...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Monday, December 12, 2005

இன்னொரு காதல் கதை-இனிதே வசந்தம்!

இந்த இரண்டு பகுதியையும் சுற்றிவிட்டு வாங்களேன்!

பகுதி - 1


பகுதி-2


எங்க பசங்க ஒருத்தன அந்த தடியன் கன்னா பின்னான்னு அடிக்க ஆரம்பிச்சிட்டான். நம்ம தலிவருதான் பாடி பில்டராச்சே,அவன் மூக்கை ஒடச்சிட்டாருல்ல.அப்பதான் அவரோட வாட்ச் காணாம போய்ட்டு.

டேய் மச்சான் எவனோ வெளியூர்காரன் என்ன அடிக்கிறான்டா, டிரைவர் பக்கத்துலதான் இருக்கேன் முன்னாடி வாடா.

முண்டி அடிச்சிகிட்டு ஒரு தடியன் முன்னுக்கு வந்தான்,நல்ல போதை வேறு!அப்பாவியா ஒரு வயசான ஆளு படி ஓரமா நின்னுகிட்டு இருந்தாரு, அவரு மூக்கு கண்ணாடிய புடுங்கி ரெண்டா ஒடச்சி வெளியே வீசிட்டான்.
பக்கத்தில நிக்கிறவனுக்கெல்லாம் அடி ,உதை. எனக்கு பின்னாடி சீட்டுல ஒரு ஜோடி.அந்த புருஷன்காரன் மேல இந்த தடியன் விழுந்துட்டான்,அந்த பொம்பள சத்தம் போட்டு பஸ்ஸே கிடுகிடுத்துட்டு போங்க,புருஷன் காரன் சும்மா இருப்பானா? அவனும் மல்லுக்கு நிக்கிறான்.

டேய் டிரைவர் வண்டிய எங்கயும் நிருத்தாதே, நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போ..

8 கி.மீ வன்டி எங்கேயும் நிருத்தல , என்ன தவிர மத்த மூனு பேரும் ரத்தமெல்லாம் வர சண்ட போடுராங்க, எனக்கு அடி புடி எல்லாம் பழக்கம் இல்லேங்க,
ஓரமா நின்னுகிட்டு தலவிதியேன்னு பயந்துபோயி நிக்கிறேன் . ஒரு கட்டத்தில எங்க பசங்கல்ல ஒருத்தன், அவன் கழுத்தும் சீட்டுக்கு மேல கைப்பிடி கம்பி இருக்குமில்ல அதும் சேந்து நிக்குது,இன்னும் கொஞ்சம் நெருக்குனா ஆளு குலோசுதான் , நான் என்ன செய்யரது?தல சுத்த ஆரம்பிசிச்சி,
அப்பிடியே ட்ரைவருக்கு பின்னடி ஒரு டயர் கலட்டுர ஒரு லீவர் கெடந்துச்சா, கொஞ்சம் கூட யோசன பண்ணாம சீட்டுக்கு கீழ படுத்துகிட்டு அந்த தடியன் கனுக்காலுல நங்குன்னு ஒன்னு வச்சேன் பாருங்க,அம்மான்னு அலறிகிட்டு சுருண்டு விழுந்துட்டான், என்னால நேர்ல சண்ட போட தைரியம் இல்ல,தடியனோட ஒரு அடிய கூட என்னால வாங்க முடியாதே! பஸ் நிருத்தாம வந்துகிட்டு இருக்கு, துவரங்குரிச்சின்னு ஒரு எடம் ,ராத்திரி 11 மணி .அந்த பஸ் ஸ்டான்ட்ல நெரைய பேரு நிக்கிறாங்க .பஸ்ஸையும் நிருத்திட்டாங்க! எப்பிடிதான் சேதி போனிச்சோ ஆண்டவனுக்குதான் தெரியும்! இந்த தடியன் ஒருத்தன் சத்தம் போட பிலுபிலுன்னு ஒரு பத்து பேரு பஸ்ல ஏறிட்டாங்க! நானும் பஸ்ஸ விட்டு எறங்கிட்டேன்.
எங்க பசங்கல்ல ஒருத்தன் என்ன செய்தான் தெரியுமா?

