...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Tuesday, August 22, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 4


வலைப்பதிவர் சுற்றுலா - 5

மழையின் வருகையோடு மலைக்கோவில் பயணங்கள். நல்லவேலையாக போக்கு காட்டி சென்றதால் வெயிலின் உக்கிரங்கள் தனிந்து இதமான மாலையில் உள்ளே நுழைகின்றோம் .படிகளாக செதுக்கிய வழிகளின் ஊடே பாறை துண்டு ஒன்றில் ஏறி நின்று பள்ளங்களின் பசுமையும் கவனம் சிதறினால் மறுகணம் மடுவுக்குள் அனைவரும் எனும் திருப்பத்தில் நின்று கொண்டோம். சிலர் மட்டும் தள்ளி சென்று தங்கள் உலகில் நின்றார்கள்...



குகைக்கோவில்களில் பல்லவர்களுக்கு பின் தங்கள் திறமைகளை காமித்த சில காதல் வயப்பட்ட ஜென்மங்கள் வெள்ளெழுத்துக்களில் தங்களோடு தங்கள் ஜோடியை கைகோர்த்து வந்து வலைப்பதிவர்களின் கண்களுக்கு விருந்தானார்கள்.

க.பி.கழக தலைவர் தன் உயிரினையும் மறந்து மலையில் மையல் கொண்ட அந்த காதல் ஜோடிகளுக்கு மரியாதை செய்ய புறப்பட்டு பின் கழக நலன் கருதி தன் முடிவை பரிசீலனை செய்தார்..

உடன் வந்திருந்த திரைப்பட இயக்குனரின் பார்வைகளாலேயே காதல் காட்சிகள் படம் பிடிக்க பட்டன.பல காட்சிகள் 'கட்" சொல்லப்படாமலேயே நீண்ட நேரங்கள் புதுமுக நடிகர்கள் என்ற பதட்டமில்லாமல் பார்வையாளருக்கு விருந்து வைத்தனர்.

மந்திகளின் பலத்த கரகோழ வரவேற்பில் தன்னை மறந்த சிலர் அவர்கள் மொழியில் சில கணங்கள் அங்கலாய்த்தனர்.

கூரையில்லா மண்டபமாய் நெடுக்கில் அகலமான பாதையோடு கம்பீரமாக நின்ற அந்த லை குடைவின் மறுபுத்தில் சிறிது நேரம் இளைப்பாறல்.



இன்னும் சற்று நேரத்தில் சாய்ந்து விடுமோ என அஞ்சப்படும் பாறைதுண்டு
அதனை தன் கையால் தாங்கி பிடிப்பது போல காட்சி அமைப்பு - டைரக்டரின் பல டேக்குகளை வாங்கிய அந்த நடிகை... அவளின் நடிப்பையும் மிஞ்சிவிட்டன சில காதல் ஜோடிகள். நீங்கள் செய்வதெல்லாம் சினிமா வித்தைகள் இதோ பாருங்கள் எங்கள் உயிரையும் கருத்தில் கொள்ளாமல் உங்களுக்காக எங்கள் காட்சிகள் என் சில ஜோடிகள் சாய்ந்த பாறைத்துன்டின் அடிப்பகுதியில் நிமிர்ந்த நிலையில் சில முத்த காட்சிகள்..

தொடர்ந்து வந்த கற்சிற்பங்கள்,பாதி மட்டுமே முடிவடைந்த நிலையில்
உயிரில்லா சிற்ப்பங்கள் ,புராதண கதைகள் சொல்லும் கற்சிற்ப காட்சிகள்
இருந்தும் க.பி.கழகம் தேடிய புத்தர் சிலை மட்டும் கடைசி வரை கண்ணில்
படவில்லை.

மேகம் கருக்க மெல்லிய தூரலில் மெதுவாக ஐந்து ரதம் நோகி நடை பயின்றோம்.

