...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Monday, February 27, 2006

உன்னைத்தேடி

விழுந்த மனதில்
எழுந்த தடமாய்
என் மனதில் நீ!

அழுந்த பார்வையில்
கடன்காரனாய்
உன் மனதில் நான்

உன்னருகில் வர
என்னுருவம் நகர்த்தி
இடம் வலம்
இருவிழி பார்வை

ஓர கண்ணால் நீயும்
எங்கே இவனும்
என்னருகில் வந்தால்
இம்சை என்று நீ

சமயம் பார்த்து
சீட் ஒன்று கிடைக்க
சட்டென்று நான் அமரலாமா?
சிந்தனையாய் உன் முகம் நோக்கி


உன் நானம் என் நோக்கி
என் மானம் உன் நோக்கி
வாகாய் உன் அருகில்
ஒரு வார்த்தை பேச

எழுந்த நாவை வழி மறித்து
இடையில் ஓர் கிழம்
இடம் நிரப்ப
என்னை நிரூபிக்க
இருந்த வாய்ப்பும்
இன்றோடு தொலைந்ததே!

நளேனும் உன்னோடு பேச
நாலு வார்த்தை கைவசம்
நிலவு பெண்ணே !
எங்கே காண்பேன் உனை!

Receomand this post to other reades :

Thursday, February 23, 2006

சங்கிலி தொடர் "ஜோ" வால் வந்த வினை!

சங்கிலி தொடரென்று சிங்காரகுமரனையும் சங்கத்திற்கு பலம் சேர்க்க சந்தர்ப்பம் தந்த உலகம் சுற்றும் வாலிபன் ஜோ விற்கு நன்றிகள்!


பிடித்த 4 விஷயங்கள்

மனிதற்கு செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு! அந்த வகையிலே கடவுளென்று கருதுவது தாய்நாட்டு தலைவர் அருள்மிகு அப்துல் கலாம்!

கவிதைகள், மனித நேயம் சார்ந்த கதைகள் வாசிப்புக்கள்

கிராமத்து வாழ்க்கை

தமிழ்மணத்தில் வாசிக்க கிடைத்த சந்தோஷம்



பிடித்த 4 கலைஞர்கள்


நடிகரில் கமலஹாசன்

பாடகரில் அனுராதா ஷீராம்

கவிதையில் கவி பேரரசு வைரமுத்து

இசையில் என்றும் இனிமை இசைஞானி இளையராஜா


திரும்ப திரும்ப பார்த்த 4 திரைபடங்கள்



மூன்றாம் பிறை

நாயகன்

அலை பாயுதே

காதல்

வலம் வரும் 4 வலைதலங்கள்



தமிழ்மணம்

விக்கி பீடியா

கூகுல்

யாகூ


வலம் வந்த 4 இடங்கள்


பிறந்து வள்ர்ந்த

புஷ்பவனம்

பிழைப்பு தேடி சென்ற

கோவை

சென்னை

சிங்கப்பூர்


பிடித்த 4 உணவு வகைகள்


பழைய சோற்றோடு கலந்த பழந்தயிரும் வருத்த தயிர்மிளகாயும்

நீந்துவனவற்றில் வாளை மீனில் வகையான சமையல் ( வாளை மீன் வருவல் (மத்த மீனும் வருவலில் புடிக்கும்). உயிருடன் சமைத்த வாளை மீன் குழம்பு)

அம்மாவின் கை பக்குவத்தில் உயிருடன் சமைத்த இரால் குழம்பு

சில நேரங்களில் நானே சமைத்த சமையல்


அழைக்க விரும்பும் வலைபதிவர்கள்


முன்னாள் நட்சத்திரங்கள்


தானு

குமரன்

சிவா




மற்றும் நிலவு நண்பன்






அன்புடன்

சிங்.செயகுமார்

Receomand this post to other reades :

Wednesday, February 22, 2006

பழைய நாவல் புதிய பார்வை






வாழ்க்கை சுவாரசியங்களில் வசீகரத்தையும் திடமான நம்பிக்கையும் கொணர்ந்து வருவதில் காதலுக்கும் முக்கிய பங்கு உண்டே! காதலின் ஆழமும் ,அடர்த்தியுமே அதன் வாழ்நாள்!இனக்கவர்ச்சி மனகவர்ச்சியாகி ,மனகவர்ச்சி மணத்தில் முடிந்து உன்னதமான வாழ்க்கை ஆரம்பமாகும் போது ஆரம்ப காதலின் வீரியம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றதே!

