...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Saturday, December 31, 2005

புத்தாண்டு வாழ்த்துக்கள்!









நேற்றோடு கழிந்ததே

நெஞ்சிலிருந்த நிறைவான ஆண்டு

எண்ணியதெல்லாம் நடந்தது

எண்ணத்திலடங்காததும் நடந்ததே

மின்னஞ்சல் கண்ணாம்பூச்சி

தண்ணீரில் கண்டம் தமிழ்நாட்டில்

பிள்ளைகளையும் பலி கொண்டதே

பெரும் தீ விபத்தில்

நேற்றோடு ஒழியட்டும்

நெஞ்சகலா நீச நிகழ்வுகள்

சானியாவின் சாகசங்கள்

சோனியாவின் தலைமையில்

சுகமான ஆட்சியில்

செம்மொழியாம் தமிழ்

செவிக்கு நல்லதோர் செய்தி

எண்ணிய திட்டமெல்லாம்

எதுவரையில் இப்போது?

இதுவரையில் இவ்வளதுதானா?

வரும் ஆண்டில் வகையாய்

கற்றோரும் சுற்றமும்

கனிவோடு வாழ்த்திட

இனி ஓர் உலகு செய்வோம்

இனிய இந்நாளிலே

என் உளம் கனிந்த

நண்பர்களே நல்லோரே

உங்களுக்கு என் இனிய

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Receomand this post to other reades :

Friday, December 30, 2005

வேண்டாம் பெண்ணே!





கண்ணோடு ஏனம்மா

நீர்கோலம்!

உன்னோடுதான் சேர்வேன்

உனக்கேன் வெருப்பு

உன் மீதே?

கண்ணாளன் வருவான்!

காத தூரம் இருப்பதால்

கவி மட்டும்தானே சொல்வான்!

உன் கரம் பற்ற

என் கரம் படும் பாடு

உன் மனம் அறியுமோ?

ஒரு வரம் கேட்பேன்

திருவாய் மலர்ந்து

தேனே சொல்வாய்

உன்னவன் இருக்கும் வரை

கன்னத்தில் ஈரம்

கடுகளவும் வேண்டா

சொல்லாலடித்தாய்

என் வரவு இல்லை என

நினைத்தாயோ?

ஏனிந்த கண்ணீர்

உன் சோகம் எனக்கு புரியும்

என் தேகம் உனக்கும் தெரியுமோ?

தெரிந்துதானே கலையிழந்த

என் தாடிக்கு

மழையாக உன் கண்ணீர்!

இடுகாடுதான் முடிவென்றால்

உன் சுடு கவி எங்கே காண்பேன்

விடு விட்டு விடு - உன்

வேண்டா எண்ணதை!

கை சேர்வோம்

மை விழியாளே

கார்காலம் முடியட்டும்

கடும் புயலும் மழையும்

கப்பல் தனை கவிழ்க்குமே

இரண்டு திங்கள் கழியட்டும்

முரண்டு புடிக்காதே

திரண்ட கண்ணீருக்கு

வன்முறை சொல்லி விடு

வளை கரத்தாளே

வருகிறேன் சீக்கிரம்!

Receomand this post to other reades :

Monday, December 26, 2005

நினைவஞ்சலி!

Image hosted by Photobucket.com







Image hosted by Photobucket.com



இயற்கை சீற்றங்கள் பல வகையில் கண்டும் கேட்டும் பாதிப்புக்கள் அறிந்திருந்தாலும் , டிசம்பர் 26 - 2004 இந்தியாவையே உளுக்கிய துயர நாள். தமிழ் அகராதிக்கு ஓர் புதிய சொல் "சுனாமி". நாகபட்டினம் மாவட்டதில் மட்டும் 40,000 க்கும் மேற்பட்ட உயிர் சேதங்கள். எங்கள் ஊர் கடற்கரை மீனவர் குழுமத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85. கணக்கிலடங்கா கால்நடைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறிய காட்சிகள்,புதையுண்ட பிணங்கள்,காக்கையும் குருவிகளும் குதறிய கோரமான பிணங்கள், யார் என்று அறியமுடியாத அநாதையாய் போன பிணங்கள் காண்போரை திகில் கொண்ட அந்த கருப்பு நாள் இன்றோடு ஒரு வருடம் ஆயிற்று!

கடற்கறை ஓரங்களில் அமைந்த வீடுகள் மூழ்கடித்த சேற்றுக்குள் சின்ன சின்ன குன்றுகளாய் காட்சியளித்த இடமும்,ஓடி விளையாடிய கடற்கரை மணலும் கரு நிற சேறும் சகதியும் படர்ந்து மணலில் நிறங்களில் மாற்றங்கள்!

சுனாமி நிகழ்ந்த அந்த தினம் , வருஷகணக்கில் தூரமாய் போன என் நண்பரிம் முகம் காண
மலேசியாவில் நிறைந்த சந்தோஷத்தில் இருந்த வேளையில், இடியென ஓர் செய்தி சுனாமி என்னும் சூராவளி சீற்றம்! கலங்கி நிற்கும் வேளையில் , பேரிடியாய் மற்றொரு செய்தி. நண்பரின் மனைவியும் சுனாமியில் மாயம்!

உலக சாதனை "கின்னஸ்" பதிவில் இடம்பெற்ற நாலுவேதபதி என்னும் கிராமத்தில் ஒரே நாளில் 50,000 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து வரும் சூழலில்,ஆடு மாடுகளுக்கு அந்த இளம் மரக்கன்றுகள் இரையாகாமல் தன்னார்வ நோக்கோடு பராமரிப்பு மேற்பார்வைக்காக சென்ற,பச்சிளம் குழந்தைக்கு தாயான - என் நண்பரின் மனைவியும் சுனாமியில் விலாசம் தெரியாமல் போனார்!

ஊரிலிருந்து ஒரு நண்பர் " தம்பி அரசு உதவிக்கு முன் அண்டை மாநிலத்திலிருந்தும் நல்லெண்ணம் கொண்டோரின் நிவாரண பொருட்களும் ஊரை நிறைத்து விட்டன. குளித்து மூன்று நாட்களாயிற்று .மக்களோடு மக்களாய் மீட்பு பணியில் நான் இங்கே!"

ஊடக செய்திகளை பார்க்கும் வேளையில் மீட்புபணியில் என்னுடைய பங்கும் இடம்பெறாமல் போனதில் , இப்பொழுதும் மனதில் வருத்தங்கள்.நண்பர்கள் நன் முயற்சியால் சிதறுண்ட குடும்பங்கள் குழந்தைகள் ஒருங்கிணைப்பு,குடியிருப்பு கூடாரங்கள் அமைத்து கொடுத்த அவர்களை நன்றியோடு நினைத்து பார்க்கின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக மாவட்ட ஆட்சி தலைவரின் சீரிய தலைமையின் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகள் பழைய நிலைக்கு திரும்புகின்றன. அனாதையய் போன 99 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு அனைத்து உதவிகளியும் வழங்கி அந்த குழந்தைகளோடு குழந்தையான் மாவட்ட ஆட்சி தலைவர் திரு ராதாகிருஷ்னன் அவர்களுக்கு ஒரு "சலாம்" போட்டு ,சுனாமியால் சுழற்றியடிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்!

Receomand this post to other reades :

Friday, December 23, 2005

நான் காதலுக்கு எதிரியா? -தொடர்ச்சி.

முதல் பகுதியை இங்கேபடிச்சிட்டு வாங்களேன்

அந்த சமயத்துல அந்த சின்ன பொண்ணு (நம்ம ஹீரோயின் தங்கை)நண்பர் வீட்டுக்கு வருவதும் போவதுமாய் இருந்துருக்கு சின்ன சின்ன தூதெல்லாம் சாட மாடயா நடந்திருக்கு, தலைவருதான் எக்ஸர்ஸைஸ் பண்ணுவாரா பொண்ணுக்கு புடிச்சி போச்சு.

(சினிமா நிகழ்வும் நெசத்தோட ஒத்து போகுமோ?)

நானும் நண்பரும் ஒருநாள் நடந்து போய் கிட்டு இருக்கும் போது பொண்ணுங்க சைக்கிள்ள முன்னாடி போறதும் சுலோ பன்றதும் நடந்திச்சி.நமக்கு அந்த எழவெல்லம் ஒன்னும் அப்ப புரியல.பாட்டு போட்டதுக்கு அப்புறம் தான புல் மேட்டரும் தெரிய வந்துச்சி!

மூர்த்தி நீங்க வேற வீடு பாத்துகுங்க,இல்ல நான் வெளியே போயிடுறேன்.

இல்ல ஜேகே இனி அந்த பொண்ணுங்க இங்க வரமாட்டங்க.

சரி அதையும் பார்க்கலாம்.

மறுநாளும் அதே கூத்து.

பொன்ணுங்க வந்து கும்மாளம் போடுராங்க. (அவங்களுக்கு அது ஒரு ஜாலியான மேட்டர். எனக்கு தெரிஞ்ச வரையில காலேஜிலெல்லாம் பொண்ணும் பையனும் கண்ணும் கண்ணும் பாத்துகிட்டாலே போதும், கூட இருக்கிற பசங்க மத்ததெல்லாம் நடத்தி வச்சுருவாங்க .இந்த பையன் அந்த பொண்ண பத்தி ஒன்னுமே சொல்லி இருக்க மாட்டான் ,ஆனா சொல்லாத விஷயங்கள சொல்லி அப்பிடியே லவ்வ டெவலப் பண்ணி உட்டுடுவாங்க. அப்புறம் ரெண்டும் அங்கே இங்கே அலைஞ்சிட்டு இருக்கும் )
அத மாதிரிதான் இந்த லவ்வுக்கும் ஆறு பொண்ணுங்களும் கூட சுத்துவாங்க.

என்ன மாப்ள இனி இந்த பக்கம் வரமாட்டங்கன்னு சொன்னீங்க கச்சேரி மருபடியும் ஆரம்பிச்சிட்டே.

இந்த விஷயங்களெல்லாம் வீட்டு கார அக்காவுக்கு புரியாதுன்னு நெனச்சிகிட்டீங்கா?

நமக்கு குடுக்கிற மரியாதையை நாம காப்பாத்திகலன்னா. திடீர்னு நாளக்கி சொல்லுவாங்க வீட்ட காலி பண்ணுங்கடா நாய்களான்னு அது நல்லவா இருக்கும்?

சொன்னா அந்த புள்ள கேக்க மாட்டேங்குது நான் என்ன பண்ண?


சரி என்கிட்ட விட்டுடுங்க மேட்டர.

என்ன பண்ணலாம் சொல்லுங்க ஜேகே.

ஏழு பொண்ணுங்கள்ள ஒரு பொண்ண கூப்புட்டு.

இங்க வாம்மா.

என்னங்ண்ணா!

டுயூஷன் முடிஞ்சிதா?