"குடைகுள் மழை
கோடம் பாகம் சினிமா கதை

குகைக்குள் மழை
முதன்முதலாய்
வலைப்பதிவர்
சுற்றுலா கதை"

--கவிதை உபயம் யெஸ்.பால பாரதி


ஐந்து ரதம் நோக்கி அன்புடன் அருள்

Receomand this post to other reades :

Thursday, May 25, 2006

மதுமிதாவின் பார்வைக்காக...

மதுமிதாவின் இந்த பதிவிற்காக..



வலைப்பதிவர் பெயர் : சிங்.செயகுமார்.

வலைப்பூ பெயர் : பனித்துளி பயணங்கள்

சுட்டி(உர்ல்) :http://singaarakumaran.blogspot.com/2006/05/blog-post.html

(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர் :புஷ்பவனம்.

நாடு :இந்தியா.

வலைப்பூ அறிமுகம் செய்தவர் : கா.சிவக்குமார்.



முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 07 அக்டோபர் 2005

இது எத்தனையாவது பதிவு :46

இப்பதிவின் சுட்டி(உர்ல்) :http://singaarakumaran.blogspot.com

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : தேடல்,பகிர்தல்,தமிழ் மேல் கொண்ட காதல்

சந்தித்த அனுபவங்கள் : வலைபதிவர் சந்திப்பு,மனதை வருடிய சில நிகழ்வுகள், சில நீச நினைவுகள்

பெற்ற நண்பர்கள் : நிறைய........

கற்றவை :கற்று கொண்டே இருக்கின்றேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : அதற்குதானே வலைப்பூக்கள். நம் எழுத்துக்கள் உலகத்தின் உடனடி பார்வை.

இனி செய்ய நினைப்பவை : சுவாரசியாமாக எழுத வேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு :ஒன்றும் சொல்வதிற்கில்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் :உலக தமிழர்களை இணைக்கும் வலைப்பூக்கள் ஊடகங்களாலேயும் படிக்க படுகின்றன.வலைப்பதிவுகள் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அதனால் நாம் எழுதும் பதிவுகள் ஓரளவுக்காவது பொருள் பொதிஞ்சதாக இருக்கணும்

Receomand this post to other reades :

Sunday, April 30, 2006

விகடனில் மதனின் பதில் சரிதானா?






(ஏப்ரல் / 2005 / 24 தேதியிட்ட ஆனந்தவிகடன் )

Receomand this post to other reades :

Friday, April 07, 2006

தேர்தல் பார்வை ...... வேதாரண்யம் தொகுதி

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க ,தி.மு.க வேட்பாளர் யார் என முன்கூட்டியே அறியபட்ட தொகுதி இதுவாகதான் இருக்கும்.இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் அ.தி.மு.கவிற்கு ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காமல் போகவே இந்த முறை கடும் போட்டிகளுக்கிடையே களம் காணுகிறது இந்த தேர்தல்.

அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளார் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன்.முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண்கின்றார். 1991 - ல் அம்மாவின் ஆட்சியில் ராஜ்ஜிய சபா உருப்பினராக இருந்தவர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் ஐயர் எம்.பியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டவர்.சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டு ஜெ. அணி ஏற்பட்டபோது அம்மாவிற்கு பாதுகாப்பு கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.அந்த பாசத்தின் அடிப்படையில் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ராஜ்ஜிய சபா எம்.பி பதவி பின்னர் இடைகாலத்தில் அம்மா பதவியிறக்கம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக நியமிக்கப்படும் முன் இவரது பெயர்தான் முன்னிலையில் இருந்தது.விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கும் போதே அடிமட்ட தொண்டர்கள் "ஓ.எஸ்.மணியணை முதல்வாக்கிய அம்மாவிற்கு நன்றி என போஸ்டர்கள் வீதிகளை அலங்கரிக்க அம்மாவிற்கு வந்த கோபத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.இருந்தும் கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.


தி.மு.கவில் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ வாக இருந்த மா.மீனாட்சிசுந்தரம் தி.மு.க பிளவு பட்டபோது ம.தி.மு.க பக்கம் சென்று விட்டார்.இதன் காரணமாக 1996 தேர்தலில் தி.மு.கவின் வேதாரண்யம் வட்ட செயலாளரும் கலைஞரின் பள்ளி தோழருமான செ.யூசூப். பெயர் முன்னிலையில் இருந்தது.பொருளாதார காரணங்களால் தற்போதைய எம்.எல்.ஏ எஸ்.கே.வேதரெத்தினம் தி.மு.க சார்பாக போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார்.