அய்யா நாங்க குடி போதையில அடிச்சி பூட்டோம்,நாங்க செஞ்சது தப்புதான்

அப்பிடீன்னு சாஸ்டாங்கமா காலுல விழுந்தான் பாருங்க, என் கண்ணுல தண்ணியே வந்துட்டு!
ஒரு மூனு பேரு இவனை அடிக்க கைய ஓங்குறானுக

அதுக்குள்ள ஒரு பெரியவரு

டேய் தினம் ஒருத்தனுக்கு இதே பொழப்பா போச்சு ,பஸ்ல ஏறினா ஏண்டா சண்ட போடுரீங்க?

தம்பிகளா நீங்க பஸ்ல ஏறி போங்க!

டிரைவர் வண்டிய எடுப்பா! போவலாம் ரைட்.

உடனே டிரைவரு வண்டிய எடுத்தாரு பாருங்க. நான் அப்பறம் ஓடி வந்துதான் ஏறினேன்.
அப்படி போன உசுரு அப்பதான் திரும்பிச்சி
வேதாரண்யம் போறவரைக்கும் அந்த குடும்பம் ஒரே பாராட்டு மழைதான்!

தம்பி நீங்கல்லாம் இல்லாட்டி என் புள்ளய பலி போட்டு இருப்பானுக.
நீங்கல்லாம் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வர்ரீங்க. நிச்சயமா ஒங்கள நாங்க எதிர்பாப்போம்
என்னிக்கி வாரிங்க இதான் எங்க வீட்டு போன் நம்பர் . நாளக்கி போன் பண்னுங்களேன்


நைட் ஒரு மணி
வேதாரண்யம் வந்துட்டோம்.அதுலேர்ந்து 10 கி.மே போவனும் நம்ம ஊர் போக,அந்த நேரத்துல ஏது பஸ்? ஒரு ஆட்டோ கூட இல்ல, டாக்சியும் இல்ல, பஸ்ல நடந்த பைட்டுல வயிறு கபகபன்னு பசிக்குது.

டேய் 2.15 க்கு ஹசன் இருக்கு அந்த பஸ்ல போவுண்டா! செத்த பஸ் ஸ்டாண்ட்லேயே தல சாய்ப்புமா?

பசங்களுகு போத தெளியல,

நீ வேணும்னா தூங்கி எழுந்து காலையில வா!

நாங்க நடந்தே போறோம்!

ஒரு மூனு கிலோ மீட்டர் நடந்து இருப்போமா? எங்க பசங்க என்ன பண்ணுனாங்க ,போற வழியில ஒரு மளிக கடை ,வெளிய ஒரு வாழ தாரு தொங்கினிச்சா . அப்பிடியே லபக்கிகிட்டானுக.

அங்கேயே ஒக்காந்து பழத்த திண்ணுட்டு, எவ்ளோ திங்க முடியும் பாதி தார நடு ரோட்டுலேயே குத்த வச்சுட்டு மருபடியும் நடக்கிறோம். நான் ஒரு பிளாஸ்டிக் செருப்பு போட்டு இருந்தேனா , கால நல்லா தின்னுட்டு , கலட்டி தூர வீசிட்டு அப்பறம் எப்பிடி தார் ரோட்டுல நடக்க முடியும்?

இனிமே என்னால நடக்க முடியாது.

சரின்னு செத்த நேரம் உக்காந்து இருந்தோம்.உப்புலோடு ஏத்திகிட்டு ஒரு லாரி ,அவன் நிக்காம போயிட்டான்.அடுத்த லாரிய குறுக்க நின்னு மறைச்சி உப்பு லோடு மேல ஏறி உக்காந்துகிட்டு விடிய காலம் மூனு மணிக்கு வீடு போய் சேந்தோம்.

எங்க வீட்ல விடிய விடிய லைட் எரிஞ்சிகிட்டு இருக்கு.அப்பா புஸ்த்தகம் படிச்சபடியே தூங்குறாரு. பக்கத்துவீட்டு மொட்ட மடியில அவங்க மூனு பேரையும் படுக்க வச்சுட்டு வீட்டுக்கு வந்தேன். ஆல் அரவம் கேட்டு அப்பா எழுந்துட்டாரு.

எங்கப்பா இவ்ளோ நேரம் எங்க போய்ட்டு வர?
தெரியும் நீ எங்க போய்ட்டு வர்ரேன்னு!

(அய்யோ அதுகுள்ள தெரிஞ்சு போயிட்டா!)
நீ போன உன் வேலையை முடிச்சிட்டு வர வேண்டியதுதான,ஏன் அந்த காலி பசங்களோட நீனும் போனே?

