...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Wednesday, February 22, 2006

பழைய நாவல் புதிய பார்வை






வாழ்க்கை சுவாரசியங்களில் வசீகரத்தையும் திடமான நம்பிக்கையும் கொணர்ந்து வருவதில் காதலுக்கும் முக்கிய பங்கு உண்டே! காதலின் ஆழமும் ,அடர்த்தியுமே அதன் வாழ்நாள்!இனக்கவர்ச்சி மனகவர்ச்சியாகி ,மனகவர்ச்சி மணத்தில் முடிந்து உன்னதமான வாழ்க்கை ஆரம்பமாகும் போது ஆரம்ப காதலின் வீரியம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றதே!

சாதி ,சமய சச்சரவுகள் சல்லாபிக்கும் இந்த சமுதாயத்தில் இன,மதங்களால் வேறுபட்ட இருவர் மனங்களால் ஒன்றாகி ,மனித நேயத்திற்காக வாழ்ந்த கதைதான் நாவலாசிரியர்"கிரிஜா ஜின்னா" வின் "காதலெனும் ஜீவநதி" .

கதையோட்டத்தில் கைபிடித்து அழத்து செல்லும் நூலாசிரியர் கிரிஜா ஜின்னா வாசிப்போரை வாசகராக மட்டுமின்றி பாத்திரமாகவே பாவிக்க வைத்து விட்டார்.இந்திய சூழலிலும் சவாலுக்காகவும் சாதிப்பதற்க்காகவும் வெளிநாடு சென்றநேரத்திலும் கதையின் நாயகர்களின் காதல் கைகோர்த்து வாழ்க்கை முழுவதும் வசந்தமாக்கியதே இந்த "காதலெனும் ஜீவநதி"

சினிமாக்களிலும் கதைகளிலும் காதலின் சித்திரங்கள் கல்யாணத்திற்கு முன்னுள்ள நிகழ்வுகளையே முன்னிறுத்தி களம் காணுவதை காணலாம்.இங்கே சற்றே வித்தியாசமாக கல்யாணத்திற்கு பின்னே காதல்.காதலர்களின் முதல் சந்திப்பும் கடைசி சந்திப்பும் ஒரே இடங்கள். இதற்குள் உள்ளாடங்கிய நிகழ்வுகளே நாவலின் கதையோட்டம்.

கதை நாயகி தன் வெகுளி காதலனிடம் தன் காதலை சொல்லும் போது " உனக்காக அன்றும் நான் தான் முடிவு செய்தேன். இன்றும் முடிவு செய்கிறேன் -- நாளையும் -நம் வாழ்நாள் முழுவதும் நான் தான் முடிவு செய்வேன் சம்மதமா?" அதனுள் பொதிந்துள்ள வசீகரம் ,ஆழ்ந்த அன்பே நாவல் முழுவதும் நிகழ்வுகள் பயணிக்க காரணியாக அமைகின்றதே! வாசிப்பதற்கு மட்டுமல்லாமல் பரிசளிக்கவும் நல்லதொரு நாவல்!

ஆசிரியர் : கிரிஜா ஜின்னா.

வெளியீடு :GJ பப்ளிகேஷன்ஸ்
P 203 பாலவாக்கம்
பல்கலை நகர்.
சென்னை-41


பக்கங்கள் :160

விலை :25.00 ரூபாய்கள்

Receomand this post to other reades :

0 Comments:

Post a Comment

<< Home