்லை டீச்சர் அடுத்தமாசம்தான் மறுபடியும் பயணம் வச்சு இருகீங்களே .அப்போ சாவ காசமா பேசுவோம்!

 

Post a Comment

<< Home