(நேத்து நைட் நம்ம விட்டுக்கு பக்கத்தில இருக்கிற மளிக கடையில, புள்ள எங்கன்னு கேட்டு இருப்பார் போல, அவனும் என்ன சொன்னான்னு தெரியல. அத உண்மைன்னு நெனச்சிகிட்டு அவரும் இருந்திருக்காரு )

நாந்தான் அந்த பசங்கள அழச்சிட்டு போனேன்னு அவருக்கு தெரியாது.

காலையில 6 மணிக்கு எழுந்து அந்த மூனு பேரையும் அடிச்சி கெளப்பி.
தலிவரே போதும்டா சாமி, போயி உங்க ஆள பாத்துட்டு கெளம்புற வழிய பாருங்க!
அதுக்குள்ள ஊருகுள்ள சேதி எப்பிடியோ லீக் ஆயிடிச்சி வயலுக்கு போன எடத்துல என்ன தம்பி வெளி ஊருக்கு பொண்ணு தூக்க போனீங்களாம்?

ஆளாளுக்கு மனசுல பட்டத கேட்டாங்க!
அப்பறம் தலிவரு எப்ப ஊருக்கு கெளம்பி போனாருன்னு தெரியாது!
ஒரு பத்து நாள் இருக்குமா?

காஷ்மீர்லேர்ந்து ஒரு லெட்டர் வந்துச்சி.

அன்புடன் செயகுமாருக்கு
அன்புடன் தாஸ் வரைவது. நான் மணியோட அண்ணன் ,காஷ்மீர்ல பி.எஸ்.எப் ல இருக்கேன்.தம்பி எல்லாம் விவரமா சொன்னான். இவ்ளோ உதவி பண்ணி இருக்கிங்க, இதையெல்லாம் இப்படியே வளர விட கூடாது. அடுத்த மாசம் முதல் தேதியில ஊருக்கு வாரேன்.தயவு செய்து எனக்கு நீங்க பெரிய உதவி செய்யனும்.அவங்க ரெண்டு பேருக்கும் வேளாங்கண்ணி கோயில கல்யாணத்துக்கு ரெஜிஸ்தர் பண்ணிடுங்க.

அடுத்த மாசம் முத தேதி நாம எல்லாம் அங்க பாப்போம்.


இது ஏதுடா இப்பதான் பெரிய பிரச்சன ஓஞ்சி போயிருக்கு மறுபடியும் தலவலியா?

ம் ம் என்ன செய்ய.
ஆரம்பிச்சு வச்சாச்சு.
முடிச்சி வச்சுட வேண்டியதுதான்.
நேரே கீதாகிட்ட போய் லெட்டர காமிச்சேன்.

என்ன கீதா என்ன பண்ணலாம்?

அவங்க அண்ணன் சொல்ரபடியே செஞ்சுடுங்க!

நிச்சயமா!

சத்தியமா! கர்த்தர் மேல பிராமிஸ்ஸா!

அப்பரென்ன வேளாங்கண்ணியில ஒரு பிரண்ட பாத்து ரெஸிஸ்த்தருக்கு சொல்லிட்டேன்.
அடுத்தமாதம் முதல்தேதிக்கு முத நாளே அண்ணனும் தம்பியும் நம்ம ஊருக்கு வந்தாங்க அப்பரம் உடனே வேளாங்கண்ணி கெளம்பி போயிட்டாங்க.

எனக்கு மட்டும் அழைப்பு!
நான் மட்டும் எப்பிடி போவது?
என்ன கீதா என்ன மட்டும் கூப்புட்டு இருக்காங்க.

ஏன் எல்லாருக்கும் சொல்லிகிட்டு?

நல்லகதையா இருக்கே!அடிதடி வாங்கின நம்ம பசங்க இருக்காங்க !அவங்களுக்கு சொல்லாமலா!

சரி அவங்களும் வரட்டும்.

டேய் எல்லாம் நாளக்கி வேளாங்கண்ணி போறோம் .

ஆரம்பிச்சிட்டாண்டா மாமா வேலைய உட மாட்டான்.

நீங்க வரலியா?

நங்க வராம கல்யாணமா? ஆனா ஒரு கண்டிஷன் நம்ம பசங்க எல்லாம் வருவாங்க ,நல்லா கவனிக்கனும்.

