நான் காதலுக்கு எதிரியா? -தொடர்ச்சி.
முதல் பகுதியை இங்கேபடிச்சிட்டு வாங்களேன்
அந்த சமயத்துல அந்த சின்ன பொண்ணு (நம்ம ஹீரோயின் தங்கை)நண்பர் வீட்டுக்கு வருவதும் போவதுமாய் இருந்துருக்கு சின்ன சின்ன தூதெல்லாம் சாட மாடயா நடந்திருக்கு, தலைவருதான் எக்ஸர்ஸைஸ் பண்ணுவாரா பொண்ணுக்கு புடிச்சி போச்சு.
(சினிமா நிகழ்வும் நெசத்தோட ஒத்து போகுமோ?)
நானும் நண்பரும் ஒருநாள் நடந்து போய் கிட்டு இருக்கும் போது பொண்ணுங்க சைக்கிள்ள முன்னாடி போறதும் சுலோ பன்றதும் நடந்திச்சி.நமக்கு அந்த எழவெல்லம் ஒன்னும் அப்ப புரியல.பாட்டு போட்டதுக்கு அப்புறம் தான புல் மேட்டரும் தெரிய வந்துச்சி!
மூர்த்தி நீங்க வேற வீடு பாத்துகுங்க,இல்ல நான் வெளியே போயிடுறேன்.
இல்ல ஜேகே இனி அந்த பொண்ணுங்க இங்க வரமாட்டங்க.
சரி அதையும் பார்க்கலாம்.
மறுநாளும் அதே கூத்து.
பொன்ணுங்க வந்து கும்மாளம் போடுராங்க. (அவங்களுக்கு அது ஒரு ஜாலியான மேட்டர். எனக்கு தெரிஞ்ச வரையில காலேஜிலெல்லாம் பொண்ணும் பையனும் கண்ணும் கண்ணும் பாத்துகிட்டாலே போதும், கூட இருக்கிற பசங்க மத்ததெல்லாம் நடத்தி வச்சுருவாங்க .இந்த பையன் அந்த பொண்ண பத்தி ஒன்னுமே சொல்லி இருக்க மாட்டான் ,ஆனா சொல்லாத விஷயங்கள சொல்லி அப்பிடியே லவ்வ டெவலப் பண்ணி உட்டுடுவாங்க. அப்புறம் ரெண்டும் அங்கே இங்கே அலைஞ்சிட்டு இருக்கும் )
அத மாதிரிதான் இந்த லவ்வுக்கும் ஆறு பொண்ணுங்களும் கூட சுத்துவாங்க.
என்ன மாப்ள இனி இந்த பக்கம் வரமாட்டங்கன்னு சொன்னீங்க கச்சேரி மருபடியும் ஆரம்பிச்சிட்டே.
இந்த விஷயங்களெல்லாம் வீட்டு கார அக்காவுக்கு புரியாதுன்னு நெனச்சிகிட்டீங்கா?
நமக்கு குடுக்கிற மரியாதையை நாம காப்பாத்திகலன்னா. திடீர்னு நாளக்கி சொல்லுவாங்க வீட்ட காலி பண்ணுங்கடா நாய்களான்னு அது நல்லவா இருக்கும்?
சொன்னா அந்த புள்ள கேக்க மாட்டேங்குது நான் என்ன பண்ண?
சரி என்கிட்ட விட்டுடுங்க மேட்டர.
என்ன பண்ணலாம் சொல்லுங்க ஜேகே.
ஏழு பொண்ணுங்கள்ள ஒரு பொண்ண கூப்புட்டு.
இங்க வாம்மா.
என்னங்ண்ணா!
டுயூஷன் முடிஞ்சிதா?
முடிச்சிட்டுதாங்கண்ணே வாரோம்.
ஓகே இப்ப நீ என்ன பண்ணுர உன் பிரண்ட்ஸ் எல்லாரரையும் கூட்டிகிட்டு காலேஜுக்கு எதிர்தாப்புல கிரவுண்ட் இருகுல்ல அங்க வந்துடு.மூர்த்தி ஏதோ பேசனுமாம்
வரச்சொன்னாப்புள,இப்போ இல்ல நாங்க போயி கொஞ்ச நேரம் கழிச்சி,
சரிங்ண்ணே.
நண்பரும் நானும் அந்த எடத்துக்கு போய்ட்டோம்.. சிறிது நேரம் கழித்து அந்த பட்டாளமும் வந்து சேந்துச்சி.
என்னயா நீங்க பேசுரிங்களா இல்ல நானே பேசிடட்டா?
