...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Thursday, December 08, 2005

இன்னொரு காதல் கதை தொடர்ச்சி - 1

இத படிச்சிட்டு வாங்க


நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும் ! செய்ய முடியுமா?

சொல்லுங்க.

அது .... மணி ஒரு கிருக்கன் .சொன்னத செஞ்சிடுவான்.போன மாசம் கூட அதமாதிரிதான் பைத்தியகாரதனம் பண்ணிட்டான்.
நாளைக்கு நைட்டுக்குள்ள நான் ஊருக்கு போகல்லன்னா ,அப்புறம் அவனை பாக்க முடியாதுன்னு எழுதி இருக்கான்.

(அப்பொழுது டெலிபோன் வசதி இருந்தும் பேசமுடியாத சூழ்நிலை)

அதுக்கு நான் என்ன பண்ணனும்?

போன வாரம் தான் ஊருக்கு போய்ட்டு வந்தேன்.
இந்த வாரமும் போன என்ன ஏதுன்னு கேப்பாங்க!
சிரமம் பாக்காம ஒரு எட்டு எங்க ஊருக்கு பொயி அவனை அழச்சிட்டு வர முடியுமா?

ம் . உங்க ஊரு எதுன்னு சொன்னீங்க ஞாபகம் இல்ல.

புதுகோட்டை.

புது கோட்டை டவுனாஇல்ல அவுட்டரா?

புதுகோட்டையிலேர்ந்து ஒரு ஆபனவர் ட்ராவலிங் ,வேங்கடகுளம்னு ஒரு கிராமம் .

சரி நான் போயி அழச்சிட்டு வர்ரேன்னு வச்சுகோங்க ,அதனால என்ன பிரயோசனம்னு நெனக்கிரீங்க?


அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சா.

அவன் செத்து போன நானும் செத்து போய்டுவேன்.
போய்டனும் .இல்லேன்னா நானும் அவன்கூட எங்கேயாவது போய்டனும்!

அப்போ கல்யானம் பண்ணிக்கிற உத்தேசம் இல்ல?

அய்யோ எனக்கு ஒன்னுமே புரியல,என்ன பன்றதுன்னும் தெரியல!

உங்களுக்கு இன்னிக்கி எதும் அவசர வேல இருக்கா?

(இது ஏதுடா தர்ம சங்கடமா இருக்கு புதுகோட்டைக்கும் நம்ம ஊருக்கும் 200 கிலோமீடர் தனிய இவ்ளோ பெரிய பிரச்சனைக்கு எப்டி அவ்ளோ தூரம் போய்ட்டு வாரது?)

இல்ல போயிட்டு வாரதுல ஒன்னும் சிரமம் இல்ல செலவுக்கு இப்போ கையில ஒன்னும் காசு இல்ல அதான்!
இப்போ என்கிட்ட 100 ரூபாதான் இருக்கு எப்பிடியாவது அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போயிட்டு வங்க . நீங்க வந்தவுடனே உங்களுக்கு பணம் தாரென்.
எப்ப போறீங்க?

ம்ம்ம்ம் .. நாளக்கி காலையில!
சாயங்காலம் கடை பக்கம் தான இருப்பீங்க?

தெரியலையே!

சாயங்காலம் பணம் தாரேன் ,எப்பிடி போகனும்னு அட்ரெஸ் தாரென்.

ம்ம் சரி.

போயிட்டு வர எப்படியும் ஒரு நாளுக்கு மேலாயிடுமே!

நம்ம பசங்க ரெண்டு பேர கூப்புட்டு கிட்டு போனா என்ன?

டேய் நாம நாளக்கி புதுகோட்டை வரையில போயிட்டு வாரோம் ,காலையில 6 மணிக்கு ரெடியா இருங்க . என்ன சொல்றீங்க?

எதுக்குடா?

அத காலையில சொல்ரேனே.