முடிச்சிட்டுதாங்கண்ணே வாரோம்.

ஓகே இப்ப நீ என்ன பண்ணுர உன் பிரண்ட்ஸ் எல்லாரரையும் கூட்டிகிட்டு காலேஜுக்கு எதிர்தாப்புல கிரவுண்ட் இருகுல்ல அங்க வந்துடு.மூர்த்தி ஏதோ பேசனுமாம்
வரச்சொன்னாப்புள,இப்போ இல்ல நாங்க போயி கொஞ்ச நேரம் கழிச்சி,

சரிங்ண்ணே.

நண்பரும் நானும் அந்த எடத்துக்கு போய்ட்டோம்.. சிறிது நேரம் கழித்து அந்த பட்டாளமும் வந்து சேந்துச்சி.

என்னயா நீங்க பேசுரிங்களா இல்ல நானே பேசிடட்டா?

நீங்களே பேசிடுங்க ஜேகே

ம் அனிதா பேசலாமா?

ம் பேசலாமே?

மூர்த்தி என்னதான் சொல்ராரு?

அவரு பிரண்டு நீங்கதானே உங்ககிட்ட சொல்லி இருப்பாரே.

எல்லாம் சொன்னாரு.

லவ் எந்த அளவுல போயிட்டு இருக்கு?

(ஏரியாவே ஒரே சிரிப்புதான்)

ம் சொல்லுமா?

சரி லவ் பண்ணுங்க வாண்டான்னு சொல்லல ,அதுக்கு இப்பிடியா ஊர் கூடி ஆர்பாட்டம் பண்ணுவாங்க?

நான் என்னத்த சொல்ல ,நீ என்னத்த புரிஞ்சுக்க போரே?

ம் .. ரொம்ப இருட்டி போயிட்டு சீக்கிரம் சொல்லுங்க.

அப்பதான் எனக்கே உறைக்குது ரெண்டு பசங்க ஏழு பொண்ணுங்க ,யாரும் பாத்தா என்ன நினைப்பங்க

சரிம்மா சீக்கிரம் சொல்லி முடிச்சரேன்.

இந்த லவ்வெல்லம் நல்லா இருக்கும்னு நெனக்கிறியா?

நாங்க யாரு எந்த ஊரு அது, எந்த மாவட்டத்துல இருக்கு? அதுனாலும் தெரியுமா?

ஒன்னே ஒன்னுதான் தெரியும் ,பேரு தெரியும் எங்க வேல பாக்குரோம்னு தெரியும், வேர என்ன படிச்சிருக்கிறோம்னு தெரியும்.

அவ்ளோதானே? உங்க அய்யா அம்மாவெல்லாம் என்ன பொசிசன்ல இருக்காங்க? நளைக்கே நீ ஒரு டாக்டராகவோ,இல்ல கலெக்டராகவோ ,வருவதற்கான ஸ்கோப் இருக்கு - பணமும் இருக்கு, இங்க பாரு இத விட நல்ல வேல கெடச்சா அப்பிடியே கெளம்பி போய்டுவோம்.

இந்த வயசுல காதல் அது இதுன்னு கற்பனை பண்ணி எதிர்காலம் பாழா போய்டுமே! உனக்கே தெரியும் போன மாசத்துக்கும் இந்த மாசத்துக்கும் உன்னோட படிப்புல எவ்ளோ வித்தியாசம்னு. இதெல்லாம் பேசரதுனால நான் காதலுக்கு எதிரானவன் இல்ல, இந்த படிக்கிற வயசுல வேண்டாமே. இந்த விஷயம் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா எவ்ளோ சங்கட படுவாங்க. நீங்க பண்ற சேட்டை எங்களையும் அசிங்க படுத்துதே, பிளீஸ் இதுக்காக போய் அழாதே, இப்போ நான் எத சொன்னாலும் உனக்கு ஒரைக்க போறதில்லே . வேண்டாம் எல்லாத்தையும் விட்டுட்டு படிப்புல கான்செட்ரேட் பண்ணு .அதான் உனக்கும் நல்லது உன் கேரியருக்கும் நல்லது. காத்லிக்கிறது தப்பில்லை,அதுவே உன்னோட காரியருக்கு இடஞ்சல் இல்லாம இருந்தா,ஆனா இந்த வயசுல அதெல்லாம் புரிஞ்சுகிக்கிற பக்குவம் இப்போ உனக்கு பத்தாது . நான் இதுக்கு மேல பேசினாலும் அது உன் காது மடல் வரைதான வந்து சேரும்

சரி ரொம்ப இருட்டி போயிட்டு.

என்ன மூர்த்தி கெளம்பலாமா?

இனி என்ன பாக்க மாட்டிங்கள்ள ,அப்புறம் பேசவே மாட்டிங்களா?

அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சிட்டா

சரி கெளம்புங்க .

மெயின் ரோடு வரைக்கும் கொண்டு விட்டுட்டு நண்பரோட நான் வீட்டுக்கு வந்துட்டேன்.

அன்னிக்கி ராத்திரி நமக்கு தூக்கம் போச்சு.

ரெண்டு நாளைக்கு முன்னதான் பக்கதுல ஒரு பொண்ணூ லவ் பெயிலியர்ல சூசைடு பண்ணிகிட்டா!

ஏது நாம வேற கணமா லெக்சரிங் பண்ணியாச்சி, பாவம் சின்ன புள்ள வேற,
எதாவது ஒன்னு கெடக்கு ஒன்னு ஆயிட்டா ,விடியரத்துக்குள்ள நம்மள குழி வச்சுடுவானுக,
நைட் பத்து மணியிலேர்ந்து விடியிர வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ மொட்ட மாடிக்கு போயி அந்த புள்ள வீட்டாண்ட எதும் லைட் வெளிசம் தெரியுதான்னு பாத்து அன்னிக்கி தூக்கம் போச்சு.

விடிய கால 5 மணி இருக்கும் அப்பிடியே அந்த பொண்ணு வீட்டு பக்கமா ரோட்டு வழியே பார்த்து கிட்டே போறேன்.

அப்பா கொஞ்சம் மூச்சு வந்துச்சி,

அவங்கம்மா வாசல்ல கோலம் போட்டு கிட்டு இருந்தாங்க ஆக ஒன்னும் அசம்பாவிதம் இல்ல,இருந்தாலும் அந்த புள்ளய பார்க்கலையே. அன்னிக்கி ஆபீஸ் மாட்டம் போட்டுட்டு ஏழு புள்ளைங்களும் ஸ்கூல் போறாங்களான்னு மொட்ட மாடியில போய் நிக்கிறேன் ஆறு புள்ளைங்கதான் சைக்கிள்ள போறாங்க!

கிடு கிடுன்னு கீழ எற்ங்கி , எங்க வீட்டு புள்ள கிட்டேயும் இத பத்தி கேக்க முடியாது

என்ன பண்ணலாம்.

அன்னிக்கி சாயங்காலம் தான் தெரிஞ்சிச்சி அந்த புள்ளைக்கு உடம்பு சரியில்ல அப்பிடீன்னு

அப்பாட அப்பதான் உயிரே வந்துச்சி.

காலையிலேர்ந்து ஒன்னும் சாப்பிடலையா

வயிறு ஒரு பக்கம் இழுக்க ஆரம்பிச்சிட்டு.


அப்பறம் கொஞ்ச நாளு சைலன்டா போயிட்டு இருந்திச்சி

மருபடியும் ரெண்டு பேரும் எனக்கு தெரியாம லெட்டர் பறிமாற்றம் நடந்திருக்கு.

அம்மாகிட்ட சொல்லி புடுவேன் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னது அப்பறம் அப்புறம் பிரச்சன இல்லாம போயிட்டு இருந்திச்சி.

நானும் நண்பரும் அப்புறம் அந்த ஊர விட்டு வந்துட்டோம்.

இருந்தாலும் நங்க தங்கி இருந்த வீட்டு அக்காவுக்கு அடிக்கடி தொலைபேசுவேன்.

சமீபத்துல பேசும் போது .

அக்க உங்க கிட்ட ஒரு பெரிய விஷயத்த மறைச்சிட்டோம்.

என்ன ஜெய் அப்பிடி எங்கிட்ட மறைச்சிட்டே?

அது வந்து ஒரு சின்ன மேட்டர் நடந்து போச்சு, அத அப்போ உங்க கிட்ட சொல்லல,

என்ன விஷயம் சொல்லு கண்ணூ

அது வந்து உங்க வீட்டுக்கு பக்கத்துல அனிதான்னு ஒரு பொண்ணு இருக்கிள்ள அத பத்திதான்.

நீ சொல்ல வேணாம் கண்ணு ! ஏ டூ இசட் எனக்கு எல்லாம் தெரியும்!

டேப் ரெக்காடுல பாட்டு போட்டது ,கிரவுன்ட்ல போய் பேசுனது, மொட்ட மாடியில மணிக்கு ஒருதரம் நீ ஏறி எறங்குனது..........


எல்லாம் தெரியும் கண்ணு!

அய்யோ ஒங்களுக்கு ஒடம்பெல்லாம் கண்ணா . அப்ப ஏன் அக்கா நீங்க ஒரு வார்த்த கூட அத பத்தி பேசல

அதான் கண்ணு இந்த அக்கா.

என்னதான் நடக்குதுன்னு நானும் பாத்துகிட்டு இருந்தேன்.

அதான் நீ ஆப் பண்ணிட்டியேப்பா ,அதுக்கு மேல உங்க கிட்ட அத பத்தி கேட்டு சங்கட படுத்த விரும்பல.

சரி விடு கண்ணு அத பத்தி இப்ப ஏன் பேசி கிட்டு.

இல்ல அக்கா இப்போ அந்த பொண்ணு..

ஏன் மருபடியும் சைட் அடிக்கனுமா?

நீங்க எப்ப வந்தாலும் நம்ம வீட்டுல தங்கிக்கலாம்

அய்யோ இப்பிடியெல்லாம் பேசி கொல்லாதீங்க அக்கா!

இப்ப அந்த பொண்ணு என்ன பண்றா?

சொன்னா ஆச்சயரியபடுவ!

ம் சும்மா சொல்லுங்க அக்கா.

அவ இப்போ பல் மருத்துவ கல்லூரி மாணவி!

Receomand this post to other reades :

Thursday, December 22, 2005

நான் காதலுக்கு எதிரியா?

மாப்ள இது உங்களுக்கே நல்லா இருக்கா?

என்ன ஜேகே சொல்றீங்க?

ம். இது எவ்ளோ நாளா நடக்குது?

எத சொல்றீங்க?!கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்களேன்.

அதான்யா இந்த லவ் மேட்டர்.

லவ்வா! யாரு அந்த கௌசல்யா பொண்ணா,அதான் அந்த பையன் கை கழுவிட்டு போயிட்டானே!