நீங்களே பேசிடுங்க ஜேகே
ம் அனிதா பேசலாமா?
ம் பேசலாமே?
மூர்த்தி என்னதான் சொல்ராரு?
அவரு பிரண்டு நீங்கதானே உங்ககிட்ட சொல்லி இருப்பாரே.
எல்லாம் சொன்னாரு.
லவ் எந்த அளவுல போயிட்டு இருக்கு?
(ஏரியாவே ஒரே சிரிப்புதான்)
ம் சொல்லுமா?
சரி லவ் பண்ணுங்க வாண்டான்னு சொல்லல ,அதுக்கு இப்பிடியா ஊர் கூடி ஆர்பாட்டம் பண்ணுவாங்க?
நான் என்னத்த சொல்ல ,நீ என்னத்த புரிஞ்சுக்க போரே?
ம் .. ரொம்ப இருட்டி போயிட்டு சீக்கிரம் சொல்லுங்க.
அப்பதான் எனக்கே உறைக்குது ரெண்டு பசங்க ஏழு பொண்ணுங்க ,யாரும் பாத்தா என்ன நினைப்பங்க
சரிம்மா சீக்கிரம் சொல்லி முடிச்சரேன்.
இந்த லவ்வெல்லம் நல்லா இருக்கும்னு நெனக்கிறியா?
நாங்க யாரு எந்த ஊரு அது, எந்த மாவட்டத்துல இருக்கு? அதுனாலும் தெரியுமா?
ஒன்னே ஒன்னுதான் தெரியும் ,பேரு தெரியும் எங்க வேல பாக்குரோம்னு தெரியும், வேர என்ன படிச்சிருக்கிறோம்னு தெரியும்.
அவ்ளோதானே? உங்க அய்யா அம்மாவெல்லாம் என்ன பொசிசன்ல இருக்காங்க? நளைக்கே நீ ஒரு டாக்டராகவோ,இல்ல கலெக்டராகவோ ,வருவதற்கான ஸ்கோப் இருக்கு - பணமும் இருக்கு, இங்க பாரு இத விட நல்ல வேல கெடச்சா அப்பிடியே கெளம்பி போய்டுவோம்.
இந்த வயசுல காதல் அது இதுன்னு கற்பனை பண்ணி எதிர்காலம் பாழா போய்டுமே! உனக்கே தெரியும் போன மாசத்துக்கும் இந்த மாசத்துக்கும் உன்னோட படிப்புல எவ்ளோ வித்தியாசம்னு. இதெல்லாம் பேசரதுனால நான் காதலுக்கு எதிரானவன் இல்ல, இந்த படிக்கிற வயசுல வேண்டாமே. இந்த விஷயம் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா எவ்ளோ சங்கட படுவாங்க. நீங்க பண்ற சேட்டை எங்களையும் அசிங்க படுத்துதே, பிளீஸ் இதுக்காக போய் அழாதே, இப்போ நான் எத சொன்னாலும் உனக்கு ஒரைக்க போறதில்லே . வேண்டாம் எல்லாத்தையும் விட்டுட்டு படிப்புல கான்செட்ரேட் பண்ணு .அதான் உனக்கும் நல்லது உன் கேரியருக்கும் நல்லது. காத்லிக்கிறது தப்பில்லை,அதுவே உன்னோட காரியருக்கு இடஞ்சல் இல்லாம இருந்தா,ஆனா இந்த வயசுல அதெல்லாம் புரிஞ்சுகிக்கிற பக்குவம் இப்போ உனக்கு பத்தாது . நான் இதுக்கு மேல பேசினாலும் அது உன் காது மடல் வரைதான வந்து சேரும்
சரி ரொம்ப இருட்டி போயிட்டு.
என்ன மூர்த்தி கெளம்பலாமா?
இனி என்ன பாக்க மாட்டிங்கள்ள ,அப்புறம் பேசவே மாட்டிங்களா?
அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சிட்டா
சரி கெளம்புங்க .
மெயின் ரோடு வரைக்கும் கொண்டு விட்டுட்டு நண்பரோட நான் வீட்டுக்கு வந்துட்டேன்.
அன்னிக்கி ராத்திரி நமக்கு தூக்கம் போச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னதான் பக்கதுல ஒரு பொண்ணூ லவ் பெயிலியர்ல சூசைடு பண்ணிகிட்டா!
