நினைவஞ்சலி!
இயற்கை சீற்றங்கள் பல வகையில் கண்டும் கேட்டும் பாதிப்புக்கள் அறிந்திருந்தாலும் , டிசம்பர் 26 - 2004 இந்தியாவையே உளுக்கிய துயர நாள். தமிழ் அகராதிக்கு ஓர் புதிய சொல் "சுனாமி". நாகபட்டினம் மாவட்டதில் மட்டும் 40,000 க்கும் மேற்பட்ட உயிர் சேதங்கள். எங்கள் ஊர் கடற்கரை மீனவர் குழுமத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85. கணக்கிலடங்கா கால்நடைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறிய காட்சிகள்,புதையுண்ட பிணங்கள்,காக்கையும் குருவிகளும் குதறிய கோரமான பிணங்கள், யார் என்று அறியமுடியாத அநாதையாய் போன பிணங்கள் காண்போரை திகில் கொண்ட அந்த கருப்பு நாள் இன்றோடு ஒரு வருடம் ஆயிற்று!
கடற்கறை ஓரங்களில் அமைந்த வீடுகள் மூழ்கடித்த சேற்றுக்குள் சின்ன சின்ன குன்றுகளாய் காட்சியளித்த இடமும்,ஓடி விளையாடிய கடற்கரை மணலும் கரு நிற சேறும் சகதியும் படர்ந்து மணலில் நிறங்களில் மாற்றங்கள்!
சுனாமி நிகழ்ந்த அந்த தினம் , வருஷகணக்கில் தூரமாய் போன என் நண்பரிம் முகம் காண
மலேசியாவில் நிறைந்த சந்தோஷத்தில் இருந்த வேளையில், இடியென ஓர் செய்தி சுனாமி என்னும் சூராவளி சீற்றம்! கலங்கி நிற்கும் வேளையில் , பேரிடியாய் மற்றொரு செய்தி. நண்பரின் மனைவியும் சுனாமியில் மாயம்!
உலக சாதனை "கின்னஸ்" பதிவில் இடம்பெற்ற நாலுவேதபதி என்னும் கிராமத்தில் ஒரே நாளில் 50,000 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து வரும் சூழலில்,ஆடு மாடுகளுக்கு அந்த இளம் மரக்கன்றுகள் இரையாகாமல் தன்னார்வ நோக்கோடு பராமரிப்பு மேற்பார்வைக்காக சென்ற,பச்சிளம் குழந்தைக்கு தாயான - என் நண்பரின் மனைவியும் சுனாமியில் விலாசம் தெரியாமல் போனார்!
ஊரிலிருந்து ஒரு நண்பர் " தம்பி அரசு உதவிக்கு முன் அண்டை மாநிலத்திலிருந்தும் நல்லெண்ணம் கொண்டோரின் நிவாரண பொருட்களும் ஊரை நிறைத்து விட்டன. குளித்து மூன்று நாட்களாயிற்று .மக்களோடு மக்களாய் மீட்பு பணியில் நான் இங்கே!"
ஊடக செய்திகளை பார்க்கும் வேளையில் மீட்புபணியில் என்னுடைய பங்கும் இடம்பெறாமல் போனதில் , இப்பொழுதும் மனதில் வருத்தங்கள்.நண்பர்கள் நன் முயற்சியால் சிதறுண்ட குடும்பங்கள் குழந்தைகள் ஒருங்கிணைப்பு,குடியிருப்பு கூடாரங்கள் அமைத்து கொடுத்த அவர்களை நன்றியோடு நினைத்து பார்க்கின்றேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக மாவட்ட ஆட்சி தலைவரின் சீரிய தலைமையின் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகள் பழைய நிலைக்கு திரும்புகின்றன. அனாதையய் போன 99 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு அனைத்து உதவிகளியும் வழங்கி அந்த குழந்தைகளோடு குழந்தையான் மாவட்ட ஆட்சி தலைவர் திரு ராதாகிருஷ்னன் அவர்களுக்கு ஒரு "சலாம்" போட்டு ,சுனாமியால் சுழற்றியடிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்!
Receomand this post to other reades :
6 Comments:
This comment has been removed by the author.
பதிவிற்கு என்ன பின்னூட்டம் இடுவது, மனமே பாரமாகிப் போனபோது
நடந்து போன விஷயத்தை பலர்...
மறந்து போய்.. புதுவருட கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும்போது...
நினைவு கூர்ந்த உங்களின் மனித நேயத்திற்கு...
ஒரு சல்யூட் தலைவா?
மனதை பிழிந்த அந்த கோர நிகழ்வை என்னோடு பகிர்ந்து கொண்ட நண்பர்- விவசாயி,பாலபாரதி,தானு அக்கா உங்களுக்கு என் நன்றிகள்
அன்பின் ஜெய்,
மனதைக் கனக்க வைத்த நிகழ்வு அது! ஓராண்டு முடிந்த பின்னும் நெஞ்சில் இன்னமும் வடுக்களாய்!!!
துயரங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!
Post a Comment
<< Home