என்னங்க பசங்க இப்பிடி சொல்ரானுக .

ம்ம் சரி அழச்சிட்டு வாங்க.
பணமெல்லாம் இருகில்ல?
என்னங்க இப்பிடி சொல்லிட்டிங்க ,உங்களுக்கு இப்போ எவ்ளோ பணம் வேணும்?

பணமெல்லாம் வேணாம் ,நாளக்கி காலையில நீங்க தனியா வேளாங்கன்னி வந்துடுங்க.

15 பேரு வேளாங்கண்ணி போவனும்.போய் வர செலவுக்கு என்ன பண்ண.யோசனை பண்ணிகிட்டு இருக்கும்போதே.

தம்பீ சாயங்காலம் இருக்கிற முந்திரி கொட்டையெல்லாம் குடோன்ல குடுத்துட்டு பணம் வாங்கிட்டு வந்துரு.

103 கிலோ இருந்த முந்திரி கொட்ட மூட்டையில 10 கிலோ பில்லுல பிராடு பண்ணி காசு தேத்திட்டேன்.

இப்பொ வேளாங்கண்ணி சர்ச்சில நாங்க எல்லாரும்.

பொண்ணும் மாப்பிளையும் கல்யாண ட்ரெஸ்ஸுல.

பாதர் புத்தகத்த பாத்து படிக்கிறாரு .

இவங்களும் திருப்பி சொல்றாங்க.

ஆமென்.

பாவம் செய்த எம் கரத்தை

அய்யா நீர் கழுவி

சுத்தம் செய்யும்

நமக்கு ஒன்னும் வெளங்கல!

மோதிரம் மாத்துனாங்க

கல்யாணம் முடிஞ்சிதாம்

நாம ஒன்னும் கிப்டெல்லாம் குடுக்கலீங்க

பஸ்ஸு காசே இங்க லாட்டரி அடிக்குது!

பெரிய ஓட்டலுக்கு போனோம் (ஒயின்ஷாப் அட்டாச்சுடு)

பசங்க இஷ்டத்துக்கு கொண்டாடுனாங்க!

பசங்களுக்கு பஸ்சுக்கு மட்டும் காசு குடுத்துட்டு.

ஒரு 11 மணிகெல்லாம் நானும் கீதாவும் ஊருக்கு கெளம்புரோம்

பொண்ணு இப்போ நம்ம ஊர்ல.

தலிவரு (அதான் மாப்பிளை) அவங்க ஊர்ல

ஒரு 16 நாள் கழிச்சி மாப்ள வந்தாரு

பொண்ண கையோட கூட்டிட்டு போயிட்டாரு!






அவ்ளோதாங்க எனக்கு தெரியும்!

இப்போ அவங்க எங்கே இருக்கிறாங்க?

எப்பிடி இருக்காங்க?

எத்தினி கொழந்தைங்க?

இது 1997 ல நடந்திச்சி!

:"எங்கிருந்தாலும் வாழ்க"

############@@@@@@@@###############




2003 -ல எங்க மாமியோட தம்பிக்கு கல்யாணம். நானும் கல்யாணத்துக்கு போயிருந்தேன்!
கல்யாணமும் முடிஞ்சிடிச்சி.அப்பறம் சம்பிரதாய சடங்கு நடக்குமில்ல, அத வேடிக்க பாத்து கிட்டு இருந்தேன்.ஒருத்தரு குறுக்கேயும் நெடுக்கேயும் போய்கிட்டே இருந்தாரு. பொண்ணுக்கு தாய் மாமனாம்.இவர எங்கயோ பாத்த மாதிரியே இருக்கே !

எங்கே!

ஆஹா!.இவரு நம்ம சென்டில்மேனுல்ல!

சார் வணக்கம்!

வணக்கம் தம்பி எப்படி இருக்கீங்க?

ம் நல்லா இருகேன் சார்.

வீட்ல எல்லாரும் சௌக்கியமா? அண்ணன் லெட்டர் போட்டாரா?


அண்ணனனா? ,சார் நெசமாலுமே என்ன தெரியலையா?

நீங்க சவுந்தர் பையந்தானே?

இல்ல சார் நீங்க மறந்துட்டீங்க!

ஓகே பரவாயில்ல நானே சொல்லிடுறேன்.