ஏது நாம வேற கணமா லெக்சரிங் பண்ணியாச்சி, பாவம் சின்ன புள்ள வேற,
எதாவது ஒன்னு கெடக்கு ஒன்னு ஆயிட்டா ,விடியரத்துக்குள்ள நம்மள குழி வச்சுடுவானுக,
நைட் பத்து மணியிலேர்ந்து விடியிர வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ மொட்ட மாடிக்கு போயி அந்த புள்ள வீட்டாண்ட எதும் லைட் வெளிசம் தெரியுதான்னு பாத்து அன்னிக்கி தூக்கம் போச்சு.
விடிய கால 5 மணி இருக்கும் அப்பிடியே அந்த பொண்ணு வீட்டு பக்கமா ரோட்டு வழியே பார்த்து கிட்டே போறேன்.
அப்பா கொஞ்சம் மூச்சு வந்துச்சி,
அவங்கம்மா வாசல்ல கோலம் போட்டு கிட்டு இருந்தாங்க ஆக ஒன்னும் அசம்பாவிதம் இல்ல,இருந்தாலும் அந்த புள்ளய பார்க்கலையே. அன்னிக்கி ஆபீஸ் மாட்டம் போட்டுட்டு ஏழு புள்ளைங்களும் ஸ்கூல் போறாங்களான்னு மொட்ட மாடியில போய் நிக்கிறேன் ஆறு புள்ளைங்கதான் சைக்கிள்ள போறாங்க!
கிடு கிடுன்னு கீழ எற்ங்கி , எங்க வீட்டு புள்ள கிட்டேயும் இத பத்தி கேக்க முடியாது
என்ன பண்ணலாம்.
அன்னிக்கி சாயங்காலம் தான் தெரிஞ்சிச்சி அந்த புள்ளைக்கு உடம்பு சரியில்ல அப்பிடீன்னு
அப்பாட அப்பதான் உயிரே வந்துச்சி.
காலையிலேர்ந்து ஒன்னும் சாப்பிடலையா
வயிறு ஒரு பக்கம் இழுக்க ஆரம்பிச்சிட்டு.
அப்பறம் கொஞ்ச நாளு சைலன்டா போயிட்டு இருந்திச்சி
மருபடியும் ரெண்டு பேரும் எனக்கு தெரியாம லெட்டர் பறிமாற்றம் நடந்திருக்கு.
அம்மாகிட்ட சொல்லி புடுவேன் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னது அப்பறம் அப்புறம் பிரச்சன இல்லாம போயிட்டு இருந்திச்சி.
நானும் நண்பரும் அப்புறம் அந்த ஊர விட்டு வந்துட்டோம்.
இருந்தாலும் நங்க தங்கி இருந்த வீட்டு அக்காவுக்கு அடிக்கடி தொலைபேசுவேன்.
சமீபத்துல பேசும் போது .
அக்க உங்க கிட்ட ஒரு பெரிய விஷயத்த மறைச்சிட்டோம்.
என்ன ஜெய் அப்பிடி எங்கிட்ட மறைச்சிட்டே?
அது வந்து ஒரு சின்ன மேட்டர் நடந்து போச்சு, அத அப்போ உங்க கிட்ட சொல்லல,
என்ன விஷயம் சொல்லு கண்ணூ
அது வந்து உங்க வீட்டுக்கு பக்கத்துல அனிதான்னு ஒரு பொண்ணு இருக்கிள்ள அத பத்திதான்.
நீ சொல்ல வேணாம் கண்ணு ! ஏ டூ இசட் எனக்கு எல்லாம் தெரியும்!
டேப் ரெக்காடுல பாட்டு போட்டது ,கிரவுன்ட்ல போய் பேசுனது, மொட்ட மாடியில மணிக்கு ஒருதரம் நீ ஏறி எறங்குனது..........
எல்லாம் தெரியும் கண்ணு!
அய்யோ ஒங்களுக்கு ஒடம்பெல்லாம் கண்ணா . அப்ப ஏன் அக்கா நீங்க ஒரு வார்த்த கூட அத பத்தி பேசல
அதான் கண்ணு இந்த அக்கா.
என்னதான் நடக்குதுன்னு நானும் பாத்துகிட்டு இருந்தேன்.
அதான் நீ ஆப் பண்ணிட்டியேப்பா ,அதுக்கு மேல உங்க கிட்ட அத பத்தி கேட்டு சங்கட படுத்த விரும்பல.
சரி விடு கண்ணு அத பத்தி இப்ப ஏன் பேசி கிட்டு.
இல்ல அக்கா இப்போ அந்த பொண்ணு..
ஏன் மருபடியும் சைட் அடிக்கனுமா?
நீங்க எப்ப வந்தாலும் நம்ம வீட்டுல தங்கிக்கலாம்
அய்யோ இப்பிடியெல்லாம் பேசி கொல்லாதீங்க அக்கா!