உங்களுக்கு என்ன தண்ணியும் சிகரெட்டும் வாங்கி குடுத்தா போதும்ல, அப்ப ஏன் கேக்குற?
சிங் சும்மா கூப்புட மாட்டான்டா , ஏதோ மாஸ்டர் பிளான் வச்சுருப்பான்.
டேய் ஒரு மண்ணும் இல்லடா.நைட் எங்கேயும் தண்ணி அடிச்சிட்டு பிளாட் ஆயிடாதீங்க

ம்ம் பாக்கலாம்.

சாயங்காலம் அந்த பொண்ணு நம்ம தலிவரு வீட்டுக்கு போறதுக்கு ரூட் போட்ட மேப் , பணம் ஒரு நூரு ரூபா எல்லாம் குடுத்தா. மறு நாள் காலையில நம்மகிட்ட ஒரு 200 ரூபா இருந்துச்சி.
வீட்டுல ஒரு 100 ரூபா கிளப்பிகிட்டு தூங்கி கிட்டு இருந் பசங்கள எழுப்பி பஸ் ஏறி போயிட்டு இருக்கோம்.
(இப்போ என்கையில 400 ரூபா இருக்கு)

ஒரு ரயில்வே கிராசிங்.

டேய் சிங் பசிக்குதுடா

சரி பஸ்ஸ விட்டு இறங்குங்க

நல்லா சாப்டுட்டு ஆளுக்கு ஒரு கோல்டு பில்டர் சிகரெட் பாக்கெட்டும் வாங்கி கிட்டானுக.
52 ரூபா காலி

டேய் தம்பிகளா இதாண்டா மேட்டரு.
அந்த பொண்ணு என்கிட்ட 100 ரூபாதான் குடுத்தா ,என்கிட்ட ஒரு 50 ரூபா இருந்திச்சி , இப்பவே 50 ரூபாயிக்கு திண்ணு தீத்துடீங்க.
இந்தா புடி என்கிட்ட 100 ரூபாதான் இருக்கு. புதுகோட்ட போர வரைக்கும் இத வச்சு தான் ஓட்டனும் ,அங்க போனதுக்கப்பரம் தலிவர்ட்ட காசு வாங்கிகலாம்.

காசு இல்லாம ஏண்டா எங்களை கூப்புட்டு வந்தே?

உங்கிட்ட காசு இல்லாம இருக்காது .அந்த பொண்ணுதான் மாசாமாசம் சம்பாதிக்கிறாளே, பணம் இல்லாமல உன்ன அனுப்பினா?

சத்தியமா இல்லடா.

உங்களுக்கென்னடா புதுகோட்டை போய் எறங்கின உடனே ரெண்டு பேருக்கும் பீர் வாங்கி தரேன், மத்ததெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.

இது இப்ப சொன்னியே இது அழகு!

புதுக்கோட்டையும் போயாச்சு ,சாயந்திரம் 4.00 மணி

சனியன் புடிச்ச பசங்க ,அப்பயே 100 ரூபாயிக்கு வேட்டு வச்சுட்டானுக.

டேய் மணி இப்பவே 6 ஆயிட்டு இனி எப்ப வேங்கடகுளம் போயிட்டு ஊரு திரும்பறது?

புதுகோட்டையிலேர்ந்து அந்த ஊருக்கு ஒரே ஒரு பஸ்தான் .அப்பதான் அந்த பஸ் போயிருக்கு மேலும் ஒரு அரை மணி நேரம் அங்க இங்க சுத்திபுட்டு ஏழுமணிக்குதான் வேங்கடகுளம் போய் சேர்ந்தோம். சிலு சிலுன்னு மழை பேஞ்சிட்டு இருக்கு.ரோடெல்லாம் செக்க செவேர்னு ஒரே தண்ணிதான் .நடந்து போக முடியல,அந்த தண்ணிலிலேயே கால இழுத்து இழுத்துகிட்டு ஒரு மளிகை கடையை போயி கேட்டோம் .

