...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Thursday, February 09, 2006

கிராமத்து எஞ்சினீயர்...



கடந்து வந்த பாதை
கொஞ்சம் திரும்பி பார்க்கையில்
நடந்த தடங்கள்
நெஞ்சில் அலை மோதுகின்றதே
தலை பாகையோடு தந்தை
உச்சி வெயிலும் ஊச காத்தும்
நித்தம் தன் மேல் தவம் கொள்ள
காடு மேடு கழனி சுற்றி
வீடு வந்து விளக்கு வச்சி
வெற்றிலை பாக்கு செவந்த வாயோடு
வீதி சென்று வெளக்கு எண்ணெய் முதல்
வெளுக்க சவுக்காரம் வரை
வாங்கிவர இருப்பு பணம் போதாதே!
அழுக்கு துணியை
இளக்காரமாய் பார்த்து
வெளக்கு வச்சாச்சு
வெள்ளிகிழமை அதுவும் கடன் கிடையாது
இன்னிக்கி மட்டும் கடன் தாரேன்
இன்னோரு நாளு இப்பிடி வராதே



விடி காலையில்
வீதி சங்கு ஊதியாச்சு
அடுமனையில் ஆட்டாம்பால் காப்பிக்கு
அரை கைப்பிடி சர்க்கரை போதல
எதிர்த்த வீட்டில் கரைத்த பாகில்
கொஞ்சம் கடனாய் கேட்டு
காலை டிபன் முடிந்தது
கழனி வேலைக்கு
கணவணை அனுப்ப வேண்டுமே
உணவென்று ஊறுகாயுடன்
தயிர் கொண்டு தாளித்து கொட்டி
களிம்பேறிய தூக்கோடு
களத்துமேடு அனுப்பியாச்சு
வீட்டு வேலை முடிஞ்சிது
வீண் வம்பு பேசும் வேலையில்
காததூரம் போயி
கருக்கு வெட்டி வந்தா
குருக்கு பாயும்
தடுக்கு பொட்டியும் செய்யலாமே
மூணு ஜோடி நாலு ரூபா
மூத்த புள்ளைக்கி
ரெண்டு குயர்ல கட்டுரை நோட்டு
பசும்பால் வித்த காசு
பள்ளிக்கூட பீசுக்கு
சின்னவனுக்கு சினிமா கொட்டகையில்
கண்ணம்மா படம் பாக்கனுமாம்
பக்கத்துவிட்டுல
போன வருழமே
போய் வந்தாச்சாம்
தை மாசம் பொறக்கட்டும்
கைலாசம் கோவிலில்
தினம் ஒரு படம் பாக்கலாம்

கிட்டிப்புல் அடிச்சி
காருவாயும்
பொன்னாந்தட்டாம் புடிச்சி
நாலு ரூபாயும்
புத்த்கத்துகுள்ள வச்சுருக்கேன்
பொழுது சாஞ்சதும் போய் வருவோமா?

போடா போகாத்தவனே
தினம் ஒருத்தன்
திருட்டு கள்ள குடிச்சிட்டு
இருட்டுல நிக்கிறானுக
இன்னோரு நாளு போவோம்

கதிர் வீட்டு மாமா
கூட வாராராம்
கட்டு சோறு கூட வேண்டாம்
சுட்ட பனம்பழம் போதும்
சுருக்க வந்து சேருவேன்

கரண்டுக்கு எழுதி போட்டு இருக்கேன்
கருப்பு வெள்ளை டீவில
குழ்பூ படம் பாக்கலாம்
இருக்கிற காச எடு
எதிர்த்த வூட்ல
குமுதா பொண்ணுக்கு சடங்காம்
நானும் வச்சு குடுக்கனும்
நம்ம வூட்டுக்கு நாளக்கி
வந்து நிப்பா
சிலுக்கு மாமி
இந்த சிருக்கிக்கு என்ன செஞ்சேன்னு