இப்ப அந்த பொண்ணு என்ன பண்றா?
சொன்னா ஆச்சயரியபடுவ!
ம் சும்மா சொல்லுங்க அக்கா.
அவ இப்போ பல் மருத்துவ கல்லூரி மாணவி!
Receomand this post to other reades :
20 Comments:
ஜெயக்குமார் எப்பவுமே பக்கத்து இலை பாயாசம் பற்றியே பேசறீங்களே, எப்போ சொந்தக் கதை பற்றி சொல்லப் போறீங்க?
தம்பி சிங்கு! காதல் கதைகளா அள்ளி வுடுறீங்களே! ரொம்ப பொறுப்புள்ள பையனா வேற இருக்கிய! எல்லா கதைலயும் அட்வைஸ் அள்ளி விடுறீய.
கதை முழுவதும் நல்லா சொல்லிருக்கிங்க! சுவாரஸ்யமா இருந்தது.பேச்சு நடை நன்றாக இருந்தது. பாட்டு செலக்சன் நல்லாருக்குய்யா :-). ஒங்களுக்கு யாராவது பாட்டு போடலையா. இல்லன்னு சும்மா பொய் சொல்லாதிய. அந்த பாட்டையும் தான் அப்படியே வலை ஏத்தறது :-). அடுத்த கதை எப்போ?
தானு! அக்கா இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒன்னுமே புரியலடான்னு முத பகுதியில சொல்லி புட்டிங்களா. எனக்கு அழுகையே வந்துட்டு, நானும் பல முறை திருப்பி திருப்பி படிச்சு பாத்துட்டேன். ரெண்டு மூனு பேருகிட்ட மின்னசல் அனுப்பி என்ன இப்பிடி சொல்லிட்டாங்களேன்னு கேட்டேன். இப்பவாச்சும் புரிஞ்சுதே! சந்தோஷம் அக்கா.அப்புறம் நம்ம ஊட்டு ஆடு உடம்பு சுகமில்லாம இருந்துச்சே, நல்லா இரை எடுக்குதா? என்னது? நம்ம கதையா போச்சு போங்க ,எங்க அப்பாரு ஊர்ல உக்காந்து எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருப்பாரு! உங்களுக்கு தனி மெயில்ல என்னோட கதைய சொல்லி புடுறேன்.
சிவாண்ணே வணக்கோமுங்க!
இந்த அட்டுவைஸ் இருக்கே சொல்லுறது ஈசி , நடை முறை படுத்துறது.......
நமக்கு பாட்டா?
என் சோக கதைய கேளு தாய் குலமே..................
வேணாம் சிவா உங்க கண்ணுல தண்ணி வந்தா பரவா இல்ல,இரத்தம் வந்துட்டா!
பர்சனல் மேட்டரெல்லாம் நாம தனிய பேசிக்குவோம்
நன்றி சிவா ,உங்களின் பாராட்டுக்குகள் என்னை எழுத தூண்டட்டுமே!
யார் யாருக்கு `ரூட்' போடறாங்கன்னுதான் நேத்து புரியாமல் இருந்தது. கொஞ்சம் ட்யூப் லைட் ஆயிட்டமோன்னு கவலை வந்துட்டுது, உடனே மலரும் நினைவுகளைத் தோண்டி ஒரு கவிதை எழுதிட்டேன். `மேரி' நர்சிங் ஹோம் வாசலில் படுத்துட்டு ஜாலியா சைட் அடிச்சுகிட்டு இருக்குது!
பரவாயில்ல விடுங்க தானு அக்கா! ஆமா அது யாரு மேரி நர்சிங் ஹோம் வாசல்ல சைட் . அடிக்கிறது.படுவா ராஸ்கல் பசங்க .சைட் அடிக்க வேற இடமே இல்லயா. இனி அந்த பக்கம் பசங்க வரமாட்டங்க அக்கா. உங்க கவிதை படிச்சேன் சூப்பர்!
நல்ல ஆக்கங்கள் அனைத்தும் படித்தேன் சுவைத்தேன் எல்லம் அருமை அருமை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள்.
வணக்கம் சிந்து ! நல்ல இருக்கீங்களா ! இப்ப வாச்சும் நம்ம ஊடு கண்ணுக்கு தெரிஞ்சுதே! ரொம்ப நன்றி!
உங்க வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சி ....ஏதும் விசேஷம் இருக்கா?
செயகுமார்,
போனவாரம் ரொம்ப பிஸியாப் போச்சுப்பா.அதான் வீட்டுப்பக்கம் வரலை. இப்ப எல்லாத்தையும்
ஒரே மூச்சுலே படிச்சு முடிச்சேன்.
