காதலர்தினம்!
ஒரு பதினைந்த்து நாள் இருக்குமா?
ஒரே பேருந்தில் பயணம்
நாம் பார்க்க ஆரம்பித்து
அருகருகே சில நேரம் இருக்கையில்
அழகான புன்னகை
அதுதானே நம் அறிமுகம்
சில்லரை இல்லையா?
சீக்கிரம் கீழே இறங்கு!
சனியனே ஏன் உசிர வாங்குற?
கண்டக்டரின் கணிவான பேச்சின் ஊடே
பல்லை காட்டி நானும் பரவாயில்லை
உனக்கும் டிக்கட் ஏற்கனவே எடுத்திட்டேன்!
நன்றியுடன் ஓர் பார்வை!
நாலு வார்த்தை சொல்ல
உனக்கு நா எழுகின்றது
நடுவில் இரண்டு காளைகள்
நந்தியாய் நிற்க!
எழுந்த வார்த்தை எங்கே
அவர்கள் வசம் அடைந்து விடுமோ?
உன் அச்சம் எனக்கு புரிகிறது
படிகட்டில் நிற்கும் போது
பாசமாய் என் புத்தகம் கேட்கிறாய்
படியில் பயணம்
நொடிப்பொழுதில் மரணம்
உன் பார்வையாலே
எனை உள்ளே அழைக்கிறாய்!
எனக்கும் உள்ளே வர ஆசைதான்!
எங்கே இந்த கூட்ட நெரிசலில்
என் கால் மாற்ற இடம் இல்லையே
உனக்குள்ளும் காதல் இருக்கிறது!
எனக்குள்ளும் காதல் இருக்கிறது!
என் காதல் சொல்ல
என் உள்ளம் நடுங்குகிறதே!
இன்று காதலர்தினம்!
இரவெல்லாம் விழித்து
எழுதினேன் ஓர் கடிதம்!
"காணவில்லை இதயம்
திருடிய பெண் நீயே
தந்துவிடு என்னை
இதயமின்றி வாழும் உயிரினம்
எங்கும் இல்லை உலகில்
நான் மட்டும் வாழ்வதெப்படி?
என் உடம்பில் வெறும்
குருதி மட்டும் ஓடி இருந்தால்
என்றோ நான் இறந்திருப்பேன்
உன் நினைவுகள் கலந்த
உதிரமல்லவா ஓடுகின்றது!
எங்ஙனம் நான் இறப்பேன்?
உதடோடு உதடு உரசும்
சரச காதல் வேண்டாம்
கட்டியணைத்து கவி பாடும்
சாகச காதல் வேண்டாம்
கண்ணோடு கண் சேரும்
கணிவான காதல் வேண்டும்
உள்ளங்கள் பரிமாறும்
உன்னத காதல் வேண்டும்
என் காதலுக்கு "ஆம்" எனில்
உன் மணமேடைக்கு மன்னவன்
என் காதலுக்கு "இல்லை" எனில்
உன் நினைவுகளோடு ஒரு
ஜீவனுக்கு சமாதி எழுத பட்டிருக்கும்
என்றும் உன் அன்பில் தோய்ந்த
சிங்.செயகுமார்"
எழுதிய கடிதம் என் கையில்
உன் கரம் சேர்க்க
உன் நோக்கி வருகின்றேன்
என் இதயத்தின் எதிர்பார்ப்பு
விண்ணில் ஏவிய விண்கலமாய்
உன் பதில் நோக்கி!
Receomand this post to other reades :
16 Comments:
ஓடையில் ஓடும் நீரில்
உள்ள கூழாங்கற்களில்
படர்ந்த பாசிபோல
பசுமையான நினைவுகள்
படர்ந்த கவிதை !
ஓடையில் ஓடும் நீரில்
உள்ள கூழாங்கற்களில்
படர்ந்த பாசிபோல
பசுமையான நினைவுகள்
படர்ந்த கவிதை !
நினைவுகள் நெஞ்சில்
நீங்கா பாசியாய்
சந்தோஷம் நண்பரே நவீன்!