பயலுக்கு நல்லா படிப்பு வருதாம்
பட்டணம் போயி படிக்கணுமாம்
கட்டணம் ஒன்னும் இல்லையாம்
கை செலவுக்கு மட்டும்
குறைவில்லாம வேணுமாம்
தளுக்கு நடை போட்டு
சுருக்க படிச்சி வந்து
கருவ காட்டுக்குள்ள
கரண்டு மரம் கொண்டு வந்து
இரண்டு நாள் இருந்து பாக்கல
உடனே கெளம்பி வரணும்
உனக்கு வாழ்க்கை உசந்த எடத்துல
கடுதாசி பாக்கையில
கண நேர சந்தோஷம்
உடனே ஊர் கழனி ஞாபகம்
என் செய்ய என் குடி உயர
இதோ கடல் கடந்து
கரண்டு பக்காத கிரமத்தான்
இன்டெர்னெட்டில் காதல் கதை
இழுக்கிறதே ஊர் ஞாபகம்
பனங்காய் வண்டி ஓட்ட ஆள் இல்லையாம்
பத்திரிகையில் வரி விளம்பரம்!

Receomand this post to other reades :

23 Comments:

At 9:02 PM, Blogger அனுசுயா said...

நல்ல கவிதை, மண் வாசனையுடன்.

 
At 10:19 PM, Blogger சிங். செயகுமார். said...

உங்கள் வருகைக்கு நன்றி அனுசுயா.வாழ்த்துக்கும்!

 
At 8:24 AM, Blogger குழலி / Kuzhali said...

நல்ல கவிதை படிக்கையில் கனத்தது மனசு

 
At 4:08 PM, Blogger சிவா said...

மக்கா சிங்கு! கவித நல்லா இருக்குடே..என்னோட நட்சத்திர வாரத்துல கவிதையா சொல்லி கலக்கிப்புட்ட..நல்லா இருக்குடே :-)

 
At 4:11 PM, Blogger சிங். செயகுமார். said...

நண்பரே குழலி நல் வணக்கம். உங்கள் கருத்து எனக்கு சந்தோஷத்தை தருகிறது .உங்களது முதல் வருகை என நினைக்கிறேன்.வேலை பளு என்று இறாமல் அடிக்கடி வந்து வாழ்த்தி செல்லுங்கள்.

 
At 4:40 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க சிவா! வாழ்த்துக்கு நன்றிகள்!

 
At 4:41 PM, Blogger சிங். செயகுமார். said...

ஆர்த்தியின் வருகையும் வாழ்த்தும் எனக்கு சந்தோஷம்!வலம் வந்து பலம் சேருங்கள்!

 
At 4:46 PM, Blogger J S Gnanasekar said...

நீங்கள் ஒவ்வொருவருக்கும் பின்னூட்டமாக ஒரு கவிதை போடும் பாணி எனக்கு மிகவும் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது.

தொடருங்கள். நன்றிகளும், வாழ்த்துகளும்.

-ஞானசேகர்

 
At 5:11 PM, Blogger சிங். செயகுமார். said...

உங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு ஊக்கம் நண்பரே ஞான்ஸ்!

 
At 5:14 PM, Blogger J S Gnanasekar said...

ஜெயக்குமார் அவர்களே, என் பெயரைத் தமிழிலேயே விட்டுவிடுங்கள். ஞான்ஸ் எல்லாம் வேண்டாம். ஞானசேகரே போதும்.

-ஞானசேகர்

 
At 5:20 PM, Blogger சிங். செயகுமார். said...

மன்னிக்க நண்பரே ஞானசேகர்.உங்கள் முன்னெழெத்தும் இனிய தமிழில் இருந்தால் இன்னும் எனக்கு சந்தோஷமே.இருந்தும் இது உங்கள் உரிமையல்லவோ! நான் என்ன சொல்ல !

 
At 5:30 PM, Blogger J S Gnanasekar said...

முன்னெழுத்தும் தமிழில்?

நான் ஏற்கனவே யோசித்துப் பார்த்த ஒன்று.

