...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Monday, December 05, 2005

இன்னொரு காதல் கதை!

அப்போ நான் +2 படிச்சிட்டு ஊர் சுத்திட்டு இருந்த நேரம்.வீட்டுக்கு பக்கத்துல ஒரு மளிகை கடை அங்கதான் நம்ம அரட்டை கச்சேரி பொழுதேனிக்கும். நம்ம ஊருக்கு புதுசா ஒரு பயலோ பொண்ணோ வந்துட புடாதே .யாரு ? எவறு வீட்டுக்கு வந்திருகாக! சேதி வந்துரும்ல ,வராட்டா அதானே நம்ம வேல.

அன்னிக்கும் அப்பிடிதான் ஒரு 23 வயசு இருக்கும் கழுக்கு மொழுக்குன்னு ஒரு பாடி பில்டர். நம்ம மளிகை கடைக்கு எதிர்த்தாப்புல அங்கேயும் இங்கேயும் நடை போட்டுகிட்டு இருந்தார். நமக்கு பொறுக்குமா? மெதுவா எழுந்து போயி வணக்கம் அண்ணே! என்ன பஸ்ஸுக்கு வெயிட் பண்றீங்களா.வந்து கடையில உட்காருங்க .அடுத்த பஸ் நாலு மணிக்குதான்,என்ன சாப்புடுரீங்க (எங்களுக்கு காப்பி ரெடியா இருந்துச்சி).

அண்ணன் எந்த ஊரு இதுக்கு முன்னால பார்த்த ஞாபகம் இல்லயே!காப்பிய சாப்புடுங்க

எனக்கு காரைகுடிங்க.

இங்க ஒருத்தர பார்க்க வந்தேன் பாத்துட்டேன் அதான் கிளம்பறேன்.

நாங்க அப்பிடியே வேர கச்சேரில இருந்தோம்.

தலிவரு 4 மணி பஸ்ஸையும் விட்டுட்டாரு.முகத்துல ஏகப்பட்ட சோக கலை ,நமக்குதான் நாடி தெரியுமே!

என்னண்ணே உங்க பிரச்சன ,மனுஷங்களா பொறந்தவனுக்கு பிரச்சனை இல்லாம இருக்குமா?

இந்த கடை வச்ச்சுருக்கானே இவனும் கொஞ்சநாள் வரைக்கும் ஒரு பொண்ண லவ் பன்றேன்னு லோலோன்னு பின்னாடியே நாய் மாதிரி அலைஞ்சிகிட்டு இருந்தன், அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடிச்சி .இப்பதான் அடங்கி ஒடங்கி கெடக்குறான். என்ன தாடி மட்டும் வச்சுகிறான் சொன்னா கேக்க மாட்டெங்கிறான்.எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஒன்னு கண்டிப்பா இருக்கும். உங்க முகத்த பார்த்தேன்! சோகம் நிறைய பொதஞ்சி கெடக்குகுங்க. கொட்டிடுங்க அப்பதான் மனசு பிரீயாகும்!

தலிவரு மெல்ல அழ ஆரம்பிச்சார்! நமக்கு கொஞ்சம் சங்கடமா போய்ட்டு. அப்ப நமக்கு வயசு 17 தலிவருக்கு 23 . அவரு தோள்ல ஆதரவா கை போட்டு விஷயத்த கறந்தேன்.

தலிவரும் அந்த பொண்ணும் கிரிஸ்டியன்ஸ் .ஒன்னாம் கிளாஸிலேர்ந்து ரெண்டு பேரும் பிரன்ட்ஸ், பின்னாளில் லவ்வர்ஸ்.தலிவரு கொஞ்சம் வசதி கம்மி. பொண்ணு வசதியான எடம்.இவரு பத்தாம் வகுப்பு படிக்கும்போது அந்த பொண்ணு சொல்லிச்சி ,

டேய் மணி நீ +2வெல்லாம் படிக்கவேண்டாம் ,ஐ.டி.ஐ படி சீகிரம் நல்ல வேல கெடைக்கும் நாம சீக்கிரம் கல்யணம் பண்ணிக்கலாம்!


தலிவரு ஐ.டி.ஐ முடிச்சி அப்பரன்டீஸ் முடிச்சி கார்ப்பரேஷனில மெக்கானிக் வேல!
மாசம்ம 5000 சம்பளம்.
பொண்ணு பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி. லவ்வு நல்லாதான் போய் கிட்டு இருந்திருக்கு,
திடீர்னு அந்த பொண்ணு என்ன நெனச்சாளோ என்னமோ ,இல்ல வீட்டுக்குத்தான் தெரிஞ்சு போச்சோ என்னமோ!

உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது ! எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க.

தலிவரு மனசு ஒடஞ்சி போயிட்டாரு ,வேற என்ன செய்ய கார்ப்பரேஷன் டெப்போவில இருந்த ஆசிட்ட குடிச்சிட்டாரு .நிறைய செலவு பண் காப்பாத்திடாங்க. அந்த பொண்ணுக்கு மனசு சங்கடமா இருக்குமில்ல .ஆறுதலா ஒரு லெட்டர் போட்டு இருக்கா. அதான் தலிவரு பொண்ண தேடி நம்ம ஊருக்கு வந்து இருக்கிராரு.

அந்த பொண்ண பத்தி சொல்லலையே!

நம்ம விட்டுக்கு பக்கத்துல வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சொந்தமான ஒரு டிரஸ்ட்
அங்க இங்கிலீஷ் கான்வென்ட், வயசு பொண்ணுங்களுக்கு தையல் பயிற்சி ,சின்னதா முதலுதவி மாதிரி மருத்துவம் எல்லாம் நடக்கும்,

அங்க சிஸ்டர்ஸ்(கன்னியாஸ்திரிகள்),கான்வென்ட்க்கு பாடம் சொல்லி கொடுக்க வந்த டீச்ச்ர்ஸ்.

நாமதான் அந்த டிரஸ்டுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜா.
கரண்ட் பீஸ் போனிச்சின்னா ,மோட்டர் சரியா தண்ணி எடுக்கலைன்னா, கரண்ட் பில்,டெலிபோன் பில் கட்டுர ஆபிஸ் பாயா ,எதுனா பங்க்ஸன் நடந்துச்சுன்னா , பங்க்ஸன் கோ ஆர்டி நேட்டரா ,புதுசா யாரும் ஆளுங்க வந்தா என்ன ஏதுன்னு விசாரிக்கிறதுன்னு நாம ஒரு பிரீ சர்வீஸ் இஞ்சினீயர் .
இந்த கதையில வருகின்ற பொண்ணும் அப்பிடிதான் டீச்சரா இங்க வந்தா!

தலிவரு கடந்த கால கதையெல்லாம் சொல்லி முடிச்சாரு. அந்த மனுஷன் மொகம் பார்க்க ரொம்பவும் பாவமா இருந்திச்சி . நம்மா ஆல் இன் ஆல் அழகு ராஜ( நாமதான்) என்ன பண்ணுனாரு .அப்பறம் நேரா அந் டிரஸ்ட்கு போனேன்.

என்னங்க கீதா எப்பிடி இருக்கீங்க?

அதான் தெனம் பாக்குரீங்களே எதும் மாற்றம் தெரியுதா?

என்ன சாப்டுரீங்க?

சாப்புடுரது இருக்கட்டும்,

மணின்னு ஒருத்தர பார்தேன்

உங்கள பார்க்க வந்தாராம்!
நீங்க தான் யாரையும் உள்ள அலோ பண்ணமாட்டிங்களே, அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்

உடனே பாக்கனுமே அந்த பொண்ணு மொகத்த பேயரஞ்ச மாதிரி இருந்துச்சி.
அதுவா அவரு எங்க சித்தி பையன் ,அம்மா பார்த்துட்டு வர சொன்னாங்களாம்,அப்பவே பார்த்துட்டு போய்ட்டாரே!
எங்க போனாரு, மூனு பஸ்ஸையும் விட்டுட்டு மறுபடியும் எந்த பஸ்ல போறதுன்னு தெரியாம நம்ம கடையிலதான் இருக்காரு

அய்யொ தேவனே இன்னும் போகலையா?

அப்பிடியே என்கூட அந்த டிரஸ்ட் வாசல் வரையும் வந்து எட்டி பார்த்தா.

சரி மேட்டருக்கு வாரென் ,சாருக்கு என்ன சொல்லி அனுப்பினீங்க?

என்னத்த சொல்ல, அம்மா பார்த்துட்டு வரச்சொன்னங்களாம் அதான் பார்த்துட்டு போய்ட்டாரே

ஓகே இது முழுக்க உங்களோட பர்சனல் மேட்டர் .இருந்தாலும் சாரு பாய்சன் சாப்டதிலேர்ந்து நீங்க கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்ன வரைக்கும் எனக்கு தெரியும்!


அவர வரசொல்லுங்க.

தலிவரும் வந்தாரு .

அதான் சொன்னனேனே இன்னும் போகலையா.