எனக்கு தெரிஞ்ச பீட்டர் இங்கிலீஸ்ல விட்டேன் பாருங்க.


on the mid night,the way of pattukoottaii to vedaaranyam.am not sure the particular area am think thuvarankurissi .do you remember it?



தம்பீ நீங்க..............

ம் நான் நாந்தான்

அந்த நாலு பேர்ல நீங்க...

ஆமா..

ஏதோ குமாருன்னு வருமே!

ஏதோ குமாரு இல்ல செயகுமார்.

அப்பிடியே என்ன கட்டி புடிச்சாரு பாருங்க.

அம்மா இங்க கொஞ்சம் வாங்களேன்!

அப்பிடியே சத்தம் போட்டாரு ,மொத்த கல்யாண கூட்டமும் அப்பிடியே திரும்பி பாக்குது.

அம்மா இந்த தம்பி யாருன்னு தெரியுதா உங்களுக்கு? செயகுமார்.

எந்த செயகுமார்?

அதாம்மா துவரங்குரிச்சி மேட்டரு

அய்யோ அந்த தம்பியா இது ?

ஆளே தெரியலே ரொம்ப மாறி போயிருக்கு.

அப்பிடியே அந்த அம்மாவும் என்ன கட்டிபுடிச்சி (அப்போ எனக்கு வெக்க வெக்கமா வந்துச்சி பாருங்க) அன்னிக்கி மட்டும் நீங்கள்ளாம் இல்லன்னா என் புள்ள உசிரே போயிருக்கும் ,ஸ்ஸ் நெனச்சாலே அடி வயிறு கலங்குது,

ஆமா அப்பறம் நாங்க வரச்சொன்னோமே ,ஏன் நீங்கல்லாம் வரல்ல?
இன்னிக்கி சாய்ங்காலம் பொண்ணு மாப்பிளையோட நாம போறோம் ,அப்பிடியே எங்க வீட்டுக்கும் வந்துட்டு போகலாம்.

இல்லீங்க இன்னொரு நாளக்கி வாரேனே.

நாமதான் இப்போ அந்த இடத்தில மேனாப்தி மேட்ச். டாக் ஆப் த மேட்டர்.

பஸ்ஸுல அன்னிக்கி சைட் அடிச்ச பிகர் இனிக்கி வந்துருக்குமா?

முகம் கூட ஞாபகம் இல்லயே. நம்மதான் இப்போ ஹீரோவயிட்டோமே. சார்கிட்டயே கேக்கலாமே?

சார் உங்க ஒய்ப் சிஸ்டரெல்லாம் வரலையா?

இதோ நிக்கிராங்களே!

அந்த பிகர் கிட்டேயிருந்து ஒரு சின்னத புன்னகை நம்மள நோக்கி பறந்து வந்துச்சி பாருங்க.

அப்பிடியே எல்லாரையும் கலட்டி விட்டு அந்த பொண்ண ஓரம் கட்டுனேன்

ஒங்க நேம் என்னங்க சாரி மறந்துபோச்சு.

,,,,,,,,,,,,

என்ன படிக்கிரீங்க?

பி.எஸ்.ஸி மேத்ஸ் பர்ஸ்ட் யியர்

ஓ நைஸ்

.............
.............
.............
.............
ஒரு மணி நேரம் கடலை..

சாப்பிடாதவங்க சாப்பிட வாங்கோ.

ம் சாப்பிட போகலாமா?

ம் போகலாமே!

கடசி பந்தியா அவசரம் இல்லாம சப்பிடலாமே !அங்கேயும் கடல!

சாப்பிட்டு கை கழுவும் போது பாருங்க கல்யாண போண்ணு ஓடி வந்து,

எங்கடி போனே ஒன்ன எங்கெல்லாம் தேடுறது?

அந்த பிகர கல்யாண பொண்ணு அழச்சிட்டு போயிட்டாங்க.

சரி வீட்டுக்கு கிளம்புவோம்னு திரும்பினா எதிர்ல எங்க மாமி

என்ன குமாரு இந்த பந்தல்லயே மேள தாளம் எல்லாம் இருக்கு. ஒக்கேன்ன சொல்லுங்க முடிச்சிரலாம்!

ம்ம் என்ன சொல்ரீங்க.

என்னத்த சொல்றது அதான் அந்த பொண்ணோட உருகி உருகி பேசிட்டு இருந்தீங்களே!

