...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Monday, February 27, 2006

உன்னைத்தேடி

விழுந்த மனதில்
எழுந்த தடமாய்
என் மனதில் நீ!

அழுந்த பார்வையில்
கடன்காரனாய்
உன் மனதில் நான்

உன்னருகில் வர
என்னுருவம் நகர்த்தி
இடம் வலம்
இருவிழி பார்வை

ஓர கண்ணால் நீயும்
எங்கே இவனும்
என்னருகில் வந்தால்
இம்சை என்று நீ

சமயம் பார்த்து
சீட் ஒன்று கிடைக்க
சட்டென்று நான் அமரலாமா?
சிந்தனையாய் உன் முகம் நோக்கி


உன் நானம் என் நோக்கி
என் மானம் உன் நோக்கி
வாகாய் உன் அருகில்
ஒரு வார்த்தை பேச

எழுந்த நாவை வழி மறித்து
இடையில் ஓர் கிழம்
இடம் நிரப்ப
என்னை நிரூபிக்க
இருந்த வாய்ப்பும்
இன்றோடு தொலைந்ததே!

நளேனும் உன்னோடு பேச
நாலு வார்த்தை கைவசம்
நிலவு பெண்ணே !
எங்கே காண்பேன் உனை!

Receomand this post to other reades :

5 Comments:

At 11:29 PM, Blogger குமரன் (Kumaran) said...

Sing. You have to vote in Nila's post. Please see http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html

 
At 8:21 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

யோவ் சிங்கு,
வந்து நம்ம பதிவுலே எல்லாம் பின்னூட்டம் போட்டீங்க. ஆனா நிலா பதிவுல போய் போடலையா? இப்படி ஒரு வெட்டி வோட்டா ஆயிட்டீங்களே. :(

 
At 1:15 AM, Blogger கீதா said...

//இடையில் ஓர் கிழம்
இடம் நிரப்ப
என்னை நிரூபிக்க
இருந்த வாய்ப்பும்
இன்றோடு தொலைந்ததே!//

:) உங்க நகைச்சுவை உணர்வு பிடிச்சிருக்கு. :)

 
At 3:39 AM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் கீதா! இப்பதான் நம்ம ஊட்டு பக்கம் வழி தெரிஞ்சுதா?வருகைக்கு சந்தோஷம்!எங்க அவஸ்த உங்களுக்கு சந்தோஷம்:)

 
At 3:51 AM, Anonymous Anonymous said...

ஏதோ ஓர் மூலையில் மறைந்து கண்ணீர்வடித்தபோது
ஓர் கரம் என்னை ஆதரவாய் வருடியது
அது...
நீ தான்!!
என் அருகில் நின்றாய்!!!
என்ன ஏது என்று கண்களால் வினாவினாய்
காரணம் சொல்லத் தெரியாமல் மௌனமாய் நின்றேன்
உன் பார்வையின் கூர்மை என்னை ஏதோ செய்தது
"ஒன்றுமில்லை" என சிக்கு முக்காடி என் கண்களை அதிலிருந்து விலக்கினேன்
அக்கணத்தில் என்ன தோன்றியதோ உனக்கு
என்னைவிட்டு அகன்று சென்றாய்
ஒரு சில வினாடிகள் மறந்திருந்த என் துயரம்
மறுபடியும் வெளியே வெடித்து விசும்பலாக வடிய ...

எங்கு இருந்து ஓடிவந்தாயோ
சட்டென இதயத்தோடு இதயத்தை பேசவைத்தாய்
இறுக இவளை அணைத்துக் கொண்டாய்!
என் கண்ணீர்த்துளிகள் உன் மார்பை நனைத்து
- எனை சிலிர்க்கவைத்தது.

அப்படியே மரந்துவிட்டேன்
என் துயரத்தை மட்டுமல்ல
என்னையும்!!!



-santya

 

Post a Comment

<< Home