...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Tuesday, November 29, 2005

கன்னியாகுமரி..

முக்கடல் சங்கமம்
முழுமதி குங்குமம்
எழுஞாயிரும்
வெண்திங்களும்
விடியலுக்கு வணக்கமும்
விடிய விடிய காத்த மயக்கமும்
வாண் கொண்ட அழகு
விண்ணும்
கண்ணிலடங்கா கடலும்
காண கிடைத்த அழகே!
கன்னியாகுமரி












திக்கெட்டும் தெரிந்தவராம்
தெய்வ மொழி புலவர்
அய்யன் வள்ளுவன்!
அகண்ட கடலின் நடுவே
திரண்ட அலைகடல் சங்கமம்
வான் தொடும் உன் சிரசு
வின் அதிரும் உன் செந்தமிழ்
பால் மூன்றும்
பக்குவமாய்
நாலு மூனு வார்த்தைகளில்
நறுக்காக உரைத்தவரே!
உன் புகழ் வான் முட்டும்
உன் உருவம் கூட!








நீல வானம் கொண்டு
மேனியெங்கும் மஞ்சள் பூசி
அலை ஆர்ப்பரிப்பும் இங்கே
அமைதியின் சின்னமும் இங்கே
ஐந்தறிவு ஜீவனுக்கும்
சொந்த சுகத்தோடு
பந்த பாசத்தோடும்
அடைக்கலம் தந்தாய்
ஆறறிவு இருந்தும்
அடி மனதில்
பொடியும் ஈரமின்றி
சுனாமி எனும் சொல் கொண்டு
சுட்டெரித்தாய் நீயும்
ஒன்றும் அறியா
கன்றினை போல
ஒய்யாரமாய்
ஓடி ஆடும் உன்
விளையாட்டே
பாசமுள்ள மக்களும்
நேசத்தோடு நித்தமும்
நெடுந்தொலைவு பயணம்
தொட்ட பாவம்
விட்ட பாவம்
கொட்டி அழ உன்னிடம்!







Receomand this post to other reades :

5 Comments:

At 7:51 AM, Blogger ஜோ/Joe said...

அடடே செயக்குமார்,
நம்ம ஊர் பத்தி நல்ல கவிதை..பாராட்டுக்கள்.

 
At 4:16 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் ஜோ ! .வலைப்பக்கம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்

 
At 5:07 PM, Blogger சிங். செயகுமார். said...

எழுதுங்கள் சித்திரமும் கை பழக்கம்! ஆமா உங்க திருநாமம் அடியேன் அரியலாமா?

 
At 8:46 PM, Blogger கைப்புள்ள said...

சிங்கு,
சத்தியமா சொல்றேன். நல்லா இருக்கு சூப்பருன்னு சொல்றத தவிர எனக்கு எதுவும் வார்த்தை வர மாட்டேங்குதுங்க! அவ்வளவு பிரமாதமா இருக்கு. அந்த எதுகை மோனை நயமும் நீங்க கையாண்டிருக்கும் தமிழ் சொற்களும்...பாராட்ட கைப்புள்ளைக்கு தகுதி இல்லீங்க.

 
At 10:13 PM, Blogger சிங். செயகுமார். said...

சந்தோஷம் கைபுள்ள! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

 

Post a Comment

<< Home