நீங்கள்ளாம் ஸ்கூல் வாத்தியார் தானா?

ஏன் அதுல என்ன சந்தேகம்?

இல்ல ஒரு வயசு பொண்ணும் பையனும் பேசிட்டு இருந்தா உடனே காதல்,கல்யாணம் இத தவிர வேற விஷயமே பேசமாட்டோமா?

சாரி குமாரு தப்பா நெனச்சிக்காதீங்க ! ஜஸ்ட் பார் பன் ,தட்ஸ் ஆல்.

சரி இதுக்கு மேல இருந்தா மண்ட காஞ்சிரும், உறவு காரங்க கிட்ட சொல்லிட்டு கெளம்பும் போது அந்த பொண்ணுகிட்டேயும் ஒரு வார்த்த சொல்லிட்டு போகலாம்னா ,பொம்பளைங்க கூட்டத்தில எப்பிடி போயி பாக்குறது?

சரி நாம குடுத்து வச்சது அவ்லோதான்!
விடு ஜூட் ன்னு செருப்ப மாட்டிகிட்டு நிமிரும்போது .
எதிரே அந்த பொண்ணு!

ம் கிளம்பிட்டீங்க போல?

கல்யாணம் முடிஞ்சி நாலு மணி நேரம் ஆயிடிச்சே.ஒரு வேல சாப்புடதான் மொய் எழுதினேன்!

அம்மாதான் கூப்புட்டாங்களே, பொண்ணு மாப்பிள கொண்டு வந்து விட்டுட்டு அப்பிடியே வீட்டுக்கு வந்துட்டு போவலாம்ல?

இல்ல கொஞ்சம் அவசர வேலை இருக்கு (ஒரு மண்ணு வேலையும் இல்ல)

சரி எப்ப வீட்டுக்கு வாரீங்க?

ம் நெக்ஸ்ட் சண்டே?

ஸ்யூர்?

என்ன நீஙக நம்பலையில்ல?

அய்யோ ஏன் இப்பிடியெல்லம் பேசரீங்க?

ஒகே ஸ்யூரா வருவேன் போதும?

தாங்க்ஸ்

ஓகே சீ யூ பை பை!

டேக் கேர்

டாட்டா..!

டாட்டா..!........



அந்த பொண்ணு சொன்ன டாட்டா இன்னும்

என் மனசில பாட்டா நிக்கிதுங்க!.................................................

Receomand this post to other reades :

16 Comments:

At 5:31 PM, Blogger சிவா said...

சிங்! காத்திருந்து கடைசி பாகத்தையும் படிச்சாச்சி. ரொம்ப நல்ல காரியம் எல்லாம் சொய்விய போல?. நல்லா கொண்டு போனீங்க. அடுத்து என்ன :-). உங்க டாட்டா-வோட தொடர்ச்சியா?.

 
At 6:21 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் ரொம்ப சந்தோஷம் சிவா! ஒடோடி வந்து படிச்சிரிக்கிரீங்க !மனுஷாளுக்கு மனுஷா உதவிதானே வாழ்க்கை! தனி ஒரு மனிதன் எப்படி வாழ்வது சொல்லுங்க? என்னால மட்டும் சமயலுக்கு வேண்டிய எல்லா சாமானும் உற்பத்தி பண்ணமுடியுமா? இன்னொருத்தர சார்ந்து தானே இருக்கிறோம் .வாழ்க்கை பயணமும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை ,அன்பு ,அறவணைப்புதானே ! .மீசை முளைக்காத அந்த சின்ன வயசுல என் மூலமா ஒரு கல்யாணம் !.பெரிய சந்தோஷம் இல்லையா? ஏதோ திருப்பத்துல அவங்கள நிச்ச்யம் சந்திப்பேன் .அப்போ, இந்த பிளாக்ல எழுதினதையும் சொல்லுவேன்!

 
At 6:26 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் புதுவை. வருகைக்கு நன்றி நண்பரே! கல்யாணம் !......அப்பிடீன்னா என்னாங்கோ! நான் ரொம்ப சின்ன பையனுங்க!

 
At 11:44 PM, Blogger சினேகிதி said...

aha appa adutha thodarkathai ready pola..sari sari elluthunga vasikathane nanga ellam irukiroom.