நன்றாகக் கவனித்துப் பாருங்கள். J மற்றும் S களுக்குச் சரியான தமிழ் எழுத்து கிடையாது. அதை அதனால் அதன் உண்மை வடிவிலேயே விட்டுவிட்டேன்.

-ஞானசேகர்

 
At 6:22 PM, Blogger பாலு மணிமாறன் said...

பழைய கிராமத்து நினைவுகளை புரட்டிப் போட்டு விட்டது உங்கள் கவிதை.

ஆற்றில் குறைவாக தண்ணி ஓடும்போது, கூட்டமா சேந்து கூளையனூரிலிருந்து கோட்டையூருக்கு டூரிங் டாக்கீஸில் படம் பாக்கப் போவோம். அப்ப நான் அரை டவுசர்தான். கொழாய் பாட்டுதான் கணக்கு. தப்புச்சுன்னா தமிழ்நாடு அரசு செய்திப்படமெல்லாம் முடிஞ்சு நாலு பேர மிதிச்சுட்டுத்தான் போயி உக்காரணும்.

பெஞ்சு டிக்கெட் எடுக்க காசிருந்தாலும், தரை டிக்கெட்டுதான் எனக்குப் பிடிக்கும். முன்னாடி இருக்க ஆளு கொஞ்சம் ஒசரமா இருந்தா, மண்ணை குவிச்சி கட்டி மேல ஒக்காந்துக்குவேன்.

இப்போ சிங்கப்பூரில் சகல விஞ்ஞான வசதிகளோட ஆங்கிலப்படம் பார்த்தாலும் , DTS system மூலம் சலசலக்கும் திரை நீர் ஓசைகள் - தரை டிக்கெட்டின் மண்வாசனையையும், யானையை நில் என்று ஆணையிட்ட சிவாஜியையும், நிலா இரவில் ஆற்று நீரில் அதன் முகம் பார்த்தபடி சலசலத்து நடந்து வந்த காலத்தையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க - நெஞ்சில், அன்று சாப்பிட்ட கடைசிக்கடலையின் வாசனை!

 
At 8:25 PM, Blogger தருமி said...

நான் எப்பவோ 'இங்கு' வந்திருக்க வேண்டியவன்; மன்னிச்சிக்கிங்க. இந்த கவிதையை அங்கேயே பாராட்டிவிட்டேன் நல்லா இருக்குன்னு.

இன்னொரு சந்தேகம்: அதென்ன, ஊருவிட்டு ஊரு போன ஆளுக எல்லாமே இந்த 'மண்வாசனை'யைப் பிடிச்சிக்கிறோம். ;என்னைப் பாருங்க, பிறந்தது தவிர எல்லாமே மதுரதான்; இருந்தும் பிறந்த ஊரச் சொல்லி, எழுதிப் பாக்கிறதில்ல ஒரு 'இது'தான்! ஏன்..?

 
At 9:39 PM, Blogger நாமக்கல் சிபி said...

பழைய நினைவுகளை நெஞ்சில் கிளரி விட்டிருக்கிறீர்கள். அருமையான கவிதை. மனசு என்னவோ செய்கிறது.

 
At 10:05 PM, Blogger சிங். செயகுமார். said...

"இப்போ சிங்கப்பூரில் சகல விஞ்ஞான வசதிகளோட ஆங்கிலப்படம் பார்த்தாலும் , DTS system மூலம் சலசலக்கும் திரை நீர் ஓசைகள் - தரை டிக்கெட்டின் மண்வாசனையையும், யானையை நில் என்று ஆணையிட்ட சிவாஜியையும், நிலா இரவில் ஆற்று நீரில் அதன் முகம் பார்த்தபடி சலசலத்து நடந்து வந்த காலத்தையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க - நெஞ்சில், அன்று சாப்பிட்ட கடைசிக்கடலையின் வாசனை!"