பின்னர் 2001 தேர்தலில் முன்னால் எம்.எல்.ஏ ம.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கு திரும்பி வந்தாலும் அவருக்கு கட்சியில் சீட் தரப்படவில்லை.தொகுதியில் நல்ல பெயரெடுத்த வேதரெத்தினத்திற்கு மாற்றாக யாரையும் நிருத்த முடியவில்லை.
தமிழ்நாட்டிலேயெ அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கலைஞரின் தனி பார்வைக்கு உள்ளானார்.


மக்கள் செல்வாக்கும் தொகுதிக்காக தன் சொத்துக்கள் பெரும்பகுதியை இழந்த தி.மு.க.வேட்பாடளர் எஸ்.கே.வேதரெத்தினமும்,

ரோடு போடும் கருவிகள் மட்டும் கோடிகணக்கான ரூபாய் மதிப்பில் வைத்துள்ள மாவட்டத்தின் பெரிய கண்ட்ராக்ட்காரரும்,கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் அ.தி.மு.கவின் வேட்பாளருமான ஓ.எஸ். மணியனும் கடும் போட்டிகளுக்கிடையே களம் காணுகின்றனர்.

இருந்தும் இந்த இரு வேட்பாளர்களும் காண்ட்ராக்ட் தொழிலில் நண்பர்கள்.
வெற்றியும் தோல்வியும் வாக்காளர் கையிலா வேட்பாளர் கையிலா? .........பார்க்கலாம்.

எப்படியோ யார் வெற்றி பெற்றாலும் இந்த தொகுதிக்கு ஒரு மந்திரி பதவி நிச்சயம்!.........
அமையும் ஆட்சியின் சாதகத்தை பொருத்து.

Receomand this post to other reades :

Saturday, April 01, 2006

ஹலோ அங்கிள்...

பறவைகள் கூடு திரும்பும் அந்தி வேளை
பணியிடம் சென்று திரும்புகையில்
என்னுடன் தினமும்
மண்மீது தடம் பார்த்து
சின்ன நடை போடும் என் சினேகிதி!


இன்றோடு நான்கு நாட்கள்
ஊரிலிருந்து உறவுகள் விட்டு
உழைப்பு தேடி வந்த கணவருக்கு
உற்ற துணையாக
கற்ற கல்வி கொண்டு
ஏற்ற வேலை
இனிதே கிடைத்ததே!

எங்கோ பார்த்த முகம்
அவளும் சிரிக்க முயலுகின்றாள்
என் பங்குக்கு நானும் அவளோடு!

சின்னதொரு சங்கிலியில்
சதுரமாக கோர்த்த அந்த டாலர்
எனக்கும் அவள் முகவரி
எளிதில் சொன்னதே!


என்னையும் அவளையும்
இன்னும் பிறரையும்
இணைத்தது இங்கேதானே!

மனதிற்கு இதமளிக்க
வாரத்தில் ஓர் நாள்
கூட்டு தியானம்
இங்கேதான் இவளை
கண்டதாக நினைவு!

ஹலோ சிஸ்டர்
ஆர் யூ அபியாசி
சின்னதொரு முகத்தில்
வண்ணமிகு வசீகரம்!


சீனர்களும் மலாய்களும்
சென்ற இடமெல்லாம் சிதறி கிடக்க
அறிமுகம் தெறிமுகம்
தேவையில்லாமல்
அழகான தமிழ் முகம்
காண கிடைத்ததில் - அங்கே
ஓர் அதிசயம்தான்!


ஒரே அலைவரிசையில்
எதிர் எதிர் அலுவலகத்தில்
என் நண்பர் என்றெண்ணியதில்
என் சினேகிதிக்கும் சந்தோஷம்!