 
At 4:55 AM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க பல்லவி.செய்யுற காரியத்துல எங்கேயோ ஒரு மூலையில சுய நலம் ஒளிஞ்சிகிட்டு இருக்குமில்ல! அதாங்க சந்தோஷம்,அதுதானே வேணும்!

 
At 4:59 AM, Blogger சிங். செயகுமார். said...

எங்கடா நைட் போஸ்ட் பண்ணுனோம் நம்ம சினேகிதிய காணுமே! நெருப்ப கன்டு பயந்து தூங்குராங்க போல காலையில மெயில் பண்ணிக்கலாம் .அடடே இங்க பாருங்க .வாங்க சினேகிதி எப்போ வந்தீங்க, நெருப்பு பயமெல்லாம் போயிடிச்சா?

 
At 5:05 AM, Blogger சினேகிதி said...

This comment has been removed by a blog administrator.

 
At 5:06 AM, Blogger சினேகிதி said...

very good samalification Sing :-) (don't look 4 the meaning of samalification in ur dictionary it won't be there)

 
At 8:52 PM, Blogger தாணு said...

ஜெயகுமார்,
இதுதான் இன்னொரு கதையா? இது தொடர்கதையா சிறுகதையா? இல்லை விடுகதையா (அ) விட்டுட்ட கதையா? எந்த ட்ராக்லே இருக்குன்னு தெரிஞ்சாத்தானே அதுக்கேத்தபடி குமைக்க முடியும்!

 
At 10:11 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் தானு அக்கா! வலைபக்கம் உங்கள் வருகைக்கு நன்றி! முதலிரண்டு பாகத்தினை படித்தீர்களானல் உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்! சுட்டிகளை கவனித்தீர்களா?

 
At 3:38 PM, Blogger ramachandranusha(உஷா) said...

என்னமோ தம்பி, அந்த பொண்ண ஹ¥ரோவுக்கு, அதாவது உங்களுக்கு இல்லை, கல்யாணம் செஞ்சி வெச்சிருக்கலாம் :-)
விமர்சனம் என்றால், கொஞ்சம் அங்கங்க வெட்டிடலாம். நீளம் அதிகமா இருக்கு!

 
At 4:14 PM, Blogger சிங். செயகுமார். said...

வலைபக்கம் வந்து வாழ்த்திய உஷா அக்காவுக்கு நன்றிகள்!கல்யாணத்துக்கெல்லாம் அப்பவும் சரி இப்பவும் சரி வயசு இல்லயே! உங்க நல்ல எண்ணத்துக்கு சந்தோஷம்.கதை எழுதி பழக்கமில்லை
இது ஒரு முயற்சிதான்.அடிக்கடி வாந்துட்டு போங்க!

 
At 8:08 AM, Blogger குமரன் (Kumaran) said...

பாஸ்....தாமதமா வர்றதுக்கு மன்னிச்சுக்கோங்க. இந்தப் பதிவு போட்டவுடனேயே படிக்கிறதுக்காக எடுத்துவச்சுட்டேன், வீட்டுல போய் படிச்சுக்கலாம்னு. இன்னைக்குத்தான் படிக்க முடிஞ்சது.

கதை நல்லா இருக்கு. முதல் கதையா உங்க சொந்தக் கதையைப் போட்டுட்டீங்க. இன்னும் கைவசம் வேற அதிரடி கதைகள் இருக்கும்ன்னு நினைக்கிறேன். சீக்கிரம் ஒவ்வொன்னா போட்டுத் தள்ளுங்க. படிக்கிறதுக்குத் தான் நாங்க இவ்வளவு பேரு இருக்கோமே...

 
At 10:28 AM, Blogger b said...

அருமையாக வந்திருக்கிறது ஜெயக்குமார். தொடர்ந்து எழுதுங்கள். பேச்சு வாக்கில் அமைந்த அருமையான கதை.

 
At 11:32 AM, Blogger சிங். செயகுமார். said...

சந்தோஷம் குமரன்! கூடல்ல கதை போடுங்க போட்ட உடனே ஓடி வந்து படிக்கிறேன்

ஒங்களுக்கு குடுத்த பெயரை எனக்கு தூக்கி குடுத்திட்டீங்க! எவ்ளோ பெரிய மனசு!

 
At 11:34 AM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி மூர்த்தி! உங்கள் ஆசீர்வாதங்கள் நனவாகட்டும்!

 

Post a Comment

<< Home