யோவ் நான் ஏன்யா அடுத்தவன் லவ்வ பேசறேன், உங்கள பத்திதான் சொல்லிகிட்டு இருக்கேன்.

அதுவா மாப்ளே அதான் இப்போ காண்டாக்டே இல்லயே.கல்யாணம் முடிஞ்சி ஒரு மாதம் இருக்குமா?

நீங்கதான் இன்விடேஷன் பாத்தீங்களே.

கத்திரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வரும்ல அப்ப வச்சுகிறேண்டி.

நானும் அந்த லெட்டர பாத்தேன் ,ஏதோ ஒரு வரிதான் ஞாபகம் இருக்கு.

என்ன பாத்தீங்க சொல்லுங்க!

"ஆம் ரியலி போர்ட்டீன் பிலீஸ் அட்ஜஸ்ட் மீ"

சாரி ஜேகே உங்க கிட்ட சொன்னா சத்தம் போடுவீங்கண்ணு சொல்லல.

இப்ப மட்டும் நான் தட்டியா குடுப்பேன்.

அதெல்லாம் இல்ல ஜேகே ,அந்த புள்ள தான் லெட்டர் குடுத்திச்சி.

அதுக்கு நீங்க என்ன ரிப்ளை கொடுத்தீங்க?

நான் ஒன்னும் ரிப்ளை பண்ணல.

நிச்சயமா?

ஒங்க தல மேல சத்தியமா அந்த பொண்ணு கொடுத்த லெட்டருக்கு ,பதில் லெட்டர் குடுக்கல!

( வித் லவ் மூர்த்தி என்று எழுதப்பட்ட ஒரு கீ செயின் அதை காண்பித்து)

சரி இது என்ன?

அது வந்து அததான் தேடிகிட்டு இருந்தேன்.

இது யாருக்கு கொடுக்க போறீங்க?

யாருக்கும் இல்லயே.

அப்ப டிச் ல தூக்கி போட்டுறேன்.

அய்யோ வேணாம் ஜேகே.

சரி இது என்கிட்டேயே இருக்கட்டும் ,ஒங்க காம்ப்ளிமெண்ட்டா.

################################

2000 அக்டோபர் நானும் நண்பரும் கோயம்பத்தூர்ல வொர்க் பண்ணிட்டு இருக்கோம்
ரெண்டு பேரும் ஒரு சின்ன அறையில முதல்ல தங்கி இருந்தோம்கொஞ்ச நாள் கழிச்சி நண்பரோட உறவு கார பசங்க ,ரெண்டு பேரு வேல தேடி அங்க வந்தாங்களா. ஒகே இதுக்கு மேல ரூம்ல நெருக்கடியா இருக்க முடியாது ,நீங்க மூனு பேரும் இங்க தங்கி கோங்க, நான் தனிய வேற எடம் பாத்துகிறேன்.

சரி ஜேகே.

நான் அப்புறம் ஒரு அக்கா வீட்ல தங்கி இருந்தேன்.
அவங்க வீட்ல ரெண்டு பொம்பள பசங்க.
ஒரு புள்ள எல்..கே.ஜி
இன்னோன்னு ஆறாம் வகுப்பு.
சார் அவரு பெரிய எஞ்சினியர் ட்ராவலிங்லேயே இருப்பாரு.
அவங்க இதுக்கு முன்னாடி யாருக்கும் வீடு வாடகைக்கு விட்டது கிடையாது நான் கொஞ்சம் ரெக்கொயெஸ்டு பண்ணி கேட்டதால ,அவங்க வீட்ல ஒரு ஆளா நானும் தங்கி இருந்தேன்.
கொஞ்ச நாள் கழித்து நண்பரோட உறவு கார பசங்க நகர வாழ்க்கை புடிக்காம ஊருக்கு கெளம்பிட்டாங்க.

நண்பர் மட்டும் தனிய இருந்தாரா,சரின்னு என்கூட வந்து தங்கிட்டாரு.

ஊர்லேர்ந்து போன் வந்திருக்கு ஜேகே

என்ன சேதி?

தாத்தா இறந்துட்டாராம் உடனே கிளம்பனும்

சரி செலவுக்கு பணம் இருக்கா?

ம் இருக்கு

நான் ஆபிஸ்ல சொல்லிக்கிறேன் ஊர்போனதும் மேனேஜர்கிட்ட கால் பண்ணி சொல்லிடுங்க.

ஒரு இரண்டு நாள் கடந்து இருக்குமா?

ஏழு சின்ன சின்ன பொண்ணுங்க. எல்லாமே ஒன்பதாம்கிளாஸ் படிக்கும் புள்ளைங்க.

அன்றைக்கு சாயங்காலம் எங்க வீட்ல ஒரே கும்மாளம் தான், நான் அங்க தங்க ஆரம்பிச்சி மூனு மாசத்துல இன்னிக்கிதான் அந்த புள்ளைங்க நம்ம வீட்டுக்கு வாரங்க.

எனக்கு லாஜிக் இடிக்க ஆரமிச்சி.

நம்மவீட்டு புள்ள ஆறாம் கிளாஸ்.

அந்த புள்ளைங்க ஒன்பதாம் கிளாஸ்.

டியூஷன் கிளாஸுக்கு போன புள்ளைங்க அப்பிடியே இங்க வந்து நைட் எட்டு மணி வரையும் கும்மாளம் தான்.

இந்த மேட்டர் அப்பிடியே ஒரு வாரம் நடந்திச்சி வீட்டுகார அக்கா ஒன்னும் புரியாம என்ன பாத்து முழிக்க நான் அவங்கள பாத்து முழிக்க அப்பிடியே போயிட்டு இருந்திச்சி.
இந்த புள்ளைங்க குசு குசுன்னு பேசிகிட்டு இருப்பாங்க ,என்ன கண்டதும் அப்பிடியே கப் சிப் ஆயிடுவாங்க.

நான் எங்க வீட்டுல இருக்கிற பிள்ளைகிட்ட ,என்னம்ம வினிதா ஏது புதுசா பிரண்டெல்லாம் வீட்டுக்கு வாராங்க.

என்னான்னு தெரியல அண்ணா ,நைட்டு மம்மியும் இதையேதான் கேட்டாங்க!

நண்பர் இன்றைக்கு ஊர்லேர்ந்து வந்து ரெண்டு பேரும் ஆபீஸ் போய் வீட்டுக்கும் வந்துட்டோம்.

வழக்கம் போல அந்த புள்ளைங்களும் வந்துட்டாங்க.

நம்ப நண்பர் வந்திருகிறது அவங்களுக்கு தெரிஞ்சிடிச்சி.

உடனே அங்க டேப் ரெக்காடர்ல பட்டு சத்தம கெளம்புது.

என்ன பாட்டு அது

நம்ம ஊர் குப்புசாமி பாடுனாரே அந்த பாட்டுதான்.

"மச்சான் ஆளான நால் முதலா உன்ன நெனச்சிருந்தேன் " அந்த பாட்டுதான்ஆகா ஏதோ வில்லங்கம் ,இந்த விளையாட்டு நமக்கு வேணாம்னு வீடைவிட்டு கெளம்பினேன்.
நண்பர் தடுத்தி நிருத்தி பிளீஸ் ஜேகே இப்போ போக வேணாம் கொஞ்சம் லேட்டா போங்களேன்.

யோவ் நான் கடை வரைக்கும் போய் வாரேன் ,9 மணிக்கெல்லாம் கடை குலோஸ் பண்ணிடுவாங்க

பிலீஸ் ஜேகே நான் அப்புறம உங்களுக்கு விளக்கமா எல்லாம் சொல்றேன்.

சரி நீங்க விட்டுகுள்ளேயே இருங்க இன்னிக்கி ரெண்டுல ஒன்னு பாத்துருவோம்.

வீட்டு வாசல்ல வந்து உட்காந்து ..

வினிதா இங்க வாயேன்.

எண்ணைங்ணா

ஏதும் வேலைய இருக்கியாம்மா?

இல்லிங்ணா இதோ வந்துட்டேன்.

ஆமா பாட்டெல்லாம் புதுசா இருக்கு .

ஆமாங்ணா நானே இன்னிக்குதான் கேக்கிறேன்

இது யார் பாடுனது?

கொஞ்சம் இருங்க அந்த அக்காகிட்டயே கேட்டுட்டு வாரேன்.

புஷ்பவனம் குப்புசாமியாம் அண்ணே.

நான் எந்த ஊர் தெரியுமா உனக்கு

ஆங் நீங்க புஷ்பவனம்னு சொல்லி இருக்கீங்க

ஒங்க ஊர் காராரா அண்ணே இவரு ?

ஆமாம்.

சரி இது யாரோட கேசட்டு.

தெரியலையலண்ணா ,அனிதாக்க இது யாரோட கேசட்டுன்னு ஜெய்குமார் அண்ணன் கேக்குறாங்க.

...........

இந்த பாடு உனக்கு புடிச்சிருக்கா?
....
அதுகுள்ள வீட்டுகார அக்கா வந்துட்டாங்க.
எழு புள்ளைங்களும் உடனே எஸ்கேப்.
எனக்கு முழுதும் புரிஞ்சிட்டு, எங்கே இருந்து அம்பு எங்க பாயுதுன்னு.

மாப்ள கதவ தொரவுமையா.

அந்த புள்ளங்க எல்லம் போய்டாங்களா?

அவங்க போனா என்ன போவட்டி உங்களுக்கு என்ன?

நீங்க ஆம்பளதான ,ஏன் கதவ சாத்திகிட்டு உள்ளே இருக்கீங்க?

##################
கோயம்பத்தூர்ல அந்த கம்பெனி பேர சொன்ன எல்லாருக்கும் தெரியும்,அதுல சீப் எஞ்சினியர் ,அவரோட மனைவி டெலகம் டிபார்ட்மென்ட்ல ஆபிசர்.


இவங்க வீட்டுக்கு முன்னாடிதான் நானும் நண்பரும் முதல்ல குடியிருந்தோம்
நான்தான் அப்பவே வீடு மாத்தி கிட்டு போயிட்டேனா.
அவங்க வீட்டுல ரெண்டும் பொண்ணுங்க .

