...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Wednesday, February 08, 2006

.கல்லூரி காதல்.




இங்கே அரங்கேற்றம் ஓர் காதல் சரித்திரம்
சின்ன ரணம்தான்
முளையிலேயே முடக்கபட்டதே
மூன்று நாட்கள் பேசியும்
மூன்றெழுத்து சொல்
மூச்சு வாங்கியதே!
உதவியும் நட்பும்
உறவாகாதோ?
வேண்டாத விஷயத்திற்கு சிரித்து
வேண்டிய விஷயத்தை மறைத்து
எஷுதிய கடிதம்
எத்தனை நாளாய் சட்டை பையில்?
அருகில் சென்றாலே
தைரியம் இல்லை
திறந்த மடல்
மலர் கரத்தில் சேர!
பாழும் காதல்
பசங்களால் வந்ததே!
பத்து பைசா கார்டையும்
பாவி அவள் கடிதமென
கற்பனை செய்து
எனக்குறியவள் அவள்தானென
எகோபித்த சந்தோஷத்தில்
எல்லாம் கற்பனையா?
இருந்தாலும் என்னுள்ளே
இதுவும் ஓர் காவியமாய்
எனக்குள்ளும் ஓவியமாய்
எங்கும் சேரா தண்டவாளமாய்!

Receomand this post to other reades :

11 Comments:

At 12:42 AM, Blogger சிவா said...

தம்பி சிங்கு! ஏற்கனவே பாராட்டிட்டேன். மறுபடியும் பாராட்டுக்கள். என்னோட ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு கவிதை கொடுத்து இந்த அண்ணனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட்டீங்க. நன்றி.

யோய்! என்னைய்யா இது படம் ரொம்ப லைவ்லியா இருக்கு. பாத்துப்பூ..பிரச்சினை ஆகிட போவுது :-))

 
At 2:37 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

படம் சூப்பர்... கவிதையுந்தான்.

 
At 4:10 AM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி சிவா .எல்லாம் நம்ம ஊரு பொண்ணுதான் பிரச்சனையெல்லாம் ஒன்னும் வராது!

 
At 4:11 AM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி அலெக்ஸ்.சுராபுட்டு கதை சூப்பர்னு அல்லாரும் சொல்ராங்க. சீக்கிரம் ஓடி வந்து படிக்கிறேன்

 
At 4:37 PM, Blogger நவீன் ப்ரகாஷ் said...

மலர்க்கரத்தில்
மடல் சேர
தைரியம் இல்லை !

தைரியம் வரும்போது
மலர்க்கரம்
வளைகாப்புக்கரமாகியிருக்கிறது !

என்ன செய்ய குமார்?

பல நேரங்களில் இப்படித்தான் நிகழ்ந்துவிடுகிறது !

 
At 5:06 PM, Blogger சிங். செயகுமார். said...

நவீன் உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ! பாலு மணிமாறன் சொல்லி உங்கள் ப்ளாக் வந்தேன் .நின்று படிக்க நேரமில்லையே நிச்சயம் எல்லா பதிவையும் பார்க்கிறேன்.ஒரு சில கவிதைகள் படித்தேன்.உயிரோட்டமான கவிதைகள்!


"மலர்க்கரத்தில்
மடல் சேர
தைரியம் இல்லை !

தைரியம் வரும்போது
மலர்க்கரம்
வளைகாப்புக்கரமாகியிருக்கிறது !

என்ன செய்ய குமார்?

பல நேரங்களில் இப்படித்தான் நிகழ்ந்துவிடுகிறது !"

சில நேரங்களில் உங்கள் நிகழ்வுகூட கவிதை வரியாகும்.உண்மைதானே நவீன்!

 
At 5:27 PM, Blogger J S Gnanasekar said...

The picture is very good as well as your poem.

-gnanasekar

 
At 5:42 PM, Blogger சிங். செயகுமார். said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே ஞானசேகர்!

 
At 8:11 PM, Blogger நாமக்கல் சிபி said...

சிங்.செயகுமார்,

இந்த படம் ஆனந்த விகடனில் வெளி வந்ததுதானே! (செழியன் அவர்களின் கவிதையோடு)

உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை. (உங்கள் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும்)

 
At 10:21 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் சிபி உங்கள் கணிப்பு சரியே!உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.வலம் வந்து பலம் சேருங்கள்!

 
At 10:26 PM, Blogger நாமக்கல் சிபி said...

//வலம் வந்து பலம் சேருங்கள்! //

நிச்சயமாய். அருமையான கவிதைகள் படிப்பது ஓர் இனிய பொழுது போக்கு. தவிர கரும்பு திங்க கூலி வேறு வேண்டுமா என்ன?

 

Post a Comment

<< Home