//உதடோடு உதடு உரசும்
சரச காதல் வேண்டாம்
கட்டியணைத்து கவி பாடும்
சாகச காதல் வேண்டாம்
கண்ணோடு கண் சேரும்
கணிவான காதல் வேண்டும்//
அன்று பார்த்த குணா திரைப்படத்தில் உதட்டு முத்தத்தைத் தட்டிவிடும்போதும், நேற்று பார்த்த இதயத்திருடன் திரைப்படத்தில் வரும் காதலும் (கதாநாயகன் - நாயகியின் காதல் இல்லை, அது நாய் வகை. கதாநாயகனின் வளர்ப்புப் பெற்றோரின் காதல்), இன்று படித்த இந்தக் கவிதையும் எனக்குள் எழுப்பும் அதே கேள்வி "இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?".
உதட்டு முத்தம், உடும்புப்பிடி தழுவல், ஊர்சுற்ற பைக் என்று இலக்கணமாகிப் போன கடற்கரைக் காட்சிகளை காதல் என்று சொல்லித் திரியும் மனமத-ரதிகளுக்கு நடுவே இதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல வைரமுத்துவின் கவிதைகள் (திரைப்பாடல்கள் அல்ல) போல், தமிழுலகில் பலருண்டு என்று நிரூபித்துவிட்டீர்கள்.
-ஞானசேகர்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்பரே ஞானசேகர்!
நல்ல கவிதை. அனுபவம் பேசுகிறதோ?
வாழ்த்துக்கு நன்றி அனு!
அப்பிடியெல்லாம் இல்லைங்க!சொன்னா நம்புங்க!
வாழ்த்துக்கும் வந்தமர்வுக்கும் நன்றி சிவன் மலை!
வணக்கம் உஷா அக்கா (!).உங்கள் வாழ்த்துக்கும் வந்தமர்வுக்கும் நன்றிகள்! நிச்சயமா கவிதை எழுதனும்னு உட்கார்ந்த ஒரு வரி கூட வர மாட்டேங்குது! கிராமத்தில் ஊரிய மட்டைதானே நான் .எழுதுவது கவிதையாகி விடுகிறது. உங்கள் பாராட்டு என்னை இன்னும் எழுத தூண்டட்டும்.மற்ற பதிவுகளை பார்த்து விட்டு உங்கள் எண்ணங்களை இடுங்களேன்! வலம் வந்து பலம் சேருங்கள்!
உங்கள் அன்பிலே சிங்காரகுமரன்.
Ithu Singapore experiences aa? or Indian experience aa?
:)))
"அனுபவமே கவிதையாக " ---- உங்கள் கூற்று படி பார்த்தால் படியில் பயணம் எங்கே சாத்தியம் என்று உங்களுக்கு தெரியும்.வருகைக்கு நன்றி பாலு மணிமாறன்!
தம்பி சிங்கு,
என்ன இதெல்லாம்.. காதல் கடுதாசிய இப்படியா உலகம்பூரா தண்டோரா போடுவாங்க..
இப்படி ஊருக்கே சொல்லி வச்சிருக்கியே.. அம்மா அப்பா கேட்ட என்னா சொல்றது.. அட நாளைக்கு கட்டிக்கப்போற பொன்னு பாத்துச்சின்னா என்னா நினைப்பா..
பார்த்து எழுது தம்பி..
:)
ஆனாலும்
//உன் நினைவுகள் கலந்த
உதிரமல்லவா ஓடுகின்றது!
எங்ஙனம் நான் இறப்பேன்?//
இதெல்லாம் நல்லாதான் இருக்கு.. :)
அன்புடன்
கீதா
எளிமையான கவிதை. கவிதைகள் புரியாததாய்த் தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
- குப்புசாமி செல்லமுத்து
நன்றி நன்பரே குப்புசாமி செல்லமுத்து!
செயகுமார்,
நிறைய பேரை காதலுக்கு உந்தித்தள்ளுவதால் தான் அதற்குப் பேருந்து என்று பெயரா??
கவிதை நல்லாருக்கு - இப்பதான் வாசிச்சேன்!
அன்புடன்,
அருள்.
சிங்,
அடெடா,
//உள்ளங்கள் பரிமாறும்
உன்னத காதல் வேண்டும்//
அருமையான பிரார்த்தனை. எந்த வாழ்வுக் காயங்களும் வாங்காமல் உங்களின் வாழ்விலே எல்லாம் பெற்று வாழ வாழ்த்துக்கள் ;-)
அன்புடன்,
தெகா.
Post a Comment
<< Home