ஓ அந்த மிலிட்டரி காரர் வீடா .அதோ தெரியுது பாருங்க பாதி கட்டுன படியே நிக்குதுள்ள ஒரு வீடு அதுதான் அவங்க வீடு.

வீட்டுல தலிவரு இல்ல. அவங்க அம்மாகிட்ட .....

எங்கம்மா மணி போயிட்டான்m டவுனுக்கு போகனும்னு வரசொன்னான் ஆளயே காணும்.

கொஞ்சம் இருங்க தம்பி இங்கதான் நின்னான் .

கொஞ்ச நேரத்துகெல்லாம் தலிவரு வந்தாரு.

வாங்க வாங்க
ஆமா கீதாவுக்கு என்ன ஏதும் பிரச்சனையா?
மூனு பேரு வந்து இருக்கீங்க

(இதுல என்ன மட்டும்தான் தலிவருக்கு தெரியும்)

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க கீதா உங்கள அழச்சிட்டு வர சொன்னாங்க அவ்லோதான் .ஒன்னும் பயப்புடுரமாதிரி இல்ல.

சரி என்ன சாப்புடுரீங்க?

அண்ணே சிகரெட் கெடைக்குமா

கொஞ்சம் இருங்க வாங்கி கிட்டு வர்ரேன்

ஏன்டா வந்த எடத்துல வாய வச்சுட்டு சும்ம இருக்க மாட்டியா?

ஒனகென்ன நீனா வாங்கி குடுக்க போரே.
சும்மா வாயமூடிகிட்டு இரு ,சிகரெட் இல்லாம வாயி நமநமன்னு இருக்கு.

தலிவரு வந்தாரு உடனே எங்க கூட கெளம்பிட்டாரு.

புதுகோட்டை வந்தாச்சு.

டேய் சிங் காசு வச்சுருக்கிரியா?

இல்லடா அதான் எல்லா காசும் உன்கிட்ட குடுத்துட்டேனே.
அப்பரம் என்கிட்ட ஏது காசு.

இப்ப என்ன வேனும் உங்களுக்கு என்கிட்ட நெரைய காசு இருக்கு
வாங்க சாப்புடுட்டு அப்பறம் பஸ் புடிக்கலாம்.

என்னடா சிங் தண்ணி அடிச்சி ரொம்ப நாளாச்சிடா.

அட பாவி மவனே!

இப்பதானட சாயங்காலம் ரெண்டு பேரும் குடிச்சீங்க,

அது பீரு தானட.

சரி ஊரு போயி பாத்துகளாம்.

பரவா இல்ல வாங்க எல்லாம் நமக்கு தெரிஞ்ச ஒயின் ஷாப் இருக்கு.

அங்க போயிடலாம்.

ஒரு புல் வாங்கி அடிச்சானுங்க.
.
செயகுமார் வாங்க ஒங்களுக்கு ஒரு பெக்

இல்லங்க அவன கம்பல் பண்ண வேண்டாம். அவன் குடிக்க மாட்டன்.

சரி சரி சீக்கிரம் கெளம்புங்க.

ஊருக்கு செல்வதற்கு பஸ் எடுத்தாச்சு.
டிரைவருக்கு பின்னாடி சீட்டுல என்ன தவிர அவங்க மூனு பேரும் ஒரு சீட்டுல,
நான் அதுக்கு பின்னாடி சீட்டுல. டிரைவருக்கு லெப்ட் சைடுல பேட்டரி பாக்ஸ் இருக்குமில்ல, அதுல ஒரு அழகான வயசு பொண்ணு,அப்பறம் அப்பதான் கல்யாணம் ஆன ஒரு பொண்ணு ரெண்டு பேரும் ஒக்காந்து இருக்காங்க.அதுக்கு பின்னாடி ஒத்தையா உள்ள சீட்டுல அந்த பொண்ணோட அம்மா.அதுக்கு பின்னாடி ரெண்டு பேர் உட்காருர மாதிரி உள்ள சீட்டுல ஒரு சென்டில்மேன். அவரோட கர்சீப்பால எடம் போட்டுட்டு கீழ எறங்கி பூ வாங்க போயிட்டாரு.

