...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Friday, December 30, 2005

வேண்டாம் பெண்ணே!





கண்ணோடு ஏனம்மா

நீர்கோலம்!

உன்னோடுதான் சேர்வேன்

உனக்கேன் வெருப்பு

உன் மீதே?

கண்ணாளன் வருவான்!

காத தூரம் இருப்பதால்

கவி மட்டும்தானே சொல்வான்!

உன் கரம் பற்ற

என் கரம் படும் பாடு

உன் மனம் அறியுமோ?

ஒரு வரம் கேட்பேன்

திருவாய் மலர்ந்து

தேனே சொல்வாய்

உன்னவன் இருக்கும் வரை

கன்னத்தில் ஈரம்

கடுகளவும் வேண்டா

சொல்லாலடித்தாய்

என் வரவு இல்லை என

நினைத்தாயோ?

ஏனிந்த கண்ணீர்

உன் சோகம் எனக்கு புரியும்

என் தேகம் உனக்கும் தெரியுமோ?

தெரிந்துதானே கலையிழந்த

என் தாடிக்கு

மழையாக உன் கண்ணீர்!

இடுகாடுதான் முடிவென்றால்

உன் சுடு கவி எங்கே காண்பேன்

விடு விட்டு விடு - உன்

வேண்டா எண்ணதை!

கை சேர்வோம்

மை விழியாளே

கார்காலம் முடியட்டும்

கடும் புயலும் மழையும்

கப்பல் தனை கவிழ்க்குமே

இரண்டு திங்கள் கழியட்டும்

முரண்டு புடிக்காதே

திரண்ட கண்ணீருக்கு

வன்முறை சொல்லி விடு

வளை கரத்தாளே

வருகிறேன் சீக்கிரம்!

Receomand this post to other reades :

0 Comments:

Post a Comment

<< Home