சின்ன பொண்ணு மூனாம் வகுப்பு படிச்சா
ரெண்டாவதுதான் நம்ம ஹீரோயின் அனிதா
ஒன்பதாம் கிளாஸ் பொண்ணு.
நண்பருக்கு கெல்த் மெய்ண்டெயின் பண்றதுல கொஞ்சம் ஆர்வம்.
தினம் காலை மாலை எக்சர்சைஸ் பண்ணுவாரு.
நான் அக்கா வீட்டுக்கு குடி வந்து ஒரு வாரம் இருக்கும்.
அந்த பொண்ணு வீட்ல ஏகப்பட்ட கூட்டம்.
அம்பது அருவது கார் நிக்கிது.
என்ன ஏதுன்னு விசாரிச்சா.
பொண்ணு பெரிய மனுஷியாயிட்டாளாம்.
என்னடா இது இயற்கையா நடக்கிற விஷயம் தானே இதுக்கு போயி ஊர் உலகம் சொல்லி உறவு முறை அழைத்து இதெல்லாம் தேவையா? இன்னும் பழங்காலத்திலேயே இருக்காங்க ,சரி ஏதோ அவங்க சமுதாயத்துல இன்னும் பழக்கம் இருக்கு போல!
நாளைக்கி அந்த புள்ள ஸ்கூலுக்கு போக வேணாமா? பசங்க கேலி பண்ண மாட்டாங்க!
நமக்கு ஏனிந்த சிந்தனையெல்லாம் கதைக்கு வருவோம்.

(ஹலோ ஆமாங்க செயகுமார்தான் பேசரேன் ! அப்படியா ,இப்பொ கொஞ்சம் வேலையா இருக்கேனே, ம்ம்ம் , நாளக்கி பாத்துகளாமா? .ஓகே இப்பவே வருகிறேன் . பை)

மன்னிச்சுகோங்க!


கொஞ்சம் அவசரமா வெளியே போறேன் நாளக்கி மீதி கத சொல்லி விடுகிறேன்.

Receomand this post to other reades :

Sunday, December 18, 2005

உயிரின் விலை!

இன்று அதிகாலை 4.00 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேனிலைபள்ளியில் வெள்ள நிவாரணத்திற்காக காத்திருந்த மக்களில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இரவெல்லாம் பள்ளி வளாகத்தில் காத்திருந்த மக்கள் ,திடீரென ஒரு வாயிற்கதுவு மட்டும் திறக்கப்பட அரை தூக்கத்தில் இருந்த மக்கள் முண்டியடித்து முன்னேறி செல்லும்போது ஒருவரையொருவர் தள்ளியடித்து கீழே விழுந்தவர்களை மிதித்து தள்ளியதில் அநியாயமாக 42 பேர் உயிரிழந்தனர்!

ஏற்கனவே இரண்டு முறை வழங்குவதாக இருந்த, இந்த வெள்ள நிவாரணம் இந்த முறை கிடைக்கும் நிவாரணத்தை பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலில் காத்துகிடந்த மக்களில் கணவனை இழந்த மகளிர் ,மனைவியை இழந்த கணவான்கள்,பெற்றோரை இழந்த குழந்தைகள்.இவர்களின் அழுகுரல் ,ராயபேட்டை அரசு பொது மருத்துவமனையையும் சென்னை அரசு பொதுமருத்துவமனையையும் நிறைந்து வழிகின்றன.


முதல்வரின் நேரடி பார்வையில் உள்ள நிவாரணம் வழங்கும் செயல்முறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பல உயிர்களை பலி கொண்டதே!

கடந்த கனமழைக்கு வியாசர்பாடியில் வழங்கபட்ட நிவாரண உதவிகளால் ஏற்கனவே தமிழகத்தை அதிர்ச்சிகுள்ளான நிகழ்வு ஏதோ சில லட்சங்களை வழங்கி பிரச்சனையை அதோடு மூடி மறைத்து விட்டனர்.

அந்த நிகழ்வே இன்னும் தமிழக மக்கள் மனதை விட்டு அகல வில்லை!

ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கான கால அட்டவணை வகுத்து வழங்கி இருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டு இருக்குமா?

உயிரிழந்த குடும்பங்களுக்கு லட்சங்கள் கொடுத்தால் போதுமா?

அநாதையாய் போன அந்த ஜீவன்களுக்கு அரசு பொருப்பு ஏற்குமா?

இந்த நிலையில் இதற்கு விசாரணை கமிஷன் வேறு!

நடந்த நிகழ்வுகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!

விசாரனை கமிஷன் நிவாரணத்தின் நேரடி பொருப்பில் உள்ளவரை தண்டிக்க முயலுமா?

நிச்சயமாக முயலாது!

எல்லாமே கண் துடைப்புதானே!

Receomand this post to other reades :

Monday, December 12, 2005

இன்னொரு காதல் கதை-இனிதே வசந்தம்!

இந்த இரண்டு பகுதியையும் சுற்றிவிட்டு வாங்களேன்!

பகுதி - 1


பகுதி-2


எங்க பசங்க ஒருத்தன அந்த தடியன் கன்னா பின்னான்னு அடிக்க ஆரம்பிச்சிட்டான். நம்ம தலிவருதான் பாடி பில்டராச்சே,அவன் மூக்கை ஒடச்சிட்டாருல்ல.அப்பதான் அவரோட வாட்ச் காணாம போய்ட்டு.

டேய் மச்சான் எவனோ வெளியூர்காரன் என்ன அடிக்கிறான்டா, டிரைவர் பக்கத்துலதான் இருக்கேன் முன்னாடி வாடா.

முண்டி அடிச்சிகிட்டு ஒரு தடியன் முன்னுக்கு வந்தான்,நல்ல போதை வேறு!அப்பாவியா ஒரு வயசான ஆளு படி ஓரமா நின்னுகிட்டு இருந்தாரு, அவரு மூக்கு கண்ணாடிய புடுங்கி ரெண்டா ஒடச்சி வெளியே வீசிட்டான்.
பக்கத்தில நிக்கிறவனுக்கெல்லாம் அடி ,உதை. எனக்கு பின்னாடி சீட்டுல ஒரு ஜோடி.அந்த புருஷன்காரன் மேல இந்த தடியன் விழுந்துட்டான்,அந்த பொம்பள சத்தம் போட்டு பஸ்ஸே கிடுகிடுத்துட்டு போங்க,புருஷன் காரன் சும்மா இருப்பானா? அவனும் மல்லுக்கு நிக்கிறான்.

டேய் டிரைவர் வண்டிய எங்கயும் நிருத்தாதே, நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போ..

8 கி.மீ வன்டி எங்கேயும் நிருத்தல , என்ன தவிர மத்த மூனு பேரும் ரத்தமெல்லாம் வர சண்ட போடுராங்க, எனக்கு அடி புடி எல்லாம் பழக்கம் இல்லேங்க,
ஓரமா நின்னுகிட்டு தலவிதியேன்னு பயந்துபோயி நிக்கிறேன் . ஒரு கட்டத்தில எங்க பசங்கல்ல ஒருத்தன், அவன் கழுத்தும் சீட்டுக்கு மேல கைப்பிடி கம்பி இருக்குமில்ல அதும் சேந்து நிக்குது,இன்னும் கொஞ்சம் நெருக்குனா ஆளு குலோசுதான் , நான் என்ன செய்யரது?தல சுத்த ஆரம்பிசிச்சி,
அப்பிடியே ட்ரைவருக்கு பின்னடி ஒரு டயர் கலட்டுர ஒரு லீவர் கெடந்துச்சா, கொஞ்சம் கூட யோசன பண்ணாம சீட்டுக்கு கீழ படுத்துகிட்டு அந்த தடியன் கனுக்காலுல நங்குன்னு ஒன்னு வச்சேன் பாருங்க,அம்மான்னு அலறிகிட்டு சுருண்டு விழுந்துட்டான், என்னால நேர்ல சண்ட போட தைரியம் இல்ல,தடியனோட ஒரு அடிய கூட என்னால வாங்க முடியாதே! பஸ் நிருத்தாம வந்துகிட்டு இருக்கு, துவரங்குரிச்சின்னு ஒரு எடம் ,ராத்திரி 11 மணி .அந்த பஸ் ஸ்டான்ட்ல நெரைய பேரு நிக்கிறாங்க .பஸ்ஸையும் நிருத்திட்டாங்க! எப்பிடிதான் சேதி போனிச்சோ ஆண்டவனுக்குதான் தெரியும்! இந்த தடியன் ஒருத்தன் சத்தம் போட பிலுபிலுன்னு ஒரு பத்து பேரு பஸ்ல ஏறிட்டாங்க! நானும் பஸ்ஸ விட்டு எறங்கிட்டேன்.
எங்க பசங்கல்ல ஒருத்தன் என்ன செய்தான் தெரியுமா?

அய்யா நாங்க குடி போதையில அடிச்சி பூட்டோம்,நாங்க செஞ்சது தப்புதான்

அப்பிடீன்னு சாஸ்டாங்கமா காலுல விழுந்தான் பாருங்க, என் கண்ணுல தண்ணியே வந்துட்டு!
ஒரு மூனு பேரு இவனை அடிக்க கைய ஓங்குறானுக

அதுக்குள்ள ஒரு பெரியவரு

டேய் தினம் ஒருத்தனுக்கு இதே பொழப்பா போச்சு ,பஸ்ல ஏறினா ஏண்டா சண்ட போடுரீங்க?

தம்பிகளா நீங்க பஸ்ல ஏறி போங்க!

டிரைவர் வண்டிய எடுப்பா! போவலாம் ரைட்.

உடனே டிரைவரு வண்டிய எடுத்தாரு பாருங்க. நான் அப்பறம் ஓடி வந்துதான் ஏறினேன்.
அப்படி போன உசுரு அப்பதான் திரும்பிச்சி
வேதாரண்யம் போறவரைக்கும் அந்த குடும்பம் ஒரே பாராட்டு மழைதான்!

தம்பி நீங்கல்லாம் இல்லாட்டி என் புள்ளய பலி போட்டு இருப்பானுக.
நீங்கல்லாம் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வர்ரீங்க. நிச்சயமா ஒங்கள நாங்க எதிர்பாப்போம்
என்னிக்கி வாரிங்க இதான் எங்க வீட்டு போன் நம்பர் . நாளக்கி போன் பண்னுங்களேன்


நைட் ஒரு மணி
வேதாரண்யம் வந்துட்டோம்.அதுலேர்ந்து 10 கி.மே போவனும் நம்ம ஊர் போக,அந்த நேரத்துல ஏது பஸ்? ஒரு ஆட்டோ கூட இல்ல, டாக்சியும் இல்ல, பஸ்ல நடந்த பைட்டுல வயிறு கபகபன்னு பசிக்குது.

டேய் 2.15 க்கு ஹசன் இருக்கு அந்த பஸ்ல போவுண்டா! செத்த பஸ் ஸ்டாண்ட்லேயே தல சாய்ப்புமா?

பசங்களுகு போத தெளியல,

நீ வேணும்னா தூங்கி எழுந்து காலையில வா!

நாங்க நடந்தே போறோம்!

ஒரு மூனு கிலோ மீட்டர் நடந்து இருப்போமா? எங்க பசங்க என்ன பண்ணுனாங்க ,போற வழியில ஒரு மளிக கடை ,வெளிய ஒரு வாழ தாரு தொங்கினிச்சா . அப்பிடியே லபக்கிகிட்டானுக.

