...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Saturday, April 01, 2006

ஹலோ அங்கிள்...

பறவைகள் கூடு திரும்பும் அந்தி வேளை
பணியிடம் சென்று திரும்புகையில்
என்னுடன் தினமும்
மண்மீது தடம் பார்த்து
சின்ன நடை போடும் என் சினேகிதி!


இன்றோடு நான்கு நாட்கள்
ஊரிலிருந்து உறவுகள் விட்டு
உழைப்பு தேடி வந்த கணவருக்கு
உற்ற துணையாக
கற்ற கல்வி கொண்டு
ஏற்ற வேலை
இனிதே கிடைத்ததே!

எங்கோ பார்த்த முகம்
அவளும் சிரிக்க முயலுகின்றாள்
என் பங்குக்கு நானும் அவளோடு!

சின்னதொரு சங்கிலியில்
சதுரமாக கோர்த்த அந்த டாலர்
எனக்கும் அவள் முகவரி
எளிதில் சொன்னதே!


என்னையும் அவளையும்
இன்னும் பிறரையும்
இணைத்தது இங்கேதானே!

மனதிற்கு இதமளிக்க
வாரத்தில் ஓர் நாள்
கூட்டு தியானம்
இங்கேதான் இவளை
கண்டதாக நினைவு!

ஹலோ சிஸ்டர்
ஆர் யூ அபியாசி
சின்னதொரு முகத்தில்
வண்ணமிகு வசீகரம்!


சீனர்களும் மலாய்களும்
சென்ற இடமெல்லாம் சிதறி கிடக்க
அறிமுகம் தெறிமுகம்
தேவையில்லாமல்
அழகான தமிழ் முகம்
காண கிடைத்ததில் - அங்கே
ஓர் அதிசயம்தான்!


ஒரே அலைவரிசையில்
எதிர் எதிர் அலுவலகத்தில்
என் நண்பர் என்றெண்ணியதில்
என் சினேகிதிக்கும் சந்தோஷம்!

மதிய வேளையில்
உணவோடு மனம் விட்டு
மணிநேர பேச்சுக்கள்!

தமிழ் பெண்களே இப்படித்தான்
தலைவனுக்கு படைத்துவிட்டு
தனக்கென்று தட்டில்
தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல
துளியோண்டு சாப்பாடு!

தோழியும் சளைத்தவளா!
தோசை ஒன்றே போதும்
தொட்டுகொள்ள சட்டினியும் சாம்பாரும்
எனக்கு மதிய உணவு
இது போதும் என்பாள்!

ஞாயிறு தோறும்
நாங்கள் சந்திப்போம்
கூட்டு பிரார்த்தனை என்று
தொலைவான ஓர் மையத்தில்!

நான்கு மாதங்கள் கடந்திருக்கும்
நடுவில் ஓர் நாள்
நண்பரே சகோதரா
நான் ஊர் போக
நாளும் வந்து விட்டதே
வேலையை விட மனசில்லை
வேறு வழியுமில்லையே1


ஊர் ஞாபகம் - என்
உற்ற தோழியையும்
உளம் குலைய வைத்ததோ!
பாவம் அவள்!
கல்யாணம் என்ற சடங்கால்
உடன் பிறந்தோர்
உயிர் தந்தோர்
உறவும் நட்பும் விடுத்து
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
இவன் தான் தலைவன்
அவனே உன்னவன்
அன்றிலிருந்து அன்னையும் தந்தையும்
அறிந்தோரும் தெரிந்தோரும்
எங்கோ பார்த்த முகமாய்
என்று காண்போம் இவர்களை
ஏக்கம் கொள்ள வைத்ததோ!


இல்லை நண்பரே
இனிய செய்தியொன்று
இனி நான் ஓருயிரல்ல
எனக்குள்ளுன் ஓர் உயிர்!


ஆச்சரியமும் சந்தோஷமும்
முதன் முதலாய் ஓர் பெண்
முழுகாத செய்தியொன்று
என்னிடம் பகர்ந்ததே!


பின்னொரு நாளில்
பிரார்த்தணை முடிந்து
கடிகாரம் பார்க்கையில்
கரம் ஒன்று பற்றியதே
வணக்கம் பிரதர் நலம்தானே
நலந்தான் நண்பரே ! நீங்கள்!?


உங்களை நானறிவேன்
என்னை நீங்கள் அறியுமோ?
என்னுள் குழப்பங்கள்!


இவள்தான் என் மனைவி - என்
சினேகிதியை கைகாட்ட
சிதறிய சிரிப்பலைகள் - என்
சின்ன இதயமும் நிரம்பியதே!

வெள்ளி கிழமை பயணத்திற்கு
விமான டிக்கட் எடுத்து
வழியனுப்ப வர இயலாது.
வாழ்த்துக்கள் சகோதரி
நிகழ்வுகள் நிழலாய் நகர!


ஞாயிற்று கிழமை
பிரார்த்தனையில்
நான் கண்டேன் அவளை
பயணம் தள்ளி போனதோ!


என்னருகே வந்த அவள்
இனிய நண்பரே
பயணங்கள் தள்ளி போனது
இனி நான் எப்போது
ஊர் பயணம்
எனக்கே தெரியவில்லை!

சின்னதொரு சிரிப்பில்
அவள் மனம் படித்தேன்
எதுவும் விளங்கவில்லை!

டெலிவரி ஆகிவிட்டது
சுக பிரசவம்தான்!