சாதி ,சமய சச்சரவுகள் சல்லாபிக்கும் இந்த சமுதாயத்தில் இன,மதங்களால் வேறுபட்ட இருவர் மனங்களால் ஒன்றாகி ,மனித நேயத்திற்காக வாழ்ந்த கதைதான் நாவலாசிரியர்"கிரிஜா ஜின்னா" வின் "காதலெனும் ஜீவநதி" .

கதையோட்டத்தில் கைபிடித்து அழத்து செல்லும் நூலாசிரியர் கிரிஜா ஜின்னா வாசிப்போரை வாசகராக மட்டுமின்றி பாத்திரமாகவே பாவிக்க வைத்து விட்டார்.இந்திய சூழலிலும் சவாலுக்காகவும் சாதிப்பதற்க்காகவும் வெளிநாடு சென்றநேரத்திலும் கதையின் நாயகர்களின் காதல் கைகோர்த்து வாழ்க்கை முழுவதும் வசந்தமாக்கியதே இந்த "காதலெனும் ஜீவநதி"

சினிமாக்களிலும் கதைகளிலும் காதலின் சித்திரங்கள் கல்யாணத்திற்கு முன்னுள்ள நிகழ்வுகளையே முன்னிறுத்தி களம் காணுவதை காணலாம்.இங்கே சற்றே வித்தியாசமாக கல்யாணத்திற்கு பின்னே காதல்.காதலர்களின் முதல் சந்திப்பும் கடைசி சந்திப்பும் ஒரே இடங்கள். இதற்குள் உள்ளாடங்கிய நிகழ்வுகளே நாவலின் கதையோட்டம்.

கதை நாயகி தன் வெகுளி காதலனிடம் தன் காதலை சொல்லும் போது " உனக்காக அன்றும் நான் தான் முடிவு செய்தேன். இன்றும் முடிவு செய்கிறேன் -- நாளையும் -நம் வாழ்நாள் முழுவதும் நான் தான் முடிவு செய்வேன் சம்மதமா?" அதனுள் பொதிந்துள்ள வசீகரம் ,ஆழ்ந்த அன்பே நாவல் முழுவதும் நிகழ்வுகள் பயணிக்க காரணியாக அமைகின்றதே! வாசிப்பதற்கு மட்டுமல்லாமல் பரிசளிக்கவும் நல்லதொரு நாவல்!

ஆசிரியர் : கிரிஜா ஜின்னா.

வெளியீடு :GJ பப்ளிகேஷன்ஸ்
P 203 பாலவாக்கம்
பல்கலை நகர்.
சென்னை-41


பக்கங்கள் :160

விலை :25.00 ரூபாய்கள்

Receomand this post to other reades :

Tuesday, February 14, 2006

காதலர்தினம்!



ஒரு பதினைந்த்து நாள் இருக்குமா?

ஒரே பேருந்தில் பயணம்

நாம் பார்க்க ஆரம்பித்து

அருகருகே சில நேரம் இருக்கையில்

அழகான புன்னகை

அதுதானே நம் அறிமுகம்


சில்லரை இல்லையா?

சீக்கிரம் கீழே இறங்கு!

சனியனே ஏன் உசிர வாங்குற?

கண்டக்டரின் கணிவான பேச்சின் ஊடே

பல்லை காட்டி நானும் பரவாயில்லை

உனக்கும் டிக்கட் ஏற்கனவே எடுத்திட்டேன்!

நன்றியுடன் ஓர் பார்வை!

நாலு வார்த்தை சொல்ல

உனக்கு நா எழுகின்றது

நடுவில் இரண்டு காளைகள்

நந்தியாய் நிற்க!


எழுந்த வார்த்தை எங்கே

அவர்கள் வசம் அடைந்து விடுமோ?

உன் அச்சம் எனக்கு புரிகிறது

படிகட்டில் நிற்கும் போது

பாசமாய் என் புத்தகம் கேட்கிறாய்

படியில் பயணம்

நொடிப்பொழுதில் மரணம்

உன் பார்வையாலே

எனை உள்ளே அழைக்கிறாய்!

எனக்கும் உள்ளே வர ஆசைதான்!

எங்கே இந்த கூட்ட நெரிசலில்

என் கால் மாற்ற இடம் இல்லையே



உனக்குள்ளும் காதல் இருக்கிறது!

எனக்குள்ளும் காதல் இருக்கிறது!

என் காதல் சொல்ல

என் உள்ளம் நடுங்குகிறதே!

இன்று காதலர்தினம்!

இரவெல்லாம் விழித்து

எழுதினேன் ஓர் கடிதம்!