அங்கேயே ஒக்காந்து பழத்த திண்ணுட்டு, எவ்ளோ திங்க முடியும் பாதி தார நடு ரோட்டுலேயே குத்த வச்சுட்டு மருபடியும் நடக்கிறோம். நான் ஒரு பிளாஸ்டிக் செருப்பு போட்டு இருந்தேனா , கால நல்லா தின்னுட்டு , கலட்டி தூர வீசிட்டு அப்பறம் எப்பிடி தார் ரோட்டுல நடக்க முடியும்?

இனிமே என்னால நடக்க முடியாது.

சரின்னு செத்த நேரம் உக்காந்து இருந்தோம்.உப்புலோடு ஏத்திகிட்டு ஒரு லாரி ,அவன் நிக்காம போயிட்டான்.அடுத்த லாரிய குறுக்க நின்னு மறைச்சி உப்பு லோடு மேல ஏறி உக்காந்துகிட்டு விடிய காலம் மூனு மணிக்கு வீடு போய் சேந்தோம்.

எங்க வீட்ல விடிய விடிய லைட் எரிஞ்சிகிட்டு இருக்கு.அப்பா புஸ்த்தகம் படிச்சபடியே தூங்குறாரு. பக்கத்துவீட்டு மொட்ட மடியில அவங்க மூனு பேரையும் படுக்க வச்சுட்டு வீட்டுக்கு வந்தேன். ஆல் அரவம் கேட்டு அப்பா எழுந்துட்டாரு.

எங்கப்பா இவ்ளோ நேரம் எங்க போய்ட்டு வர?
தெரியும் நீ எங்க போய்ட்டு வர்ரேன்னு!

(அய்யோ அதுகுள்ள தெரிஞ்சு போயிட்டா!)
நீ போன உன் வேலையை முடிச்சிட்டு வர வேண்டியதுதான,ஏன் அந்த காலி பசங்களோட நீனும் போனே?

(நேத்து நைட் நம்ம விட்டுக்கு பக்கத்தில இருக்கிற மளிக கடையில, புள்ள எங்கன்னு கேட்டு இருப்பார் போல, அவனும் என்ன சொன்னான்னு தெரியல. அத உண்மைன்னு நெனச்சிகிட்டு அவரும் இருந்திருக்காரு )

நாந்தான் அந்த பசங்கள அழச்சிட்டு போனேன்னு அவருக்கு தெரியாது.

காலையில 6 மணிக்கு எழுந்து அந்த மூனு பேரையும் அடிச்சி கெளப்பி.
தலிவரே போதும்டா சாமி, போயி உங்க ஆள பாத்துட்டு கெளம்புற வழிய பாருங்க!
அதுக்குள்ள ஊருகுள்ள சேதி எப்பிடியோ லீக் ஆயிடிச்சி வயலுக்கு போன எடத்துல என்ன தம்பி வெளி ஊருக்கு பொண்ணு தூக்க போனீங்களாம்?

ஆளாளுக்கு மனசுல பட்டத கேட்டாங்க!
அப்பறம் தலிவரு எப்ப ஊருக்கு கெளம்பி போனாருன்னு தெரியாது!
ஒரு பத்து நாள் இருக்குமா?

காஷ்மீர்லேர்ந்து ஒரு லெட்டர் வந்துச்சி.

அன்புடன் செயகுமாருக்கு
அன்புடன் தாஸ் வரைவது. நான் மணியோட அண்ணன் ,காஷ்மீர்ல பி.எஸ்.எப் ல இருக்கேன்.தம்பி எல்லாம் விவரமா சொன்னான். இவ்ளோ உதவி பண்ணி இருக்கிங்க, இதையெல்லாம் இப்படியே வளர விட கூடாது. அடுத்த மாசம் முதல் தேதியில ஊருக்கு வாரேன்.தயவு செய்து எனக்கு நீங்க பெரிய உதவி செய்யனும்.அவங்க ரெண்டு பேருக்கும் வேளாங்கண்ணி கோயில கல்யாணத்துக்கு ரெஜிஸ்தர் பண்ணிடுங்க.

அடுத்த மாசம் முத தேதி நாம எல்லாம் அங்க பாப்போம்.


இது ஏதுடா இப்பதான் பெரிய பிரச்சன ஓஞ்சி போயிருக்கு மறுபடியும் தலவலியா?

ம் ம் என்ன செய்ய.
ஆரம்பிச்சு வச்சாச்சு.
முடிச்சி வச்சுட வேண்டியதுதான்.
நேரே கீதாகிட்ட போய் லெட்டர காமிச்சேன்.

என்ன கீதா என்ன பண்ணலாம்?

அவங்க அண்ணன் சொல்ரபடியே செஞ்சுடுங்க!

நிச்சயமா!

சத்தியமா! கர்த்தர் மேல பிராமிஸ்ஸா!

அப்பரென்ன வேளாங்கண்ணியில ஒரு பிரண்ட பாத்து ரெஸிஸ்த்தருக்கு சொல்லிட்டேன்.
அடுத்தமாதம் முதல்தேதிக்கு முத நாளே அண்ணனும் தம்பியும் நம்ம ஊருக்கு வந்தாங்க அப்பரம் உடனே வேளாங்கண்ணி கெளம்பி போயிட்டாங்க.

எனக்கு மட்டும் அழைப்பு!
நான் மட்டும் எப்பிடி போவது?
என்ன கீதா என்ன மட்டும் கூப்புட்டு இருக்காங்க.

ஏன் எல்லாருக்கும் சொல்லிகிட்டு?

நல்லகதையா இருக்கே!அடிதடி வாங்கின நம்ம பசங்க இருக்காங்க !அவங்களுக்கு சொல்லாமலா!

சரி அவங்களும் வரட்டும்.

டேய் எல்லாம் நாளக்கி வேளாங்கண்ணி போறோம் .

ஆரம்பிச்சிட்டாண்டா மாமா வேலைய உட மாட்டான்.

நீங்க வரலியா?

நங்க வராம கல்யாணமா? ஆனா ஒரு கண்டிஷன் நம்ம பசங்க எல்லாம் வருவாங்க ,நல்லா கவனிக்கனும்.

என்னங்க பசங்க இப்பிடி சொல்ரானுக .

ம்ம் சரி அழச்சிட்டு வாங்க.
பணமெல்லாம் இருகில்ல?
என்னங்க இப்பிடி சொல்லிட்டிங்க ,உங்களுக்கு இப்போ எவ்ளோ பணம் வேணும்?

பணமெல்லாம் வேணாம் ,நாளக்கி காலையில நீங்க தனியா வேளாங்கன்னி வந்துடுங்க.

15 பேரு வேளாங்கண்ணி போவனும்.போய் வர செலவுக்கு என்ன பண்ண.யோசனை பண்ணிகிட்டு இருக்கும்போதே.

தம்பீ சாயங்காலம் இருக்கிற முந்திரி கொட்டையெல்லாம் குடோன்ல குடுத்துட்டு பணம் வாங்கிட்டு வந்துரு.

103 கிலோ இருந்த முந்திரி கொட்ட மூட்டையில 10 கிலோ பில்லுல பிராடு பண்ணி காசு தேத்திட்டேன்.

இப்பொ வேளாங்கண்ணி சர்ச்சில நாங்க எல்லாரும்.

பொண்ணும் மாப்பிளையும் கல்யாண ட்ரெஸ்ஸுல.

பாதர் புத்தகத்த பாத்து படிக்கிறாரு .

இவங்களும் திருப்பி சொல்றாங்க.

ஆமென்.

பாவம் செய்த எம் கரத்தை

அய்யா நீர் கழுவி

சுத்தம் செய்யும்

நமக்கு ஒன்னும் வெளங்கல!

மோதிரம் மாத்துனாங்க

கல்யாணம் முடிஞ்சிதாம்

நாம ஒன்னும் கிப்டெல்லாம் குடுக்கலீங்க

பஸ்ஸு காசே இங்க லாட்டரி அடிக்குது!

பெரிய ஓட்டலுக்கு போனோம் (ஒயின்ஷாப் அட்டாச்சுடு)

பசங்க இஷ்டத்துக்கு கொண்டாடுனாங்க!

பசங்களுக்கு பஸ்சுக்கு மட்டும் காசு குடுத்துட்டு.

ஒரு 11 மணிகெல்லாம் நானும் கீதாவும் ஊருக்கு கெளம்புரோம்

பொண்ணு இப்போ நம்ம ஊர்ல.

தலிவரு (அதான் மாப்பிளை) அவங்க ஊர்ல

ஒரு 16 நாள் கழிச்சி மாப்ள வந்தாரு

பொண்ண கையோட கூட்டிட்டு போயிட்டாரு!






அவ்ளோதாங்க எனக்கு தெரியும்!

இப்போ அவங்க எங்கே இருக்கிறாங்க?

எப்பிடி இருக்காங்க?

எத்தினி கொழந்தைங்க?

இது 1997 ல நடந்திச்சி!

:"எங்கிருந்தாலும் வாழ்க"

############@@@@@@@@###############




2003 -ல எங்க மாமியோட தம்பிக்கு கல்யாணம். நானும் கல்யாணத்துக்கு போயிருந்தேன்!
கல்யாணமும் முடிஞ்சிடிச்சி.அப்பறம் சம்பிரதாய சடங்கு நடக்குமில்ல, அத வேடிக்க பாத்து கிட்டு இருந்தேன்.ஒருத்தரு குறுக்கேயும் நெடுக்கேயும் போய்கிட்டே இருந்தாரு. பொண்ணுக்கு தாய் மாமனாம்.இவர எங்கயோ பாத்த மாதிரியே இருக்கே !

எங்கே!

ஆஹா!.இவரு நம்ம சென்டில்மேனுல்ல!

சார் வணக்கம்!

வணக்கம் தம்பி எப்படி இருக்கீங்க?

ம் நல்லா இருகேன் சார்.

வீட்ல எல்லாரும் சௌக்கியமா? அண்ணன் லெட்டர் போட்டாரா?


அண்ணனனா? ,சார் நெசமாலுமே என்ன தெரியலையா?

நீங்க சவுந்தர் பையந்தானே?

இல்ல சார் நீங்க மறந்துட்டீங்க!

ஓகே பரவாயில்ல நானே சொல்லிடுறேன்.

எனக்கு தெரிஞ்ச பீட்டர் இங்கிலீஸ்ல விட்டேன் பாருங்க.


on the mid night,the way of pattukoottaii to vedaaranyam.am not sure the particular area am think thuvarankurissi .do you remember it?



தம்பீ நீங்க..............

ம் நான் நாந்தான்

அந்த நாலு பேர்ல நீங்க...

ஆமா..

ஏதோ குமாருன்னு வருமே!

ஏதோ குமாரு இல்ல செயகுமார்.

அப்பிடியே என்ன கட்டி புடிச்சாரு பாருங்க.