கதைகள் நல்லா அருமையா இயல்பான நடையிலே வந்துருக்கு.
பல் மருத்துவ மாணவின்னா நல்லதுதான். நாளக்கு பல்லைத் தட்டுனாலும்,
திருப்பிக் கட்டிருவாங்கல்லே:-))
நானும் காதலுக்கு எதிரி கிடையாதுப்பா.
மேர், சைட் அடிக்கற அளவு குணமாயிருச்சா? வெல்டன் மேரி!
வணக்கம் துளசிக்கா!
சந்தோஷம் உங்கள் பாராட்டுக்கு!
"பல் மருத்துவ மாணவின்னா நல்லதுதான். நாளக்கு பல்லைத் தட்டுனாலும்,
திருப்பிக் கட்டிருவாங்கல்லே:-))"
நிச்சயமா !. காசு குடுக்காம வைத்தியம் பண்ணிக்களாம்ல!
தம்பி, இது கதை என்று சொல்ல முடிமா என்று தெரியவில்லை. கொஞ்சம் அங்க இங்க தட்டி சரி செஞ்சா கதையாக்கிடலாம் என்று தோணுகிறது. ஆனா எப்படி என்று கேட்டு விடாதீர்கள் :-)
ஆரம்பத்தில் எல்லாருக்குமே இருக்கும் குழப்பம் தான். முதலில் சின்ன கதையாய் எழுத பழகுங்க. எழுதி இணைய இதழ்களுக்கு அனுப்புங்க. இந்த கதையும் கொஞ்சம் நீளம் அதிகம்தான். பிறகு சொல்லும் முறையிலும் கொஞ்சம் குழப்புகிறது.
எப்படி இருந்தாலும் படித்து விமர்சிக்க நாங்க இருக்கிறோம், எழுதுங்க, எழுதுங்க!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணக்கம் உஷா அக்கா! இது கதையே அல்ல ,கடந்து வந்த பாதையின் வரிகள்தான். என்னை சீர்படுத்த சான்றோர்கள் நீங்கள், இருக்கையில் கதையும் எழுத முயற்சிக்கின்றேன். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! விமர்சனங்கள்தான் ஆக்கங்களுக்கு உற்சாக டானிக்.சந்தோஷம் உங்கள் விமர்சனங்களுக்கு.அடிக்கடி வந்து செல்லுங்கள்
நன்றாக வந்திருக்கிறது ஜெய். உஷா சொன்னது சரிதான். கொஞ்சம் ஜிகினா வேலைகள் செய்தால் வார இதழுக்கு சூப்பர் தொடர் கிடைத்து விடும். உற்சாகத்துடன் தொடருங்கள்.
சந்தோஷம் மூர்த்தி ,கதைதானே எழுதிட்டா போச்சு,முயற்சி செய்கிறேன்.
மேலே சொன்னவர்கள் கருத்துகளை வழிமொழிகிறேன். :-)
எதுக்கு வம்பு, புரியலைன்னு சொன்னா சிங்கு கோவிச்சுகுவார்.
உங்கள் கருத்துக்கு நன்றி குமரன்,தரத்தினை மேம்படுத்த விழைகிறேன்
செயகுமார்..
நல்லா இருக்கு
முதல் பாகம் படிக்கும்போது கொஞ்ச்ம் குழம்பிட்டேன்..
அதுல இரண்டாவது காட்சிய முதலாவதா போட்டிருந்தா குழப்பம் வந்திருக்காதுனு நினைக்கிறேன்
இதப் படிச்சா உங்க வயது தெரியும்னு சொன்னிங்க.. எனக்கு தெரியலையே.. 2000ல வேலை பார்த்திங்கனு இருக்கே அதை மட்டும் வச்சி உங்க வயசை எப்படி சொல்ல முடியும் :)
நல்ல அறிவுரை சொல்றீங்க போல.. காதல் அனுபவம் ஏதேனும் இருக்கா என்ன :)
அன்புடன்
கீதா
மேலே உள்ள முந்திய கதை லிங்க் சரியா வேலை செய்யல! கதை நல்லா இருக்குபா, மகளிர் மட்டும் கதையா என்ன?
வருகைக்கு நன்றி நண்பரே வெ.நாதர்.லிங்க் நல்லா வேலை செய்யுது .முயற்சி செய்து பாருங்களேன்!
வாங்க கீதா ! இல்லன்னு சொன்னா நம்பிடவா போறீங்க!
Post a Comment
<< Home