...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Friday, April 07, 2006

தேர்தல் பார்வை ...... வேதாரண்யம் தொகுதி

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க ,தி.மு.க வேட்பாளர் யார் என முன்கூட்டியே அறியபட்ட தொகுதி இதுவாகதான் இருக்கும்.இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் அ.தி.மு.கவிற்கு ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காமல் போகவே இந்த முறை கடும் போட்டிகளுக்கிடையே களம் காணுகிறது இந்த தேர்தல்.

அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளார் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன்.முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண்கின்றார். 1991 - ல் அம்மாவின் ஆட்சியில் ராஜ்ஜிய சபா உருப்பினராக இருந்தவர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் ஐயர் எம்.பியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டவர்.சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டு ஜெ. அணி ஏற்பட்டபோது அம்மாவிற்கு பாதுகாப்பு கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.அந்த பாசத்தின் அடிப்படையில் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ராஜ்ஜிய சபா எம்.பி பதவி பின்னர் இடைகாலத்தில் அம்மா பதவியிறக்கம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக நியமிக்கப்படும் முன் இவரது பெயர்தான் முன்னிலையில் இருந்தது.விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கும் போதே அடிமட்ட தொண்டர்கள் "ஓ.எஸ்.மணியணை முதல்வாக்கிய அம்மாவிற்கு நன்றி என போஸ்டர்கள் வீதிகளை அலங்கரிக்க அம்மாவிற்கு வந்த கோபத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.இருந்தும் கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.


தி.மு.கவில் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ வாக இருந்த மா.மீனாட்சிசுந்தரம் தி.மு.க பிளவு பட்டபோது ம.தி.மு.க பக்கம் சென்று விட்டார்.இதன் காரணமாக 1996 தேர்தலில் தி.மு.கவின் வேதாரண்யம் வட்ட செயலாளரும் கலைஞரின் பள்ளி தோழருமான செ.யூசூப். பெயர் முன்னிலையில் இருந்தது.பொருளாதார காரணங்களால் தற்போதைய எம்.எல்.ஏ எஸ்.கே.வேதரெத்தினம் தி.மு.க சார்பாக போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார்.


பின்னர் 2001 தேர்தலில் முன்னால் எம்.எல்.ஏ ம.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கு திரும்பி வந்தாலும் அவருக்கு கட்சியில் சீட் தரப்படவில்லை.தொகுதியில் நல்ல பெயரெடுத்த வேதரெத்தினத்திற்கு மாற்றாக யாரையும் நிருத்த முடியவில்லை.
தமிழ்நாட்டிலேயெ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கலைஞரின் தனி பார்வைக்கு உள்ளானார்.


மக்கள் செல்வாக்கும் தொகுதிக்காக தன் சொத்துக்கள் பெரும்பகுதியை இழந்த தி.மு.க.வேட்பாடளர் எஸ்.கே.வேதரெத்தினமும்,

ரோடு போடும் கருவிகள் மட்டும் கோடிகணக்கான ரூபாய் மதிப்பில் வைத்துள்ள மாவட்டத்தின் பெரிய கண்ட்ராக்ட்காரரும்,கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் அ.தி.மு.கவின் வேட்பாளருமான ஓ.எஸ். மணியனும் கடும் போட்டிகளுக்கிடையே களம் காணுகின்றனர்.

இருந்தும் இந்த இரு வேட்பாளர்களும் காண்ட்ராக்ட் தொழிலில் நண்பர்கள்.
வெற்றியும் தோல்வியும் வாக்காளர் கையிலா வேட்பாளர் கையிலா? .........பார்க்கலாம்.

எப்படியோ யார் வெற்றி பெற்றாலும் இந்த தொகுதிக்கு ஒரு மந்திரி பதவி நிச்சயம்!.........
அமையும் ஆட்சியின் சாதகத்தை பொருத்து.

Receomand this post to other reades :

6 Comments:

At 9:44 PM, Blogger குழலி / Kuzhali said...

கடைசியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற உங்கள் அனுமானத்தை சொல்லவில்லையே....

நன்றி

 
At 9:47 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க குழலி!
தலைவரு வந்தா நல்லாருக்கும்னு ஊர்ல சொல்ராங்க! அதுதானுங்க நானும் சொல்ரேன்!

 
At 4:02 AM, Blogger சிவா said...

தம்பி சிங்கு! உங்க தொகுதிய புட்டு புட்டு வைக்கறீங்க. சுவையான அலசல். நான் தான் எங்க தொகுதி பற்றி ஒன்னுந்தெரியாதவனா இருந்திருக்கிறேன் :-(. குழலி சொன்ன மாதிரி, யாரு ஜெயிப்பாங்கன்னு ஊகமா சொல்லுங்க தம்பி.

 
At 5:26 AM, Blogger சிங். செயகுமார். said...

டி.எம் கேன்னு தான் நாங்க சொல்ரோம் .அவங்களுக்குள்ளே அண்டர்.அண்டர்ஸ்டேண்டிங் இருந்தா ஊகம் சரியா இருக்காதே!

 
At 7:59 AM, Blogger ஜோ/Joe said...

சிங்.ஜெயக்குமார்,
அம்மா அம்மா-ன்னு மூச்சுக்கு மூச்சு படிச்சவுடனே நீங்க சிங்கப்பூர் அதிமுக கிளை தலைவர் ஆயிடீங்களோண்ணு நினச்சேன்.

அலசலுக்கு நன்றி!

 
At 4:01 PM, Blogger சிங். செயகுமார். said...

அம்மாவ அம்மான்னு தானே சொல்லனும் , சிங்கபூர்ல கொஞ்சம் பூமிய வளச்சி போட பேசிட்டு இருக்கோம். நீங்க வேற இடையில பூந்து காரியத்த கெடுத்துடீங்களே!

 

Post a Comment

<< Home