எனக்கும் தலை சுற்றல்
நேற்றுதான் குழந்தை ஜனனம்
இன்று எப்படி இங்கே நடனம்!


குறை பிரசவம் நண்பரே
இரை கொடுக்க கூட
இனிய தாய் வேண்டாமாம்
கனிவான நர்ஸே போதுமாம்!


என் விதி யாரை நோவ
எட்டு மாததில் எனக்கும்
குட்டை காலும் கையுடன் குழந்தை!
மூன்று மாதம் முழுதாய்
முழு பராமரிப்பும்
மருத்துவமணையில்!



கருத்தும் கவனமும்
கவலை கொள்ள வேண்டாம்
குழந்தை இனிதே
அழகான தூளியில்
அமுதுண்டு சிரிக்கிறான்!


இன்று காலையில்
எனக்கும் ஓர் போன்
புரியாத பாஷையில்
ஹலோ அங்கிள்
நவீன் பேசரேன்!



நன்றி: திசைகள்

Receomand this post to other reades :

20 Comments:

At 8:41 AM, Blogger அனுசுயா said...

நட்பை பற்றிய இனிய கவிதை. ஆனால் சற்று புரியவில்லை, கடைசியில் அந்த தொலைபேசி அழைப்பு..?

 
At 8:41 AM, Blogger அனுசுயா said...

நட்பை பற்றிய இனிய கவிதை. ஆனால் சற்று புரியவில்லை, கடைசியில் அந்த தொலைபேசி அழைப்பு..?

 
At 12:30 PM, Blogger சிங். செயகுமார். said...

அச்சோ புரியவில்லையா அனுசுயா!
சம்பந்த பட்டவரின்
குட்டி பையன் தான் அந்த நவீன்

 
At 10:18 PM, Blogger சினேகிதி said...

சீனர்களும் மலாய்களும்
சென்ற இடமெல்லாம் சிதறி கிடக்க
அறிமுகம் தெறிமுகம்
தேவையில்லாமல்
அழகான தமிழ் முகம்
காண கிடைத்ததில் - அங்கே
ஓர் அதிசயம்தான்!
:-)

Konjam vilangina mathirium vilangatha maathirum irunthathau...comments padichen vilangidu :-)

 
At 4:26 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்ல கவிதை.. :) குழந்தைகள் ரொம்ப சீக்கிரம் தான் வளர்ந்து விடுகிறார்கள்.

 
At 5:49 PM, Blogger சிங். செயகுமார். said...

சினேகிதி கவிதை புரிஞ்சுதா? ரொம்ப சந்தோஷம்!

 
At 4:27 PM, Blogger சிங். செயகுமார். said...

உண்மைதான் பொன்ஸ்
நேற்று நடந்த நிகழ்வு போல
நினைவில் இன்று!

 
At 3:40 AM, Anonymous Anonymous said...

மனைதை தொட்ட கவிதை=D>

MP

 
At 4:05 AM, Blogger சிவா said...

கவிதைய பலமுறை படிச்சி மெயில்/சாட்டில் பாராட்டிட்டேன். இருந்தாலும் இன்னொரு தடவை சொல்லிடறேன் தம்பி. கண்ணு முன்னாடி ஒரு கதையையே உணர்ச்சி பூர்வமா, அதுவும் கவிதையா கொண்டு வந்துட்டீங்க. நீங்க முடிச்ச 'ஹலோ அங்கிள்' அந்த குழந்தை தான் என்று உடனேவே புரிந்து விட்டது. நல்ல கவிதை. அடிக்கடி எழுதுங்க.

 
At 9:25 PM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி சிவா . உங்களுக்கு கவிதை புடிசதுல் எனக்கு சந்தோஷம்!

 
At 10:55 PM, Blogger மாமன்னன் said...

சிறப்பான பதிவு :-)
ஆரோக்கியம்

http://ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it.

 
At 7:00 PM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி நண்பரே ஆரோக்கியம்!

 
At 1:34 PM, Blogger கவிதா | Kavitha said...

ரொம்ப நல்லா இருக்கு...

 
At 6:01 PM, Blogger சிங். செயகுமார். said...

"ரொம்ப நல்லா இருக்கு... "


கவி தா உங்க கவிதை நல்லா இருக்கு!
நன்றி

 
At 9:56 PM, Blogger Chandravathanaa said...

நன்றாயிருக்கிறது.
கவிதை நடையில் ஒரு அழகிய கதை.
மனiதில் இனிமையான உணர்வைத் தருகிறது.

 
At 10:05 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க சந்திரவதனா! முத முறையா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கீங்க, நன்றிகள் "சந்திர வதனா " இந்த பெயரில் ஒரு தொடர் கதை ஒரு வார பத்திரிகையில் வந்தது. ஒவ்வொரு வாரமும் அந்த பெயரின் ஓவியத்திற்காக காத்திருந்த ஞாபகங்கள் கண்முன்னே......

 
At 10:01 AM, Blogger Chandravathanaa said...

செயகுமார்
உங்கள் வரவேற்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

 
At 8:29 PM, Blogger கைப்புள்ள said...

கவிதை நன்றாக இருந்தது சிங். ரசித்தேன்.

 
At 8:58 PM, Blogger சிங். செயகுமார். said...

மீண்டும் நன்றி சந்திரவதனா!

 
At 8:58 PM, Blogger சிங். செயகுமார். said...

வாங்க கைபிள்ளை! உங்கள் சந்தோஷமே என் சந்தோஷம்!

 

Post a Comment

<< Home