"காணவில்லை இதயம்

திருடிய பெண் நீயே

தந்துவிடு என்னை

இதயமின்றி வாழும் உயிரினம்

எங்கும் இல்லை உலகில்

நான் மட்டும் வாழ்வதெப்படி?

என் உடம்பில் வெறும்

குருதி மட்டும் ஓடி இருந்தால்

என்றோ நான் இறந்திருப்பேன்

உன் நினைவுகள் கலந்த

உதிரமல்லவா ஓடுகின்றது!

எங்ஙனம் நான் இறப்பேன்?

உதடோடு உதடு உரசும்

சரச காதல் வேண்டாம்

கட்டியணைத்து கவி பாடும்

சாகச காதல் வேண்டாம்

கண்ணோடு கண் சேரும்

கணிவான காதல் வேண்டும்

உள்ளங்கள் பரிமாறும்

உன்னத காதல் வேண்டும்

என் காதலுக்கு "ஆம்" எனில்

உன் மணமேடைக்கு மன்னவன்

என் காதலுக்கு "இல்லை" எனில்

உன் நினைவுகளோடு ஒரு

ஜீவனுக்கு சமாதி எழுத பட்டிருக்கும்


என்றும் உன் அன்பில் தோய்ந்த


சிங்.செயகுமார்"





எழுதிய கடிதம் என் கையில்

உன் கரம் சேர்க்க

உன் நோக்கி வருகின்றேன்

என் இதயத்தின் எதிர்பார்ப்பு

விண்ணில் ஏவிய விண்கலமாய்

உன் பதில் நோக்கி!

Receomand this post to other reades :

Thursday, February 09, 2006

கிராமத்து எஞ்சினீயர்...



கடந்து வந்த பாதை
கொஞ்சம் திரும்பி பார்க்கையில்
நடந்த தடங்கள்
நெஞ்சில் அலை மோதுகின்றதே
தலை பாகையோடு தந்தை
உச்சி வெயிலும் ஊச காத்தும்
நித்தம் தன் மேல் தவம் கொள்ள
காடு மேடு கழனி சுற்றி
வீடு வந்து விளக்கு வச்சி
வெற்றிலை பாக்கு செவந்த வாயோடு
வீதி சென்று வெளக்கு எண்ணெய் முதல்
வெளுக்க சவுக்காரம் வரை
வாங்கிவர இருப்பு பணம் போதாதே!
அழுக்கு துணியை
இளக்காரமாய் பார்த்து
வெளக்கு வச்சாச்சு
வெள்ளிகிழமை அதுவும் கடன் கிடையாது
இன்னிக்கி மட்டும் கடன் தாரேன்
இன்னோரு நாளு இப்பிடி வராதே



விடி காலையில்
வீதி சங்கு ஊதியாச்சு
அடுமனையில் ஆட்டாம்பால் காப்பிக்கு
அரை கைப்பிடி சர்க்கரை போதல
எதிர்த்த வீட்டில் கரைத்த பாகில்
கொஞ்சம் கடனாய் கேட்டு
காலை டிபன் முடிந்தது
கழனி வேலைக்கு
கணவணை அனுப்ப வேண்டுமே
உணவென்று ஊறுகாயுடன்
தயிர் கொண்டு தாளித்து கொட்டி
களிம்பேறிய தூக்கோடு
களத்துமேடு அனுப்பியாச்சு
வீட்டு வேலை முடிஞ்சிது
வீண் வம்பு பேசும் வேலையில்
காததூரம் போயி
கருக்கு வெட்டி வந்தா
குருக்கு பாயும்
தடுக்கு பொட்டியும் செய்யலாமே
மூணு ஜோடி நாலு ரூபா
மூத்த புள்ளைக்கி
ரெண்டு குயர்ல கட்டுரை நோட்டு
பசும்பால் வித்த காசு
பள்ளிக்கூட பீசுக்கு
சின்னவனுக்கு சினிமா கொட்டகையில்
கண்ணம்மா படம் பாக்கனுமாம்
பக்கத்துவிட்டுல
போன வருழமே
போய் வந்தாச்சாம்
தை மாசம் பொறக்கட்டும்
கைலாசம் கோவிலில்
தினம் ஒரு படம் பாக்கலாம்

கிட்டிப்புல் அடிச்சி
காருவாயும்
பொன்னாந்தட்டாம் புடிச்சி
நாலு ரூபாயும்
புத்த்கத்துகுள்ள வச்சுருக்கேன்
பொழுது சாஞ்சதும் போய் வருவோமா?