அம்மா இங்க கொஞ்சம் வாங்களேன்!

அப்பிடியே சத்தம் போட்டாரு ,மொத்த கல்யாண கூட்டமும் அப்பிடியே திரும்பி பாக்குது.

அம்மா இந்த தம்பி யாருன்னு தெரியுதா உங்களுக்கு? செயகுமார்.

எந்த செயகுமார்?

அதாம்மா துவரங்குரிச்சி மேட்டரு

அய்யோ அந்த தம்பியா இது ?

ஆளே தெரியலே ரொம்ப மாறி போயிருக்கு.

அப்பிடியே அந்த அம்மாவும் என்ன கட்டிபுடிச்சி (அப்போ எனக்கு வெக்க வெக்கமா வந்துச்சி பாருங்க) அன்னிக்கி மட்டும் நீங்கள்ளாம் இல்லன்னா என் புள்ள உசிரே போயிருக்கும் ,ஸ்ஸ் நெனச்சாலே அடி வயிறு கலங்குது,

ஆமா அப்பறம் நாங்க வரச்சொன்னோமே ,ஏன் நீங்கல்லாம் வரல்ல?
இன்னிக்கி சாய்ங்காலம் பொண்ணு மாப்பிளையோட நாம போறோம் ,அப்பிடியே எங்க வீட்டுக்கும் வந்துட்டு போகலாம்.

இல்லீங்க இன்னொரு நாளக்கி வாரேனே.

நாமதான் இப்போ அந்த இடத்தில மேனாப்தி மேட்ச். டாக் ஆப் த மேட்டர்.

பஸ்ஸுல அன்னிக்கி சைட் அடிச்ச பிகர் இனிக்கி வந்துருக்குமா?

முகம் கூட ஞாபகம் இல்லயே. நம்மதான் இப்போ ஹீரோவயிட்டோமே. சார்கிட்டயே கேக்கலாமே?

சார் உங்க ஒய்ப் சிஸ்டரெல்லாம் வரலையா?

இதோ நிக்கிராங்களே!

அந்த பிகர் கிட்டேயிருந்து ஒரு சின்னத புன்னகை நம்மள நோக்கி பறந்து வந்துச்சி பாருங்க.

அப்பிடியே எல்லாரையும் கலட்டி விட்டு அந்த பொண்ண ஓரம் கட்டுனேன்

ஒங்க நேம் என்னங்க சாரி மறந்துபோச்சு.

,,,,,,,,,,,,

என்ன படிக்கிரீங்க?

பி.எஸ்.ஸி மேத்ஸ் பர்ஸ்ட் யியர்

ஓ நைஸ்

.............
.............
.............
.............
ஒரு மணி நேரம் கடலை..

சாப்பிடாதவங்க சாப்பிட வாங்கோ.

ம் சாப்பிட போகலாமா?

ம் போகலாமே!

கடசி பந்தியா அவசரம் இல்லாம சப்பிடலாமே !அங்கேயும் கடல!

சாப்பிட்டு கை கழுவும் போது பாருங்க கல்யாண போண்ணு ஓடி வந்து,

எங்கடி போனே ஒன்ன எங்கெல்லாம் தேடுறது?

அந்த பிகர கல்யாண பொண்ணு அழச்சிட்டு போயிட்டாங்க.

சரி வீட்டுக்கு கிளம்புவோம்னு திரும்பினா எதிர்ல எங்க மாமி

என்ன குமாரு இந்த பந்தல்லயே மேள தாளம் எல்லாம் இருக்கு. ஒக்கேன்ன சொல்லுங்க முடிச்சிரலாம்!

ம்ம் என்ன சொல்ரீங்க.

என்னத்த சொல்றது அதான் அந்த பொண்ணோட உருகி உருகி பேசிட்டு இருந்தீங்களே!

நீங்கள்ளாம் ஸ்கூல் வாத்தியார் தானா?

ஏன் அதுல என்ன சந்தேகம்?

இல்ல ஒரு வயசு பொண்ணும் பையனும் பேசிட்டு இருந்தா உடனே காதல்,கல்யாணம் இத தவிர வேற விஷயமே பேசமாட்டோமா?

சாரி குமாரு தப்பா நெனச்சிக்காதீங்க ! ஜஸ்ட் பார் பன் ,தட்ஸ் ஆல்.

சரி இதுக்கு மேல இருந்தா மண்ட காஞ்சிரும், உறவு காரங்க கிட்ட சொல்லிட்டு கெளம்பும் போது அந்த பொண்ணுகிட்டேயும் ஒரு வார்த்த சொல்லிட்டு போகலாம்னா ,பொம்பளைங்க கூட்டத்தில எப்பிடி போயி பாக்குறது?

சரி நாம குடுத்து வச்சது அவ்லோதான்!
விடு ஜூட் ன்னு செருப்ப மாட்டிகிட்டு நிமிரும்போது .
எதிரே அந்த பொண்ணு!

ம் கிளம்பிட்டீங்க போல?

கல்யாணம் முடிஞ்சி நாலு மணி நேரம் ஆயிடிச்சே.ஒரு வேல சாப்புடதான் மொய் எழுதினேன்!

அம்மாதான் கூப்புட்டாங்களே, பொண்ணு மாப்பிள கொண்டு வந்து விட்டுட்டு அப்பிடியே வீட்டுக்கு வந்துட்டு போவலாம்ல?

இல்ல கொஞ்சம் அவசர வேலை இருக்கு (ஒரு மண்ணு வேலையும் இல்ல)

சரி எப்ப வீட்டுக்கு வாரீங்க?

ம் நெக்ஸ்ட் சண்டே?

ஸ்யூர்?

என்ன நீஙக நம்பலையில்ல?

அய்யோ ஏன் இப்பிடியெல்லம் பேசரீங்க?

ஒகே ஸ்யூரா வருவேன் போதும?

தாங்க்ஸ்

ஓகே சீ யூ பை பை!

டேக் கேர்

டாட்டா..!

டாட்டா..!........



அந்த பொண்ணு சொன்ன டாட்டா இன்னும்

என் மனசில பாட்டா நிக்கிதுங்க!.................................................

Receomand this post to other reades :

Thursday, December 08, 2005

இன்னொரு காதல் கதை தொடர்ச்சி - 1

இத படிச்சிட்டு வாங்க


நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும் ! செய்ய முடியுமா?

சொல்லுங்க.

அது .... மணி ஒரு கிருக்கன் .சொன்னத செஞ்சிடுவான்.போன மாசம் கூட அதமாதிரிதான் பைத்தியகாரதனம் பண்ணிட்டான்.
நாளைக்கு நைட்டுக்குள்ள நான் ஊருக்கு போகல்லன்னா ,அப்புறம் அவனை பாக்க முடியாதுன்னு எழுதி இருக்கான்.

(அப்பொழுது டெலிபோன் வசதி இருந்தும் பேசமுடியாத சூழ்நிலை)

அதுக்கு நான் என்ன பண்ணனும்?

போன வாரம் தான் ஊருக்கு போய்ட்டு வந்தேன்.
இந்த வாரமும் போன என்ன ஏதுன்னு கேப்பாங்க!
சிரமம் பாக்காம ஒரு எட்டு எங்க ஊருக்கு பொயி அவனை அழச்சிட்டு வர முடியுமா?

ம் . உங்க ஊரு எதுன்னு சொன்னீங்க ஞாபகம் இல்ல.

புதுகோட்டை.

புது கோட்டை டவுனாஇல்ல அவுட்டரா?

புதுகோட்டையிலேர்ந்து ஒரு ஆபனவர் ட்ராவலிங் ,வேங்கடகுளம்னு ஒரு கிராமம் .

சரி நான் போயி அழச்சிட்டு வர்ரேன்னு வச்சுகோங்க ,அதனால என்ன பிரயோசனம்னு நெனக்கிரீங்க?


அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சா.

அவன் செத்து போன நானும் செத்து போய்டுவேன்.
போய்டனும் .இல்லேன்னா நானும் அவன்கூட எங்கேயாவது போய்டனும்!

அப்போ கல்யானம் பண்ணிக்கிற உத்தேசம் இல்ல?

அய்யோ எனக்கு ஒன்னுமே புரியல,என்ன பன்றதுன்னும் தெரியல!

உங்களுக்கு இன்னிக்கி எதும் அவசர வேல இருக்கா?

(இது ஏதுடா தர்ம சங்கடமா இருக்கு புதுகோட்டைக்கும் நம்ம ஊருக்கும் 200 கிலோமீடர் தனிய இவ்ளோ பெரிய பிரச்சனைக்கு எப்டி அவ்ளோ தூரம் போய்ட்டு வாரது?)

இல்ல போயிட்டு வாரதுல ஒன்னும் சிரமம் இல்ல செலவுக்கு இப்போ கையில ஒன்னும் காசு இல்ல அதான்!
இப்போ என்கிட்ட 100 ரூபாதான் இருக்கு எப்பிடியாவது அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போயிட்டு வங்க . நீங்க வந்தவுடனே உங்களுக்கு பணம் தாரென்.
எப்ப போறீங்க?

ம்ம்ம்ம் .. நாளக்கி காலையில!
சாயங்காலம் கடை பக்கம் தான இருப்பீங்க?

தெரியலையே!

சாயங்காலம் பணம் தாரேன் ,எப்பிடி போகனும்னு அட்ரெஸ் தாரென்.

ம்ம் சரி.

போயிட்டு வர எப்படியும் ஒரு நாளுக்கு மேலாயிடுமே!

நம்ம பசங்க ரெண்டு பேர கூப்புட்டு கிட்டு போனா என்ன?

டேய் நாம நாளக்கி புதுகோட்டை வரையில போயிட்டு வாரோம் ,காலையில 6 மணிக்கு ரெடியா இருங்க . என்ன சொல்றீங்க?

எதுக்குடா?

அத காலையில சொல்ரேனே.

உங்களுக்கு என்ன தண்ணியும் சிகரெட்டும் வாங்கி குடுத்தா போதும்ல, அப்ப ஏன் கேக்குற?
சிங் சும்மா கூப்புட மாட்டான்டா , ஏதோ மாஸ்டர் பிளான் வச்சுருப்பான்.
டேய் ஒரு மண்ணும் இல்லடா.நைட் எங்கேயும் தண்ணி அடிச்சிட்டு பிளாட் ஆயிடாதீங்க

ம்ம் பாக்கலாம்.

சாயங்காலம் அந்த பொண்ணு நம்ம தலிவரு வீட்டுக்கு போறதுக்கு ரூட் போட்ட மேப் , பணம் ஒரு நூரு ரூபா எல்லாம் குடுத்தா. மறு நாள் காலையில நம்மகிட்ட ஒரு 200 ரூபா இருந்துச்சி.
வீட்டுல ஒரு 100 ரூபா கிளப்பிகிட்டு தூங்கி கிட்டு இருந் பசங்கள எழுப்பி பஸ் ஏறி போயிட்டு இருக்கோம்.
(இப்போ என்கையில 400 ரூபா இருக்கு)

ஒரு ரயில்வே கிராசிங்.

