உயிரின் விலை!
இன்று அதிகாலை 4.00 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேனிலைபள்ளியில் வெள்ள நிவாரணத்திற்காக காத்திருந்த மக்களில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இரவெல்லாம் பள்ளி வளாகத்தில் காத்திருந்த மக்கள் ,திடீரென ஒரு வாயிற்கதுவு மட்டும் திறக்கப்பட அரை தூக்கத்தில் இருந்த மக்கள் முண்டியடித்து முன்னேறி செல்லும்போது ஒருவரையொருவர் தள்ளியடித்து கீழே விழுந்தவர்களை மிதித்து தள்ளியதில் அநியாயமாக 42 பேர் உயிரிழந்தனர்!
ஏற்கனவே இரண்டு முறை வழங்குவதாக இருந்த, இந்த வெள்ள நிவாரணம் இந்த முறை கிடைக்கும் நிவாரணத்தை பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலில் காத்துகிடந்த மக்களில் கணவனை இழந்த மகளிர் ,மனைவியை இழந்த கணவான்கள்,பெற்றோரை இழந்த குழந்தைகள்.இவர்களின் அழுகுரல் ,ராயபேட்டை அரசு பொது மருத்துவமனையையும் சென்னை அரசு பொதுமருத்துவமனையையும் நிறைந்து வழிகின்றன.
முதல்வரின் நேரடி பார்வையில் உள்ள நிவாரணம் வழங்கும் செயல்முறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பல உயிர்களை பலி கொண்டதே!
கடந்த கனமழைக்கு வியாசர்பாடியில் வழங்கபட்ட நிவாரண உதவிகளால் ஏற்கனவே தமிழகத்தை அதிர்ச்சிகுள்ளான நிகழ்வு ஏதோ சில லட்சங்களை வழங்கி பிரச்சனையை அதோடு மூடி மறைத்து விட்டனர்.
அந்த நிகழ்வே இன்னும் தமிழக மக்கள் மனதை விட்டு அகல வில்லை!
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கான கால அட்டவணை வகுத்து வழங்கி இருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டு இருக்குமா?
உயிரிழந்த குடும்பங்களுக்கு லட்சங்கள் கொடுத்தால் போதுமா?
அநாதையாய் போன அந்த ஜீவன்களுக்கு அரசு பொருப்பு ஏற்குமா?
இந்த நிலையில் இதற்கு விசாரணை கமிஷன் வேறு!
நடந்த நிகழ்வுகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!
விசாரனை கமிஷன் நிவாரணத்தின் நேரடி பொருப்பில் உள்ளவரை தண்டிக்க முயலுமா?
நிச்சயமாக முயலாது!
எல்லாமே கண் துடைப்புதானே!
Receomand this post to other reades :
13 Comments:
அதிகாலையில் மழையில் நனைந்து குளிரில் நடுங்கி அரைகுறை தூக்கத்தில் இருந்தவர்கள் காதில் விழுந்ததைக் கேட்டு ஓடியிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வியாசர்பாடியில் இதே கொடுமை நடந்தது. அதற்குள் இன்னொன்று! என்ன சொல்ல? வேதனையை இருக்கிறது. மனித
உயிரின் மதிப்பு, அதிலும் ஏழைகளின் உயிருக்கு மதிப்பு இவ்வளவுதானா?
ஜெயக்குமார்,
எனது கருத்துக்களை எனது பதிவில் இட்டு இருக்கிறேன் பாருங்கள்
http://johnbosco.blogspot.com/2005/12/blog-post.html
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!
Singh,
I have expressed my voice in my blogspot http://chennaicutchery.blogspot.com/
I repeat what i have said in johns blog... Iyallamai nam naattin desiya gunamaa enna?
மனித
உயிரின் மதிப்பு, அதிலும் ஏழைகளின் உயிருக்கு மதிப்பு இவ்வளவுதானா?
Usha what difference does it make?
Life is same for both the rich and poor alike....
ஹலோ தேவ் , இது சம்பந்தமா ஒரு கவுன்சிலர கைது பண்ணிருக்காங்களே அத என்னான்னு சொல்ல?
அப்பாவி ஏழ ஜனங்கதானே உசிர உட்டு இருக்கிறாங்க!
சிங். நானும் இந்தச் செய்தியை வலைச்செய்தித்தாளில் படித்து மிக வருந்தினேன்.
வாங்க குமரன் . பாத்தீங்களா தமிழ் நாட்டோட தலையெழுத்தை?
அடக் கடவுளே,
இன்னுமா 'ஏழைகளின் உயிருக்கு மதிப்பு' இருக்கறதா நம்பிக்கிட்டு இருக்கீங்க?
ஆனாலும் நீங்க ரொம்பவே அப்பாவியா இருக்கீங்களே.
கைது செய்யப்பட்ட கவுன்சிலர் எண்ணி ரெண்டே நாளுலே வெளியே வந்துருவார். அவரைப் பத்தி கவலை எதுக்கு?
எக்கோவ் துளசிக்கா வாங்க! வாங்க நம்ம ஊட்டு பக்கம் வந்து இருக்கீக! எனக்கு கையும் ஓடல காலும் ஓடல!. நல்லா இருக்கேளா?ஸ்கூல் பசங்கெல்லாம் எப்பிடி இருக்காங்க? அவரு நேத்தே வெளிய வந்து இருப்பாரு! விழுந்தவன் கதி என்னாவது!
//விழுந்தவன் கதி என்னாவது//
என்ன ஆகும்? 'சங்கு' தான்.
//ஸ்கூல் பசங்கெல்லாம் எப்பிடி இருக்காங்க? //
நல்லா இருக்காங்க. ஒரு வாரம் சிங்கிள் டீச்சராக் கட்டி மேய்க்கணும்:-)
உங்கள் வெளிப்படையான பேச்சுதான் டீச்சரக்கா தம்பி தங்கச்சிங்க நெரைய சேத்துகிறீங்க! டீச்சரே இப்படி பயந்தா ஸ்டூடெண்ட் நாங்க என்ன பண்ண?
Post a Comment
<< Home