சிஸ்டருக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.

உடனே ஊட்டுக்கு அனுப்பிடுவாங்க.

பேசி கொண்டு இருக்கும் போதே பஸ் வர தலிவரு
பஸ்ல ஏறி போய்ட்டாரு.


ஒரு இருபது நாளு கடந்து போயிருக்கும்.
நைட் லேட்டா வீட்டுக்கு வந்தேன்.
என்னடா தம்பி கான்வென்ட்லேர்ந்து அந்த பொண்ணு அஞ்சாறு தடவ உன்ன தேடிகிட்டு போவுது.
அவங்ளுக்கு வேர வேலையே இல்லயா.
தொட்ட தொன்னூருக்கும் நீதான் ஓடனுமா?
இன்னோரு தபா வந்தா மூஞ்சில அடிக்கிறாப்ல பேசிபுடுறேன்.
அப்பரம் யார வந்து கூப்புடுராளுவோன்னு பாப்போம்.
இல்லம்மா அவங்களுக்கு என்ன அவசரமோ!
அக்கம் பக்கத்திலைருக்கிறவங்கள நம்பிதானே அந்த பொண்ணுங்க ஊர விட்டு ஊர் வந்து நம்ம ஊர்ல வந்து பாடம் சொல்லிகுடுக்கிறாங்க.
நாம என்ன அள்ளிகிட்டா குடுக்கிறோம் .
எதாவது சின்ன சின்ன உதவிதானே.
நீனும் திருந்த மாட்டே.
அவளுகளும் திருந்த மாட்டாளுக!
விடும்மா அதையே தொன தொனன்னு பேசிகிட்டு இருக்காதே.
எனக்கு பசிக்குது.

மறு நாள்காலையில தூங்கி எழுந்து வெளியே வாரேன் ரோட்டுல அந்த பொண்ணு நிக்கிறா!
என்ன எதுன்னு போயி கேட்டா,

வாங்க பேசிகிட்டே போவோம்.

உங்கிட்ட சொல்றதுக்கு என்ன .
அதான்

ம்ம் சொல்லுங்க .

இல்ல நேத்து மணி லெட்டர் போட்டு இருந்தாரு

படிச்சிட்டிங்களா இல்ல படிச்சி சொல்லனுமா?

இல்ல இது ரொம்ப சீரியசான மேட்டரு

ஓ அப்பிடியா!

இல்லங்க எங்க வீட்ல ஏகப்பட்ட பிரச்சன அது அவருக்கு புரிய மாட்டெங்குது
இப்போ கல்யாணம் வேண்டான்னுதான் சொன்னேன் .அதுக்கு போயி சூசைடு அட்டம்ப்டு பண்ணிட்டாரு.

அதான் முடிஞ்சி போன கதையாச்சே!

இப்போ என்ன பிராபுளம்?

அது
"நீ என்ன பாக்க நாளைக்குள்ள வராட்டியும் என் பொணத்த பாக்க வரலாம்னு" லெட்டர் எழுதி இருக்கிராரு .அதோட நீ இல்லாத வாழ்க்க எனக்கு வேண்டாம் நான் சீக்கிரம் போய் சேந்துடுவேன். சாக போர எனக்கு எதுக்கு இதெல்லாம் ........

கையில அந்த பொண்ணு ஒரு பார்சல் வச்சிருந்தா
அதுல தலிவரோட டீசி, பாஸ் போர்ட் ட்ரைவிங் லைசென்ஸ் எல்லாம் இருந்திச்சி

இப்போ நான் உங்களுக்கு என்ன செய்யனும்?



- காதல் வளரும்.....

Receomand this post to other reades :

3 Comments:

At 10:06 AM, Blogger b said...

நன்றாக எழுதுகிறீர்கள் ஜெயக்குமார். புஷ்பவனம் குப்புசாமி ஊரா நீங்கள்? வாழ்த்துக்கள். சிங்கையில் வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். சந்திப்போம்.

 
At 7:45 PM, Blogger சிங். செயகுமார். said...

தங்கள் வருகைக்கு நன்றி !சந்தோஷம் நண்பரே!
ஆமாம் மூர்த்தி நீங்கள் சொல்வது சரிதான்
அடிக்கடி வந்து போங்க்!

 
At 4:49 PM, Blogger சிங். செயகுமார். said...

உங்கள் வருகை எனக்கு சந்தோஷம் பல்லவி .வணக்கம்! நாம சொன்னா கேக்கிற நிலையிலா அவங்க இருக்கிறாங்க!

 

Post a Comment

<< Home