(இவரோட மனைவி,தங்கச்சி,அம்மாதான் அங்க ஒக்காந்து இருந்தவங்க )

வந்து பாத்தா ஒரு தடியன் (நல்ல மப்புல இருந்தான்) கர்சீப் போட்ட இடத்துல உக்கந்துட்டான்.

பூ வங்கிட்டு வந்தவரு அழகா கர்சீப்ப கேட்டு வாங்கிட்டு நின்னுகிட்டு இருந்தாரு

இது அவங்க அம்மாவுக்கு புடிக்கல,பின்னே புள்ள எடம் போட்ட எடத்துல வேர யாரோ உக்கந்த கோவம் வருமா வராதா?

சன்டை போட ஆரம்பிச்சாங்க.

அந்த சென்டில்மேன் சண்ட வேண்டாம் அப்பிடீன்னு இடையில பூந்து மறைச்சாரு

சென்டில்மேன் கழுத்துல போட்டு இருந்த செயின அந்த தடியன் அருத்துட்டான்

இவ்ளோ நேரம் நாங்க அந்த வயசு பொண்ண சைட் அடிசுட்டு இருந்தோமா.

எனக்கு அந்த சென்டில் மேன எங்கயோ பாத்த ஞாபகம்

டேய் இந்த ஆளு நம்ம செல்வம் கல்யாணத்துல பந்தியில பரிமாரிகிட்டு இருந்தாருல்ல ஞாபகம் இருக்கா.

நம்ம பசங்க தான் நல்ல மப்புல இருந்தங்களே!

ஆமான்டா இப்பதான்டா ஞாபகம் வருது இவரு செல்வத்தோட சொந்த கார ஆளுதாண்டா

தடியன் எழுந்து சண்டை போட்டுகிட்டு இருந்தானில்ல ,அந்த சீட்டுல போயி நம்ம பையன் ஒருத்தன் உக்காந்துட்டான்.அவ்ளோதான் தடியன் அந்த சென்டில்மேன விட்டுட்டான்.
அங்கதான் ஆரம்பிச்சிது பிரச்சனை.....


காதல் அடுத்த பதிவுல முடியும்ங்க!

Receomand this post to other reades :

13 Comments:

At 12:47 AM, Blogger சிவா said...

செயகுமார்! கத நல்லாக்கீதுப்பா! //** கீதா உங்கள அழச்சிட்டு வர சொன்னாங்க அவ்லோதான் **// இது கலக்கல். கடைசில என்னாச்சுப்பா..சீக்கிரம் சொல்லுப்பா!

 
At 4:29 AM, Blogger சிங். செயகுமார். said...

நல்வரவுக்கு நன்றி சிவா ( நீங்க மட்டும்தான் புராணம் பாடுவீகளோ) அது வந்து சிவா போய் அழச்சிட்டு வர சொன்னங்களா, நானும் அழச்சிட்டு வரும்போதுதான் பாருங்க ...........

 
At 5:42 AM, Blogger b said...

அண்ணாத்தே சிங்கு,

நீங்க புதுப்பதிவர்னு சொன்னா சத்தியமா நம்பவே முடியலை. பேச்சுத்தமிழில் அழகான ஒரு கதை. பார்த்துப் பார்த்து வடித்து இருக்கிறீர்கள். அப்புறம் இது கதையல்ல.. நிஜம்போலத் தெரிகிறதே?!

 
At 5:58 AM, Blogger குமரன் (Kumaran) said...