வணக்கம் பாலுமணிமாறன்.செயற்கைதனமான வாழ்க்கை முறையில் இயற்கையான இன்பம் எங்கே தேடுவது?காட்டாறும் கருவேல மரமும் ,வெட்டியாக சுற்றிய வீதிகளும் திரையில் மட்டுமே பார்க்க சாத்தியம்
இங்கே!

 
At 10:12 PM, Blogger சிங். செயகுமார். said...

"நான் எப்பவோ 'இங்கு' வந்திருக்க வேண்டியவன்; மன்னிச்சிக்கிங்க. இந்த கவிதையை அங்கேயே பாராட்டிவிட்டேன் நல்லா இருக்குன்னு.

இன்னொரு சந்தேகம்: அதென்ன, ஊருவிட்டு ஊரு போன ஆளுக எல்லாமே இந்த 'மண்வாசனை'யைப் பிடிச்சிக்கிறோம். ;என்னைப் பாருங்க, பிறந்தது தவிர எல்லாமே மதுரதான்; இருந்தும் பிறந்த ஊரச் சொல்லி, எழுதிப் பாக்கிறதில்ல ஒரு 'இது'தான்! ஏன்..?"

ஐயா பெரியவரே தருமி! நீங்க சொல்லிதான் பின்னூட்டத்த பதிவாக்கினேன்.இத போயி பெரிய விஷயமா பெரிய வார்த்த போட்டு பயமுறுத்திரீங்க! விலக விலகதான் நெருக்கங்கள் வருமோ? அக்கரைக்கு இக்கரை பச்சை!

 
At 10:20 PM, Blogger சிங். செயகுமார். said...

ரெண்டு வரி கிருக்கியது, நான் உங்களை காயபடுத்தியது உண்மையில் எனக்கு சந்தோஷம்

 
At 12:04 PM, Blogger மதுமிதா said...

சிங்.செயகுமார்
கவிதை வேறு வேறு தளங்களுக்கு இட்டுச் செல்கிறது.

வேண்டுமென்றே இப்படி எழுதினீர்களா

அழுக்கு
ஊறுகாய்
களிம்பேறிய
காத தூரம்
மூணு

தவறு கண்டுபிடிக்கவில்லை
கவிதைகள் தொகுப்பு நூலாக வருகையில் பார்க்கப் படவேண்டிய விஷயமாதலால் குறிப்பிடுகிறேன்.

 
At 4:23 PM, Blogger சிங். செயகுமார். said...

மன்னிக்க வேண்டுகின்றேன்
மதிப்பிற்குறிய மதுமிதா!
எண்ணி எண்ணி எழுதவில்லை
இந்த கவிதை
ஏதோ ஓட்டத்தில்
எதிர் பாரா திருப்பத்தில்
இந்த ஒரு பதிவிற்காய்
http://sivapuraanam.blogspot.com/2006/02/blog-post_08.html
என் பின்னூட்டமாய்
எதார்த்தமாக எழுதியது
சத்தியமாய் சில தவறுகள்
என் சிந்தை எட்டியும்
சிரத்தையில்லாமல்
செய்த வேலைதான்
தட்டி கேட்க நீங்கள்
இருக்கும் வரை
சிறு தவறும் -இனி
நான் சிதற விட மாட்டேன்
இதோ இப்போதே இந்த திருத்தம்
இந்த பதிவில்
வருகை தந்து
வகையாய் சுட்டி காட்டி
வழிபடுதியமைக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

 
At 4:27 PM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி நண்பரே பாரதி !
http://sivapuraanam.blogspot.com/2006/02/blog-post_08.html

இந்த பதிவிற்காக எழுதிய
பின்னுட்டம்தான் இது
வலைதளம் வந்து
பலம் சேருங்கள்!

 
At 11:21 AM, Blogger Viji said...

நன்று, கவிதை மிக அருமை. நானும் ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்தவன். உங்க கவிதை வசித்த பின் என் ஊருக்கு போய் வந்த ஒரு உணர்வு- அன்புடன் வே.விஜயகுமர்.

 
At 10:01 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் விஜி! வாழ்த்துக்கு நன்றி!

 

Post a Comment

<< Home