வயிற்றுப்பாடு

இரு வேளை சோறு
இன்றாவது கிடைக்குமா
ஏங்கியதே மனம்
கணக்கராய் ஓர் வேலை
என் பசி தீர்ந்து
இன்னும் ஓர் உயிருக்கு
என்னிடம் காசு
கால் கடுக்க நடந்து
ஊழியம் பார்த்து
வீடு திரும்புகையில்
உடம்பெல்லாம் அசதி
கடன் சொல்லி காலணா வட்டியில்
உடனே ஓர் சைக்கிள்
இனிதாக என் பயணம்
முச்சந்தி கடக்கையில்
என் முன்னே ஓர் பிகர்
கண்ணோடு சேர்ந்ததே -என்
கனவெல்லாம் கலைந்ததே
மறுநாளும் அதே சந்தில்
ஒரே பாதையில்
சினேகமாய் சின்ன பார்வை
அனேகமாய் காதல்தான்
இன்றோடு வாரம் ஒன்று
இன்றேனும் பேச வேண்டும்
என்ன பெயரென்று
குட் மார்னிங்
கொஞ்சம் லேட் போல
ஆமா அம்மாக்கு சுகமில்ல
அதான் கொஞ்சம் லேட்
ஐயம் குமரன் ...நீங்க
நர்மதா..
நைஸ் நேம்
நட்பாய் மாறி நிறைய சந்தோஷத்தில்
இன்று காதலாய்
வெள்ளி கிழமை விநாயகர் கோவிலும்
சனிகிழமை சினிமா தியேட்டரும்
சிக்கனமாய் காதல் படிப்பு
அக்கம் பக்கம் பேசும்முன்
சிக்கலின்றி சிரமமுமின்றி
வக்கனையாய் தட்சணையும்
போய்வர புல்லட்டும்
வேண்டாமென்று
பெற்றோரும் உற்றாரும் சூழ
பெருமாள் முன்னிலையில்
திருநாள் எங்களுக்கு
பிள்ளை இரண்டும்
பள்ளி போய் வர
பைக் போதலையே
பழைய விலையில்
கழிவு விலையில்
எங்கள் வீட்டிலும்
சொந்தமாய் ஓர் கார்
பெண்ணுக்கு கல்யாணம்
கண்ணீர் துளியோடு
புலம் பெயர்ந்த வாழ்க்கை
பையனுக்கு காதல் கல்யாணம்
பைசா செலவில்லாமல்
நைசா என்கிட்ட சொன்னா
நானோ மறுக்க முடியுமா?
அழகான மருமகள்
அமுதாய் குழந்தைகள்
என்னவளாம் மனைவி
என்னுருவம் மகன்
எல்லோரும் இன்புற்றிருக்க
திகிலாய் ஓர் நாள்
சதிராட்டம் என் வாழ்வில்
சர்க்கரை வியாதியம்
சின்ன காய்ச்சலுக்கும்
வண்ண நோவுகள்
ஒரு வேளை சோறு
கிடைக்குமா இன்றாவது?
நன்றி : தமிழோவியம்
Receomand this post to other reades :
9 Comments:
அந்தோ பரிதாபம்
இதுதானா உங்கள் கதை
கவலை வேண்டாம்! தோழா
எங்கும் நடக்கும் கதை
இல்லாமை இருக்கையிலே
சொற்பநிழல் சொர்க்கலோகம்
எல்லாமே வந்த பின்னர்
கவலை மட்டுமே உலகம்
அன்புடன்
கீதா
வணக்கம் கீதா!
வயிற்று பசிக்கு மருந்து உணவு!
மருந்தே உணவானால்!
//மருந்தே உணவானால்!//
அதையே சாப்பிட வேண்டியதுதான்.
வேற வழி?
சர்க்கரை நோவுன்னாலும் சோறு தின்னலாமே, சட்டி சட்டியாகத்தான் உள்ளே தள்ள முடியாது- அளவோடு உண்டு வளமாக வாழுங்கள் தம்பி!
அடக் கொடுமையே தங்களுக்கு சர்க்கரை வியாதியா.... ஆனால் அதற்கு பட்டினி இருக்க வேண்டியதில்லையே? சர்க்கரை அதிகம் இல்லாத உணவாக உட்கொள்ளலாமே?
நாலு விளையாட்டில் உங்கள் பெயரை போட்டிருக்கிறேன்
வாங்க டீச்சர் அதேன் வழி வெறென்ன செய்ய!
நன்றி தாணு, அனுசுயா நமக்கு சக்கரை வியாதியெல்லாம் இல்லிங்கோ! உங்கள் அன்புக்கு என் நன்றிகள்
முதல் வருகைக்கு வந்தனம் மாதங்கி ! நாலு நாலு ....முன்னாடியே வெள்ளாடியாச்சு. நன்றி உங்கள் அழைப்பிற்கு!
Post a Comment
<< Home