வாழ்க்கை பயணம்...........
மூன்று புறமும் நீலக்கடல் சூழ்ந்து ஒரு புறம் உப்பு நீர் ஓடும் ஆற்றினால் சூழப்பட்ட ஓர் அழகான கிராமம்.வெளி உலகோடு இணைப்பதற்கு (சில நூறு மீட்டர் தூரம்தான்) இரு அகன்ற காங்கரீட் பாலங்கள். பதினைந்து அடி பள்ளம் தோன்டினாலே பைசா செலவில்லமல் சுவையான குடிநீர். ஆண்டு முழுவதும் வீட்டை சுற்றி ஏதேனும் சாகுபடி நடந்து கொண்டு இருக்கும்.சுகமான ,சுத்தமான சத்தான தென்றல் காற்று வருடும் இந்த சூழலில் வளர்ந்து வாழ்ந்து வரும் இளம் பொறியாளர் சந்தீப்.தந்தையை இழந்ததால் குடும்ப தலைமை பொருப்பு தன் மேல்.விதவையான அம்மா ,இவர்களோடு வசித்து வரும் நான்கைந்து வேலையாட்கள்.வீட்டு வேலைக்கும் வீட்டை சுற்றியுள்ள விளைநிலங்களில் வேலை செய்யும் இவர்களோடு நகர்கிறது வாழ்க்கை. கடலை,பருத்தி,மல்லிகை,கனகாம்பரம் தோட்டங்கள் என விவசாய வாழ்வோடு வளமாய் இருக்கும் இவன் தானே முதலாளி,தானே தொழிலாளி.யாருக்கும் கை கட்டி பதில் சொல்லி பரபரப்பான
அமைதியில்லாத சம்பவங்கள் இங்கே இல்லை.
ஊருக்குள்ளே ஆயிரம் உறவுகளில் தினம் ஒரு வீட்டில் ஏதெனும் ஓர் விசேஷம்.ஊர் கூடி உறவுகளோடு உல்லாசமான வாழ்க்கை. நள்ளிரவு 2 மணிக்கு "ஐயோ "என சிறு சப்தம் கேட்டாலும் பரபரப்பாக அனைவரும் வந்து நிற்கும் பாச பிணைப்பான வசந்த கிராமம்.
இந்த சூழ்நிலையில் சந்தீபிற்கு பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தாய் மாமன், வேலை நிமித்தமாக சென்னைக்கு புலம் பெயர்ந்து அங்கேயே குடும்பத்தோடு தங்கி விட்டனர்.
மாமாவும் மாமியும் அரசாங்க உயர்பதவியில் உள்ளனர். இவர்களுக்கு அழகான இரு நங்கைகள்.பொறியியல் படிக்கும் சின்னவளும், முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் பெரியவளும் விடுமுறை காலங்களில் சந்தீபின் வீட்டில் விடுமுறையை கழிப்பர்.
சந்தீபிற்கு சின்ன தலைவலி என்றாலும் கூட சென்னையிலிருந்து ஊர் வர துடிக்கும் மாமா! மாமியும் அது போலவே!
தன் இரு பெண்களுக்கும் சென்னையிலேயே இரு சொகுசு மாளிகையை மாமா எப்பொழுதோ கட்டி வைத்து விட்டார்.பெரிய பெண்ணை தன் மருமகனுக்கு கொடுக்கலாம் என்ற பரவலான எண்ணம் மாமா ,மாமிக்கு உண்டு. ஊரிலும் உறவுகள் அதையே பேசிக்கொள்ளும்.கல்லூரி படிக்கும் காலங்களில் மாமா பெண் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது உண்மையே. மாமா பெண்ணின் நுனி நாக்கு ஆங்கிலமும்,நகர்புறத்து நவீன நாகரீகமும்,நடை உடை பாவனையும் சந்தீபை மிரள வைத்து விட்டதே.
கிராமத்தில் கலெக்டர் வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் தோட்டத்து கிணற்றில் தண்ணீர் எடுத்து இடுப்பில் சுமந்து வருவது சாதாரண நிகழ்வு. சாப்பிட்ட தட்டையே கழுவாத இந்த நங்கையை கிராம புற பழக்க வழக்கத்தோடு சீர் தூக்கி பார்த்த சந்தீப் தன் எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் எப்போதோ அணை போட்டு விட்டான். விலக விலக தானே நெருக்கம் அதிகமாகும். மாமன் மகள் இவன் மீது கொள்ளை பிரியம் வைத்து இருந்தாள்.
சென்னையில் பணி செய்த காலங்களில் தனியே வீடு பிடித்து சந்தீப் தங்கியிருந்தான். நேரம் கிடைத்த போதெல்லாம் மாமா வீட்டுக்கு செல்வது வழக்கம். ஓர் அந்தி மாலையில் நண்பர்களுடன் மெரினாவில் பொழுதை கழிக்க சென்ற சந்தீப்,தன் மாமன் மகள் அங்கே ஓர் ஆண் நண்பருடன் இருப்பதை கண்டு அதன் பின் அவளுடன் பேசுவதை விட்டு விட்டான். மாமா வீட்டுக்கும் செல்வதில்லை.ஒவ்வொரு ஞாயிறும் மாமா வீட்டுக்கு செல்லும் சந்தீப் இந்த வாரம் செல்லவில்லை. திங்கள் கிழமை கல்லுரியிலிருந்து நேரே சந்தீப் வீட்டிற்கு சென்றாள்.அவளோடு பேச விருப்பமில்லை என்று கதவடைத்து விட்டான் சந்தீப்.சில மணிநேரம் வெளியே நின்று பின் சின்ன அழுகையோடு வீடு திரும்பி விட்டாள். மருமகன் நேற்று வீட்டுக்கு வரவில்லையே என்னமோ ஏதோ என்று அலுவலகத்திலிருந்து சந்தீபின் வீடு வந்து தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். அதன் பின் மாமன் மகள் பல முறை அழுதும் சந்தீப் முகம் கொடுத்து பேசு வதில்லை.ஏதோ சின்ன ஊடல் என்று மாமாவும் மாமியும் இதை பற்றி கண்டு கொள்ளவில்லை.