டேய் சிங் பசிக்குதுடா

சரி பஸ்ஸ விட்டு இறங்குங்க

நல்லா சாப்டுட்டு ஆளுக்கு ஒரு கோல்டு பில்டர் சிகரெட் பாக்கெட்டும் வாங்கி கிட்டானுக.
52 ரூபா காலி

டேய் தம்பிகளா இதாண்டா மேட்டரு.
அந்த பொண்ணு என்கிட்ட 100 ரூபாதான் குடுத்தா ,என்கிட்ட ஒரு 50 ரூபா இருந்திச்சி , இப்பவே 50 ரூபாயிக்கு திண்ணு தீத்துடீங்க.
இந்தா புடி என்கிட்ட 100 ரூபாதான் இருக்கு. புதுகோட்ட போர வரைக்கும் இத வச்சு தான் ஓட்டனும் ,அங்க போனதுக்கப்பரம் தலிவர்ட்ட காசு வாங்கிகலாம்.

காசு இல்லாம ஏண்டா எங்களை கூப்புட்டு வந்தே?

உங்கிட்ட காசு இல்லாம இருக்காது .அந்த பொண்ணுதான் மாசாமாசம் சம்பாதிக்கிறாளே, பணம் இல்லாமல உன்ன அனுப்பினா?

சத்தியமா இல்லடா.

உங்களுக்கென்னடா புதுகோட்டை போய் எறங்கின உடனே ரெண்டு பேருக்கும் பீர் வாங்கி தரேன், மத்ததெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.

இது இப்ப சொன்னியே இது அழகு!

புதுக்கோட்டையும் போயாச்சு ,சாயந்திரம் 4.00 மணி

சனியன் புடிச்ச பசங்க ,அப்பயே 100 ரூபாயிக்கு வேட்டு வச்சுட்டானுக.

டேய் மணி இப்பவே 6 ஆயிட்டு இனி எப்ப வேங்கடகுளம் போயிட்டு ஊரு திரும்பறது?

புதுகோட்டையிலேர்ந்து அந்த ஊருக்கு ஒரே ஒரு பஸ்தான் .அப்பதான் அந்த பஸ் போயிருக்கு மேலும் ஒரு அரை மணி நேரம் அங்க இங்க சுத்திபுட்டு ஏழுமணிக்குதான் வேங்கடகுளம் போய் சேர்ந்தோம். சிலு சிலுன்னு மழை பேஞ்சிட்டு இருக்கு.ரோடெல்லாம் செக்க செவேர்னு ஒரே தண்ணிதான் .நடந்து போக முடியல,அந்த தண்ணிலிலேயே கால இழுத்து இழுத்துகிட்டு ஒரு மளிகை கடையை போயி கேட்டோம் .

ஓ அந்த மிலிட்டரி காரர் வீடா .அதோ தெரியுது பாருங்க பாதி கட்டுன படியே நிக்குதுள்ள ஒரு வீடு அதுதான் அவங்க வீடு.

வீட்டுல தலிவரு இல்ல. அவங்க அம்மாகிட்ட .....

எங்கம்மா மணி போயிட்டான்m டவுனுக்கு போகனும்னு வரசொன்னான் ஆளயே காணும்.

கொஞ்சம் இருங்க தம்பி இங்கதான் நின்னான் .

கொஞ்ச நேரத்துகெல்லாம் தலிவரு வந்தாரு.

வாங்க வாங்க
ஆமா கீதாவுக்கு என்ன ஏதும் பிரச்சனையா?
மூனு பேரு வந்து இருக்கீங்க

(இதுல என்ன மட்டும்தான் தலிவருக்கு தெரியும்)

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க கீதா உங்கள அழச்சிட்டு வர சொன்னாங்க அவ்லோதான் .ஒன்னும் பயப்புடுரமாதிரி இல்ல.

சரி என்ன சாப்புடுரீங்க?

அண்ணே சிகரெட் கெடைக்குமா

கொஞ்சம் இருங்க வாங்கி கிட்டு வர்ரேன்

ஏன்டா வந்த எடத்துல வாய வச்சுட்டு சும்ம இருக்க மாட்டியா?

ஒனகென்ன நீனா வாங்கி குடுக்க போரே.
சும்மா வாயமூடிகிட்டு இரு ,சிகரெட் இல்லாம வாயி நமநமன்னு இருக்கு.

தலிவரு வந்தாரு உடனே எங்க கூட கெளம்பிட்டாரு.

புதுகோட்டை வந்தாச்சு.

டேய் சிங் காசு வச்சுருக்கிரியா?

இல்லடா அதான் எல்லா காசும் உன்கிட்ட குடுத்துட்டேனே.
அப்பரம் என்கிட்ட ஏது காசு.

இப்ப என்ன வேனும் உங்களுக்கு என்கிட்ட நெரைய காசு இருக்கு
வாங்க சாப்புடுட்டு அப்பறம் பஸ் புடிக்கலாம்.

என்னடா சிங் தண்ணி அடிச்சி ரொம்ப நாளாச்சிடா.

அட பாவி மவனே!

இப்பதானட சாயங்காலம் ரெண்டு பேரும் குடிச்சீங்க,

அது பீரு தானட.

சரி ஊரு போயி பாத்துகளாம்.

பரவா இல்ல வாங்க எல்லாம் நமக்கு தெரிஞ்ச ஒயின் ஷாப் இருக்கு.

அங்க போயிடலாம்.

ஒரு புல் வாங்கி அடிச்சானுங்க.
.
செயகுமார் வாங்க ஒங்களுக்கு ஒரு பெக்

இல்லங்க அவன கம்பல் பண்ண வேண்டாம். அவன் குடிக்க மாட்டன்.

சரி சரி சீக்கிரம் கெளம்புங்க.

ஊருக்கு செல்வதற்கு பஸ் எடுத்தாச்சு.
டிரைவருக்கு பின்னாடி சீட்டுல என்ன தவிர அவங்க மூனு பேரும் ஒரு சீட்டுல,
நான் அதுக்கு பின்னாடி சீட்டுல. டிரைவருக்கு லெப்ட் சைடுல பேட்டரி பாக்ஸ் இருக்குமில்ல, அதுல ஒரு அழகான வயசு பொண்ணு,அப்பறம் அப்பதான் கல்யாணம் ஆன ஒரு பொண்ணு ரெண்டு பேரும் ஒக்காந்து இருக்காங்க.அதுக்கு பின்னாடி ஒத்தையா உள்ள சீட்டுல அந்த பொண்ணோட அம்மா.அதுக்கு பின்னாடி ரெண்டு பேர் உட்காருர மாதிரி உள்ள சீட்டுல ஒரு சென்டில்மேன். அவரோட கர்சீப்பால எடம் போட்டுட்டு கீழ எறங்கி பூ வாங்க போயிட்டாரு.

(இவரோட மனைவி,தங்கச்சி,அம்மாதான் அங்க ஒக்காந்து இருந்தவங்க )

வந்து பாத்தா ஒரு தடியன் (நல்ல மப்புல இருந்தான்) கர்சீப் போட்ட இடத்துல உக்கந்துட்டான்.

பூ வங்கிட்டு வந்தவரு அழகா கர்சீப்ப கேட்டு வாங்கிட்டு நின்னுகிட்டு இருந்தாரு

இது அவங்க அம்மாவுக்கு புடிக்கல,பின்னே புள்ள எடம் போட்ட எடத்துல வேர யாரோ உக்கந்த கோவம் வருமா வராதா?

சன்டை போட ஆரம்பிச்சாங்க.

அந்த சென்டில்மேன் சண்ட வேண்டாம் அப்பிடீன்னு இடையில பூந்து மறைச்சாரு

சென்டில்மேன் கழுத்துல போட்டு இருந்த செயின அந்த தடியன் அருத்துட்டான்

இவ்ளோ நேரம் நாங்க அந்த வயசு பொண்ண சைட் அடிசுட்டு இருந்தோமா.

எனக்கு அந்த சென்டில் மேன எங்கயோ பாத்த ஞாபகம்

டேய் இந்த ஆளு நம்ம செல்வம் கல்யாணத்துல பந்தியில பரிமாரிகிட்டு இருந்தாருல்ல ஞாபகம் இருக்கா.

நம்ம பசங்க தான் நல்ல மப்புல இருந்தங்களே!

ஆமான்டா இப்பதான்டா ஞாபகம் வருது இவரு செல்வத்தோட சொந்த கார ஆளுதாண்டா

தடியன் எழுந்து சண்டை போட்டுகிட்டு இருந்தானில்ல ,அந்த சீட்டுல போயி நம்ம பையன் ஒருத்தன் உக்காந்துட்டான்.அவ்ளோதான் தடியன் அந்த சென்டில்மேன விட்டுட்டான்.
அங்கதான் ஆரம்பிச்சிது பிரச்சனை.....


காதல் அடுத்த பதிவுல முடியும்ங்க!

Receomand this post to other reades :

Monday, December 05, 2005

இன்னொரு காதல் கதை!

அப்போ நான் +2 படிச்சிட்டு ஊர் சுத்திட்டு இருந்த நேரம்.வீட்டுக்கு பக்கத்துல ஒரு மளிகை கடை அங்கதான் நம்ம அரட்டை கச்சேரி பொழுதேனிக்கும். நம்ம ஊருக்கு புதுசா ஒரு பயலோ பொண்ணோ வந்துட புடாதே .யாரு ? எவறு வீட்டுக்கு வந்திருகாக! சேதி வந்துரும்ல ,வராட்டா அதானே நம்ம வேல.

அன்னிக்கும் அப்பிடிதான் ஒரு 23 வயசு இருக்கும் கழுக்கு மொழுக்குன்னு ஒரு பாடி பில்டர். நம்ம மளிகை கடைக்கு எதிர்த்தாப்புல அங்கேயும் இங்கேயும் நடை போட்டுகிட்டு இருந்தார். நமக்கு பொறுக்குமா? மெதுவா எழுந்து போயி வணக்கம் அண்ணே! என்ன பஸ்ஸுக்கு வெயிட் பண்றீங்களா.வந்து கடையில உட்காருங்க .அடுத்த பஸ் நாலு மணிக்குதான்,என்ன சாப்புடுரீங்க (எங்களுக்கு காப்பி ரெடியா இருந்துச்சி).

அண்ணன் எந்த ஊரு இதுக்கு முன்னால பார்த்த ஞாபகம் இல்லயே!காப்பிய சாப்புடுங்க

எனக்கு காரைகுடிங்க.

இங்க ஒருத்தர பார்க்க வந்தேன் பாத்துட்டேன் அதான் கிளம்பறேன்.

