...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Tuesday, February 07, 2006

ஓ! இதுதான் காதலா!


கண்டேன் அந்த காட்சி
கன்னியும் காளையும்
கைகோர்த்து மெய்யோடு மெய்யாய்
கண்கள் மட்டும்
கடும் நித்திரை போல
சுற்றம் மறந்து
கற்றதெல்லாம் அதுதான்
காண்பீர் மக்களே
காட்சிதனை கடை விரித்து
இளம் நெஞ்சமதை
என்னை என்னவோ செய்கிறதே!
அவசர உலகில்
நெரிசலில் நிற்கும் வேலையில்
கட்டணமின்றி காட்சிகள்
நான் மட்டும் இருக்கையில்
விதிபயனென்று விழியிடுகிறேன்
கையோடு மனைவியோ
கூட பொறந்தவளோ இருக்கையில்
கொஞ்சம் மனம் கனக்கிறது
இவர்களுக்கு இதற்கெல்லாம்
வேறு இடம் இல்லையா?
எனக்குள் இருக்கும் நாணம்
எதிரே இருக்கும் ஜோடிக்கு இல்லையே!

ஓ! இதுதான் காதலா!

காதல் வந்தால் சுற்றம் மறக்குமோ!
என் விதி! எனக்கும் அது வாய்க்கலையே!

Receomand this post to other reades :

13 Comments:

At 5:18 PM, Blogger சிவா said...

என்ன சிங்கு! //** இவர்களுக்கு இதற்கெல்லாம்
வேறு இடம் இல்லையா? **// இதெல்லாம் என்ன பிஸ்கோத்து...நம்ம ஊருல மருதமலை போய் பாருங்க. போற வழியெல்லாம்...சே!! காலேஜ் பசங்க/பொண்ணுங்க...இவர்களுக்கு வேற இடமே இல்லையா..நம்ம ஊரே அந்த ஆக்கத்தில் தான் இருக்கு..வெள்ள தோலு மனுசனுகள என்ன சொல்ல..

 
At 5:19 PM, Blogger சிவா said...

ம்...சொல்ல மறந்துட்டேன்..கவிதை நல்லா இருக்கு தம்பி..எளிதா, அழகா எடுத்து எடுத்து விடுற...தொடருங்க

 
At 5:37 PM, Blogger ஜொள்ளுப்பாண்டி said...

அடடா என்ன ஒரு விதி பாருங்க ! மெரீனா பீச்சுக்கு போனா மணலைவிட இவங்கதான் அதிகம் சாமி ! பார்த்துபோங்க வழுக்கிகிழுக்கி விட்டுடப்போகுது!

 
At 5:52 PM, Blogger கைப்புள்ள said...

சிங்கு!
நீங்க யோசிக்கிறதே கவிதையா தானா? மத்தவங்களோட பதிவுல உங்களோட பின்னூட்ட கவிதைங்களைப் பார்த்து மலைச்சு போயிருக்கேன். எப்ப்டிங்க ஆன் தி ஸ்பாட் எழுதறீங்க? ஆனாலும் இந்த சர்தார்ஜிக்கு(சிங்குக்கு) அநியாய தமிழ் புலமைங்க :)- வாழ்த்துகள்.

 
At 6:29 PM, Blogger ஜோ/Joe said...

//என் விதி! எனக்கும் அது வாய்க்கலையே!//
இதுக்குத் தான் இத்தனை புலம்பலா?

 
At 7:58 PM, Blogger குமரன் (Kumaran) said...

இளங்கவி சிங்காரக்குமரா. கலக்குப்பா. சரியாத் தான்யா பட்டம் குடுத்துருக்காங்க....

லேசான பொறாமையுடன்...
குமரன்.

 
At 8:09 PM, Blogger பாலு மணிமாறன் said...

வாவ்... ஒரு சின்னப்பொறி இப்படி தீயாகி எரிகிறதே... வாழ்த்துக்கள் சிங்!

 
At 8:32 PM, Blogger சிங். செயகுமார். said...

மருதமலையிலேயும் இந்த கலாச்சாரம் வந்தாச்சா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி சிவா!

 
At 10:25 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க ஜொள்ளு பாண்டி ,மெரினா பக்கம் போயி ரொம்ப நாளாச்சே! அங்கேயும் அப்பிடிதானா? நமக்கு முன்னேயே குத்தகை எடுத்தாச்சா? வாவ்!

 
At 10:31 PM, Blogger சிங். செயகுமார். said...

கைபுள்ள முதன்முதலா நம்ம ஊட்டு பக்கம் வந்து இருக்கீக! வணக்கம்! நானு சர்தார்ஜியெல்லாம் இல்லிங்கோ. அப்பா பேருல முத ரெண்டு எழுத்துதான் அந்த சிங்.!

 
At 10:32 PM, Blogger சிங். செயகுமார். said...

ஜோ வணக்கம் வாங்கோ! ஆட்டத்துக்கு நீங்களும் வாரியளா?

 
At 10:35 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் ஆன்மீக செம்மல் மற்றும் முன்னாள்.....(சும்மா.தமாசு.) சிவா பதிவு கலக்கலா போயிட்டு இருக்கில்ல!

 
At 10:38 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் பாலுமணிமாறன் .முதன் முதலா நம்ம வீட்டு பக்கம் வந்து இருக்கீக . அடிக்கடி வந்துட்டு போங்க சரணம் ஆரம்பிச்சு குடுத்தீங்க .நான் பாடிகிட்டு இருக்கேன்!

 

Post a Comment

<< Home