என்ன சிங், தயங்கி தயங்கி கடைசியில கதை எழுத ஆரம்பிச்சாச்சு போல இருக்கு...ஏன் தயங்கினீங்கன்னு புரியல.. நல்லாத்தானே கதை எழுதுறீங்க...அங்க அங்க கொஞ்சம் எழுத்துப்பிழை இருக்கு...ஆனா அது பெரிய விஷயம் இல்ல...என்ன சொல்றீங்கன்னு நல்லா புரியுது. தொடர்ந்து நிறைய கதை எழுத வாழ்த்துகள்.

முதல் கதையே தொடர்கதையா...ம்ம்ம்...நல்லா இருக்கும்.

 
At 9:33 AM, Blogger சினேகிதி said...

Sing enna nadakuthu inga?? doss mendum oru kaathal kathai aduthavar thevathyagin siragenele neega inomoru kaathal kathai ellarum oru vali parkama vidaporathila pola...nadathunga nadathunga.kathai nalla iruku kanja karupu kathikira maathiri iruku (frm kaathal movie).

 
At 9:35 AM, Blogger ஜோ/Joe said...

அப்பிடிப் போடு!தொடருங்கள்!

 
At 4:24 PM, Blogger சிங். செயகுமார். said...

நண்பர் மூர்த்தி வணக்கம்! ,கதையல்ல நிஜம்தான்,கதைக்கெல்லாம் எங்கே வரவேற்பு இருக்க போவுதுன்னு நினைத்தேன் !சந்தோஷம் நண்பர்களே

 
At 4:30 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் குமரன் .பேச்சு தமிழ்ல எழுதனும்னு ஆசை பட்டேனா! ண,ன பேச்சு தமிழ்ல திருத்தம் செய்யனுமான்னு விட்டுட்டேன். ஒரே பகுதியா போடலாம்னு நெனச்சேன் ரொம்ப நீளமா இருந்துச்சா.சரின்னு மூன்று பகுதியா போடுறேன்.உங்க ஆசீர்வாதமே என்ன எழுத தூண்டும்
முடிந்த வரையில் எழுத்து பிழையை திருத்திவிடுகிறேன் . நன்றி குமரன் அடிக்கடி வந்து தட்டி குடுங்க!

 
At 4:39 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் சினேகிதி ! சில பேருக்கு இந்த பதிவோட "லிங்க" மெயில் பண்ணுவோம்னு நெனச்சிகிட்டே வந்தேன்.அதுக்கு அவசியமே இல்லாம போயிட்டு. காதல் படம் சொல்றீங்களா.அதுலதான் லவ்வர்ஸ் சேர மாட்டங்களே.இங்க அந்த கொடுமையெல்லாம் இல்லங்க. அப்பப்ப வந்து பாத்துட்டு போங்க சினேகிதி!

 
At 4:43 PM, Blogger சிங். செயகுமார். said...

ஜோ வணக்கம்! நல்லா இருக்கிங்கிங்களா? ஊர்லதானா இல்ல ஊர் பயணமா? .உங்க பேர பாத்தாலே ஜோதிகா ஞாபகம்தாங்க வருது. வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள். எம் ஆர் டி புடிச்சாவது அடிக்கடி வந்துட்டு போங்க!

 
At 7:54 PM, Blogger சினேகிதி said...

\\வணக்கம் சினேகிதி ! சில பேருக்கு இந்த பதிவோட "லிங்க" மெயில் பண்ணுவோம்னு நெனச்சிகிட்டே வந்தேன்.அதுக்கு அவசியமே இல்லாம போயிட்டு\\sari inima link anupidinga:-)

 
At 7:58 PM, Blogger சிங். செயகுமார். said...

சினேகிதிக்கு
எப்போதும் சிங்காரகுமரனின் சினேகம் இருக்கும்
நிச்சயமா அனுப்புறேன்
சினேகமுடன் சிங்காரகுமரன்

 
At 4:53 PM, Blogger சிங். செயகுமார். said...

வருகைக்கு நன்றி பல்லவி! 100 சதவீதம் கற்பனை இல்லீங்க .அதில் வருகின்ற பெயரை கூட நான் மாற்றவில்லை.

 

Post a Comment

<< Home