நாங்க அப்பிடியே வேர கச்சேரில இருந்தோம்.

தலிவரு 4 மணி பஸ்ஸையும் விட்டுட்டாரு.முகத்துல ஏகப்பட்ட சோக கலை ,நமக்குதான் நாடி தெரியுமே!

என்னண்ணே உங்க பிரச்சன ,மனுஷங்களா பொறந்தவனுக்கு பிரச்சனை இல்லாம இருக்குமா?

இந்த கடை வச்ச்சுருக்கானே இவனும் கொஞ்சநாள் வரைக்கும் ஒரு பொண்ண லவ் பன்றேன்னு லோலோன்னு பின்னாடியே நாய் மாதிரி அலைஞ்சிகிட்டு இருந்தன், அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடிச்சி .இப்பதான் அடங்கி ஒடங்கி கெடக்குறான். என்ன தாடி மட்டும் வச்சுகிறான் சொன்னா கேக்க மாட்டெங்கிறான்.எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஒன்னு கண்டிப்பா இருக்கும். உங்க முகத்த பார்த்தேன்! சோகம் நிறைய பொதஞ்சி கெடக்குகுங்க. கொட்டிடுங்க அப்பதான் மனசு பிரீயாகும்!

தலிவரு மெல்ல அழ ஆரம்பிச்சார்! நமக்கு கொஞ்சம் சங்கடமா போய்ட்டு. அப்ப நமக்கு வயசு 17 தலிவருக்கு 23 . அவரு தோள்ல ஆதரவா கை போட்டு விஷயத்த கறந்தேன்.

தலிவரும் அந்த பொண்ணும் கிரிஸ்டியன்ஸ் .ஒன்னாம் கிளாஸிலேர்ந்து ரெண்டு பேரும் பிரன்ட்ஸ், பின்னாளில் லவ்வர்ஸ்.தலிவரு கொஞ்சம் வசதி கம்மி. பொண்ணு வசதியான எடம்.இவரு பத்தாம் வகுப்பு படிக்கும்போது அந்த பொண்ணு சொல்லிச்சி ,

டேய் மணி நீ +2வெல்லாம் படிக்கவேண்டாம் ,ஐ.டி.ஐ படி சீகிரம் நல்ல வேல கெடைக்கும் நாம சீக்கிரம் கல்யணம் பண்ணிக்கலாம்!


தலிவரு ஐ.டி.ஐ முடிச்சி அப்பரன்டீஸ் முடிச்சி கார்ப்பரேஷனில மெக்கானிக் வேல!
மாசம்ம 5000 சம்பளம்.
பொண்ணு பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி. லவ்வு நல்லாதான் போய் கிட்டு இருந்திருக்கு,
திடீர்னு அந்த பொண்ணு என்ன நெனச்சாளோ என்னமோ ,இல்ல வீட்டுக்குத்தான் தெரிஞ்சு போச்சோ என்னமோ!

உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது ! எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க.

தலிவரு மனசு ஒடஞ்சி போயிட்டாரு ,வேற என்ன செய்ய கார்ப்பரேஷன் டெப்போவில இருந்த ஆசிட்ட குடிச்சிட்டாரு .நிறைய செலவு பண் காப்பாத்திடாங்க. அந்த பொண்ணுக்கு மனசு சங்கடமா இருக்குமில்ல .ஆறுதலா ஒரு லெட்டர் போட்டு இருக்கா. அதான் தலிவரு பொண்ண தேடி நம்ம ஊருக்கு வந்து இருக்கிராரு.

அந்த பொண்ண பத்தி சொல்லலையே!

நம்ம விட்டுக்கு பக்கத்துல வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சொந்தமான ஒரு டிரஸ்ட்
அங்க இங்கிலீஷ் கான்வென்ட், வயசு பொண்ணுங்களுக்கு தையல் பயிற்சி ,சின்னதா முதலுதவி மாதிரி மருத்துவம் எல்லாம் நடக்கும்,

அங்க சிஸ்டர்ஸ்(கன்னியாஸ்திரிகள்),கான்வென்ட்க்கு பாடம் சொல்லி கொடுக்க வந்த டீச்ச்ர்ஸ்.

நாமதான் அந்த டிரஸ்டுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜா.
கரண்ட் பீஸ் போனிச்சின்னா ,மோட்டர் சரியா தண்ணி எடுக்கலைன்னா, கரண்ட் பில்,டெலிபோன் பில் கட்டுர ஆபிஸ் பாயா ,எதுனா பங்க்ஸன் நடந்துச்சுன்னா , பங்க்ஸன் கோ ஆர்டி நேட்டரா ,புதுசா யாரும் ஆளுங்க வந்தா என்ன ஏதுன்னு விசாரிக்கிறதுன்னு நாம ஒரு பிரீ சர்வீஸ் இஞ்சினீயர் .
இந்த கதையில வருகின்ற பொண்ணும் அப்பிடிதான் டீச்சரா இங்க வந்தா!

தலிவரு கடந்த கால கதையெல்லாம் சொல்லி முடிச்சாரு. அந்த மனுஷன் மொகம் பார்க்க ரொம்பவும் பாவமா இருந்திச்சி . நம்மா ஆல் இன் ஆல் அழகு ராஜ( நாமதான்) என்ன பண்ணுனாரு .அப்பறம் நேரா அந் டிரஸ்ட்கு போனேன்.

என்னங்க கீதா எப்பிடி இருக்கீங்க?

அதான் தெனம் பாக்குரீங்களே எதும் மாற்றம் தெரியுதா?

என்ன சாப்டுரீங்க?

சாப்புடுரது இருக்கட்டும்,

மணின்னு ஒருத்தர பார்தேன்

உங்கள பார்க்க வந்தாராம்!
நீங்க தான் யாரையும் உள்ள அலோ பண்ணமாட்டிங்களே, அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்

உடனே பாக்கனுமே அந்த பொண்ணு மொகத்த பேயரஞ்ச மாதிரி இருந்துச்சி.
அதுவா அவரு எங்க சித்தி பையன் ,அம்மா பார்த்துட்டு வர சொன்னாங்களாம்,அப்பவே பார்த்துட்டு போய்ட்டாரே!
எங்க போனாரு, மூனு பஸ்ஸையும் விட்டுட்டு மறுபடியும் எந்த பஸ்ல போறதுன்னு தெரியாம நம்ம கடையிலதான் இருக்காரு

அய்யொ தேவனே இன்னும் போகலையா?

அப்பிடியே என்கூட அந்த டிரஸ்ட் வாசல் வரையும் வந்து எட்டி பார்த்தா.

சரி மேட்டருக்கு வாரென் ,சாருக்கு என்ன சொல்லி அனுப்பினீங்க?

என்னத்த சொல்ல, அம்மா பார்த்துட்டு வரச்சொன்னங்களாம் அதான் பார்த்துட்டு போய்ட்டாரே

ஓகே இது முழுக்க உங்களோட பர்சனல் மேட்டர் .இருந்தாலும் சாரு பாய்சன் சாப்டதிலேர்ந்து நீங்க கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்ன வரைக்கும் எனக்கு தெரியும்!


அவர வரசொல்லுங்க.

தலிவரும் வந்தாரு .

அதான் சொன்னனேனே இன்னும் போகலையா.

சிஸ்டருக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.

உடனே ஊட்டுக்கு அனுப்பிடுவாங்க.

பேசி கொண்டு இருக்கும் போதே பஸ் வர தலிவரு
பஸ்ல ஏறி போய்ட்டாரு.


ஒரு இருபது நாளு கடந்து போயிருக்கும்.
நைட் லேட்டா வீட்டுக்கு வந்தேன்.
என்னடா தம்பி கான்வென்ட்லேர்ந்து அந்த பொண்ணு அஞ்சாறு தடவ உன்ன தேடிகிட்டு போவுது.
அவங்ளுக்கு வேர வேலையே இல்லயா.
தொட்ட தொன்னூருக்கும் நீதான் ஓடனுமா?
இன்னோரு தபா வந்தா மூஞ்சில அடிக்கிறாப்ல பேசிபுடுறேன்.
அப்பரம் யார வந்து கூப்புடுராளுவோன்னு பாப்போம்.
இல்லம்மா அவங்களுக்கு என்ன அவசரமோ!
அக்கம் பக்கத்திலைருக்கிறவங்கள நம்பிதானே அந்த பொண்ணுங்க ஊர விட்டு ஊர் வந்து நம்ம ஊர்ல வந்து பாடம் சொல்லிகுடுக்கிறாங்க.
நாம என்ன அள்ளிகிட்டா குடுக்கிறோம் .
எதாவது சின்ன சின்ன உதவிதானே.
நீனும் திருந்த மாட்டே.
அவளுகளும் திருந்த மாட்டாளுக!
விடும்மா அதையே தொன தொனன்னு பேசிகிட்டு இருக்காதே.
எனக்கு பசிக்குது.

மறு நாள்காலையில தூங்கி எழுந்து வெளியே வாரேன் ரோட்டுல அந்த பொண்ணு நிக்கிறா!
என்ன எதுன்னு போயி கேட்டா,

வாங்க பேசிகிட்டே போவோம்.

உங்கிட்ட சொல்றதுக்கு என்ன .
அதான்

ம்ம் சொல்லுங்க .

இல்ல நேத்து மணி லெட்டர் போட்டு இருந்தாரு

படிச்சிட்டிங்களா இல்ல படிச்சி சொல்லனுமா?

இல்ல இது ரொம்ப சீரியசான மேட்டரு

ஓ அப்பிடியா!

இல்லங்க எங்க வீட்ல ஏகப்பட்ட பிரச்சன அது அவருக்கு புரிய மாட்டெங்குது
இப்போ கல்யாணம் வேண்டான்னுதான் சொன்னேன் .அதுக்கு போயி சூசைடு அட்டம்ப்டு பண்ணிட்டாரு.

அதான் முடிஞ்சி போன கதையாச்சே!

இப்போ என்ன பிராபுளம்?

அது
"நீ என்ன பாக்க நாளைக்குள்ள வராட்டியும் என் பொணத்த பாக்க வரலாம்னு" லெட்டர் எழுதி இருக்கிராரு .அதோட நீ இல்லாத வாழ்க்க எனக்கு வேண்டாம் நான் சீக்கிரம் போய் சேந்துடுவேன். சாக போர எனக்கு எதுக்கு இதெல்லாம் ........

கையில அந்த பொண்ணு ஒரு பார்சல் வச்சிருந்தா
அதுல தலிவரோட டீசி, பாஸ் போர்ட் ட்ரைவிங் லைசென்ஸ் எல்லாம் இருந்திச்சி

இப்போ நான் உங்களுக்கு என்ன செய்யனும்?



- காதல் வளரும்.....

Receomand this post to other reades :