போடா போகாத்தவனே
தினம் ஒருத்தன்
திருட்டு கள்ள குடிச்சிட்டு
இருட்டுல நிக்கிறானுக
இன்னோரு நாளு போவோம்

கதிர் வீட்டு மாமா
கூட வாராராம்
கட்டு சோறு கூட வேண்டாம்
சுட்ட பனம்பழம் போதும்
சுருக்க வந்து சேருவேன்

கரண்டுக்கு எழுதி போட்டு இருக்கேன்
கருப்பு வெள்ளை டீவில
குழ்பூ படம் பாக்கலாம்
இருக்கிற காச எடு
எதிர்த்த வூட்ல
குமுதா பொண்ணுக்கு சடங்காம்
நானும் வச்சு குடுக்கனும்
நம்ம வூட்டுக்கு நாளக்கி
வந்து நிப்பா
சிலுக்கு மாமி
இந்த சிருக்கிக்கு என்ன செஞ்சேன்னு

பயலுக்கு நல்லா படிப்பு வருதாம்
பட்டணம் போயி படிக்கணுமாம்
கட்டணம் ஒன்னும் இல்லையாம்
கை செலவுக்கு மட்டும்
குறைவில்லாம வேணுமாம்
தளுக்கு நடை போட்டு
சுருக்க படிச்சி வந்து
கருவ காட்டுக்குள்ள
கரண்டு மரம் கொண்டு வந்து
இரண்டு நாள் இருந்து பாக்கல
உடனே கெளம்பி வரணும்
உனக்கு வாழ்க்கை உசந்த எடத்துல
கடுதாசி பாக்கையில
கண நேர சந்தோஷம்
உடனே ஊர் கழனி ஞாபகம்
என் செய்ய என் குடி உயர
இதோ கடல் கடந்து
கரண்டு பக்காத கிரமத்தான்
இன்டெர்னெட்டில் காதல் கதை
இழுக்கிறதே ஊர் ஞாபகம்
பனங்காய் வண்டி ஓட்ட ஆள் இல்லையாம்
பத்திரிகையில் வரி விளம்பரம்!

Receomand this post to other reades :

Wednesday, February 08, 2006

.கல்லூரி காதல்.




இங்கே அரங்கேற்றம் ஓர் காதல் சரித்திரம்
சின்ன ரணம்தான்
முளையிலேயே முடக்கபட்டதே
மூன்று நாட்கள் பேசியும்
மூன்றெழுத்து சொல்
மூச்சு வாங்கியதே!
உதவியும் நட்பும்
உறவாகாதோ?
வேண்டாத விஷயத்திற்கு சிரித்து
வேண்டிய விஷயத்தை மறைத்து
எஷுதிய கடிதம்
எத்தனை நாளாய் சட்டை பையில்?
அருகில் சென்றாலே
தைரியம் இல்லை
திறந்த மடல்
மலர் கரத்தில் சேர!
பாழும் காதல்
பசங்களால் வந்ததே!
பத்து பைசா கார்டையும்
பாவி அவள் கடிதமென
கற்பனை செய்து
எனக்குறியவள் அவள்தானென
எகோபித்த சந்தோஷத்தில்
எல்லாம் கற்பனையா?
இருந்தாலும் என்னுள்ளே
இதுவும் ஓர் காவியமாய்
எனக்குள்ளும் ஓவியமாய்
எங்கும் சேரா தண்டவாளமாய்!

Receomand this post to other reades :

Tuesday, February 07, 2006

ஓ! இதுதான் காதலா!


கண்டேன் அந்த காட்சி
கன்னியும் காளையும்
கைகோர்த்து மெய்யோடு மெய்யாய்
கண்கள் மட்டும்
கடும் நித்திரை போல
சுற்றம் மறந்து
கற்றதெல்லாம் அதுதான்
காண்பீர் மக்களே
காட்சிதனை கடை விரித்து
இளம் நெஞ்சமதை
என்னை என்னவோ செய்கிறதே!
அவசர உலகில்
நெரிசலில் நிற்கும் வேலையில்
கட்டணமின்றி காட்சிகள்
நான் மட்டும் இருக்கையில்
விதிபயனென்று விழியிடுகிறேன்
கையோடு மனைவியோ
கூட பொறந்தவளோ இருக்கையில்
கொஞ்சம் மனம் கனக்கிறது
இவர்களுக்கு இதற்கெல்லாம்
வேறு இடம் இல்லையா?
எனக்குள் இருக்கும் நாணம்
எதிரே இருக்கும் ஜோடிக்கு இல்லையே!

ஓ! இதுதான் காதலா!

காதல் வந்தால் சுற்றம் மறக்குமோ!
என் விதி! எனக்கும் அது வாய்க்கலையே!

Receomand this post to other reades :