...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Friday, March 10, 2006

சுமை தாங்கி!



நானறிந்த கடவுளில்
நாடறிந்த தெய்வம் நீதானே1
நடை பயின்று உடை கட்டி
நாளும் பொழுதும் நான் வளர
நித்தம் நித்திரை
கடன் தந்த கற்பகமகளே !

நடந்தேன் நடை வண்டியாய்
நான் சொல் பழக
நீ என் குருவாய்
கைவிட்ட கணவனை
கனவில் ஓரம் வைத்து
மடியில் மாதம் பத்து சுமந்தவளே!
தினமெல்லாம் எனக்கு தந்தையாய்
உனையல்லவா கண்டேன்!



காதலித்தேன் கன்னி அவளை
மோதலுக்கு முன்னே
கானல் நீரான என் காதலுக்கு
கரை கண்ட நண்பனாய்!

வேலையிடத்தில் விதமான சண்டைகள்
கலைமகளே கன பொழுதில்
துயரெல்லாம் போனதே
பொறுமை அவசியம்
புத்தி சொன்ன ஆசானே
என் தாயே
உன்னுள் எத்தனை முகங்கள்?

குழந்தையாம் நான்
குழந்தைகளிரண்டு எனக்கு
என்னையும் சேர்த்து
குழந்தைகள் நான்கு
என்ன ஓர் கணக்கு

அழுதேன் நான்
அசடே அமுதே
கிழவன் ஆனாலும்
கிழவியாம் நான்
குழந்தை நீயே
அம்மா தாயே
சுமை தாங்கியே
உன்னோடு நான்
உலகெல்லாம் பவனி வர
காலமெல்லாம் எனக்கு
கரம் தருவாயா?


நன்றி: தமிழோவியம்

Receomand this post to other reades :

4 Comments:

At 7:43 PM, Blogger குமரன் (Kumaran) said...

நல்ல கவிதை செயகுமார்.

 
At 7:58 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் குமரன் .வாழ்த்துக்கு நன்றி!

 
At 8:05 PM, Blogger கீதா said...

//என் தாயே
உன்னுள் எத்தனை முகங்கள்?

//

நல்லதொரு கவிதை செயகுமார்.. உணர்ந்து எழுதி இருக்கின்றீர்கள்.

அன்புடன்
கீதா

 
At 8:12 PM, Blogger சிங். செயகுமார். said...

வருகைக்கும் தருகைக்கும் நன்றி கீதா!

 

Post a Comment

<< Home