மாமாவிற்கு தொலை பேசும் போது மறுமுனையில் அவள் எடுத்தால் மௌனமே பதிலாக சில நிமிடங்கள் .நிமிடங்கள் கழிந்து மாமாவுக்கோ மாமிக்கோ கண்சாடையிலேயே ரிசீவர் கை மாறும்.இவ்வாறு வளர்ந்து வந்த இவர்களது ஊடல் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. விடுமுறையில் ஊருக்கு வரும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்களே ஒழிய வாய் பேச்சுக்கு அங்கே வேலையில்லை.
சந்தீபிற்கு கல்யாண நேரமும் வந்து விட்டது.
கிராமத்து சூழலில்தான் பெண் வேன்டும்.அதுவும் கிராமத்தில்தான் தங்க வேண்டும்,தனிக்கட்டையான அம்மாவும் அதையேதான் விரும்புகிறாள்.வயதான காலத்தில் வயிற்றில் சுமந்த மகனோடு இருக்கத்தானே எந்த தாயும் விரும்புவாள்.ஆனால் அந்த பெண்ணிற்கோ நேர் மாறான எண்ணங்கள். நகரத்து நண்பர்கள், நவீன வாழ்க்கை சுகம்,விடுமுறையில் மட்டும் கிராமம் பிடிக்கிறது.
இப்போது இருவர் உள் மனதிலும் காதல் நிரம்பி வழிகிறது.
இருந்தும்
பரபரப்பான நகர சூழல் வேண்டாம். தென்றல் காற்றோடு தென்னை மர நிழலில் பழைய சோற்றில் கலந்த பசுமாட்டு தயிர்தான் சொர்க்கம்
இது சந்தீப்
எல்லா விஷயங்களும் இணையத்திலேயே முடித்து ,இல்லத்திற்கே எல்லா பொருளும் வந்து சேரும் இனிய வாழ்க்கை நகரத்தில்தான் சாத்தியம். இதுதான் சொர்க்கம்
இது மாமன் மகள்.
இருவரும் சேர்ந்து வாழ எந்த வாழ்க்கை பயணத்தை தேர்ந்தெடுப்பது.?
காலம் சீக்கிரம் பதில் சொல்லிவிடும்.
தை பிறந்து விட்டதே!
Receomand this post to other reades :
7 Comments:
என்ன சிங்கு! இது கதையா..இல்ல கேள்விய எங்க கிட்ட கேட்கறீங்களா..பட படன்னு அவசரமா சொன்ன மாதிரி இருக்கு..நிதானமா இழுங்க (தொடரும் போட்டு தான்)...நான் பொறுமையா படிக்க ரெடி.
சிவா ஒங்களுக்கு மனசுல என்னப் படுதோ அத சொல்லுங்க ,வாழ்க்கை பிரச்சனையில்லையா?
நண்பரே மரைக்காடன் ,கதை உண்மைதான். யாருடையது என்பதைவிட என்ன தீர்வாகும் என்பதே என் அவா! நிச்சயம் இது என் கதையல்ல.
சிங். நானும் இது உங்க கதையான்னு கேக்கத் தான் வந்தேன். ஆனா ஏற்கனவே மறைக்காடன் அதைக் கேட்டு நீங்களும் மறுத்துவிட்டீர்கள். ஹும்.
இதுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒர்க் அவுட் ஆகும் தீர்வு இல்லை. சம்பந்தப் பட்டவர்களே தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்.
அப்புறம் இன்னொன்னு தோணிச்சு இந்தப் பதிவைப் பார்த்த போது. இந்த கதை நம் தொலைக்காட்சிகளில் மெகாத் தொடராய் வருவதற்குரிய எல்லா இலக்கணங்களையும் பெற்றுள்ளது. இது உண்மைக் கதை இல்லை என்றால் நீங்கள் ஒரு முறை எல்லாத் தொலைக் காட்சிகளிலும் முயற்சி செய்து பாருங்களேன்.
"அப்புறம் இன்னொன்னு தோணிச்சு இந்தப் பதிவைப் பார்த்த போது. இந்த கதை நம் தொலைக்காட்சிகளில் மெகாத் தொடராய் வருவதற்குரிய எல்லா இலக்கணங்களையும் பெற்றுள்ளது. இது உண்மைக் கதை இல்லை என்றால் நீங்கள் ஒரு முறை எல்லாத் தொலைக் காட்சிகளிலும் முயற்சி செய்து பாருங்களேன்."
குமரன் நீங்க உண்மையிலேயே வாழ்த்துரீங்களா இல்ல என்னவோ?. விரைவில் நல்லதொரு கதை எழுத முயற்சி செய்கின்றேன்.
உண்மையைத் தான் சொல்றேன் சிங்காரகுமரன். இதுல ஒரு மெகாத் தொடருக்கு வேண்டிய எல்லா விஷயங்களும் இருக்குது. குறைந்தது ஒரு 40 எபிஸோடாவது போகும்.
உங்க ஆசைய ஏன் வீணடிக்கனும், மெகா தொடர்ல இறங்கிட்டா போச்சு!.விரைவில் ஆரம்பிசுடுவோம்!
Post a Comment
<< Home