மதிய வேளையில்
உணவோடு மனம் விட்டு
மணிநேர பேச்சுக்கள்!

தமிழ் பெண்களே இப்படித்தான்
தலைவனுக்கு படைத்துவிட்டு
தனக்கென்று தட்டில்
தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல
துளியோண்டு சாப்பாடு!

தோழியும் சளைத்தவளா!
தோசை ஒன்றே போதும்
தொட்டுகொள்ள சட்டினியும் சாம்பாரும்
எனக்கு மதிய உணவு
இது போதும் என்பாள்!

ஞாயிறு தோறும்
நாங்கள் சந்திப்போம்
கூட்டு பிரார்த்தனை என்று
தொலைவான ஓர் மையத்தில்!

நான்கு மாதங்கள் கடந்திருக்கும்
நடுவில் ஓர் நாள்
நண்பரே சகோதரா
நான் ஊர் போக
நாளும் வந்து விட்டதே
வேலையை விட மனசில்லை
வேறு வழியுமில்லையே1


ஊர் ஞாபகம் - என்
உற்ற தோழியையும்
உளம் குலைய வைத்ததோ!
பாவம் அவள்!
கல்யாணம் என்ற சடங்கால்
உடன் பிறந்தோர்
உயிர் தந்தோர்
உறவும் நட்பும் விடுத்து
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
இவன் தான் தலைவன்
அவனே உன்னவன்
அன்றிலிருந்து அன்னையும் தந்தையும்
அறிந்தோரும் தெரிந்தோரும்
எங்கோ பார்த்த முகமாய்
என்று காண்போம் இவர்களை
ஏக்கம் கொள்ள வைத்ததோ!


இல்லை நண்பரே
இனிய செய்தியொன்று
இனி நான் ஓருயிரல்ல
எனக்குள்ளுன் ஓர் உயிர்!


ஆச்சரியமும் சந்தோஷமும்
முதன் முதலாய் ஓர் பெண்
முழுகாத செய்தியொன்று
என்னிடம் பகர்ந்ததே!


பின்னொரு நாளில்
பிரார்த்தணை முடிந்து
கடிகாரம் பார்க்கையில்
கரம் ஒன்று பற்றியதே
வணக்கம் பிரதர் நலம்தானே
நலந்தான் நண்பரே ! நீங்கள்!?


உங்களை நானறிவேன்
என்னை நீங்கள் அறியுமோ?
என்னுள் குழப்பங்கள்!


இவள்தான் என் மனைவி - என்
சினேகிதியை கைகாட்ட
சிதறிய சிரிப்பலைகள் - என்
சின்ன இதயமும் நிரம்பியதே!

வெள்ளி கிழமை பயணத்திற்கு
விமான டிக்கட் எடுத்து
வழியனுப்ப வர இயலாது.
வாழ்த்துக்கள் சகோதரி
நிகழ்வுகள் நிழலாய் நகர!


ஞாயிற்று கிழமை
பிரார்த்தனையில்
நான் கண்டேன் அவளை
பயணம் தள்ளி போனதோ!


என்னருகே வந்த அவள்
இனிய நண்பரே
பயணங்கள் தள்ளி போனது
இனி நான் எப்போது
ஊர் பயணம்
எனக்கே தெரியவில்லை!

சின்னதொரு சிரிப்பில்
அவள் மனம் படித்தேன்
எதுவும் விளங்கவில்லை!

டெலிவரி ஆகிவிட்டது
சுக பிரசவம்தான்!

எனக்கும் தலை சுற்றல்
நேற்றுதான் குழந்தை ஜனனம்
இன்று எப்படி இங்கே நடனம்!


குறை பிரசவம் நண்பரே
இரை கொடுக்க கூட
இனிய தாய் வேண்டாமாம்
கனிவான நர்ஸே போதுமாம்!


என் விதி யாரை நோவ
எட்டு மாததில் எனக்கும்
குட்டை காலும் கையுடன் குழந்தை!
மூன்று மாதம் முழுதாய்
முழு பராமரிப்பும்
மருத்துவமணையில்!



கருத்தும் கவனமும்
கவலை கொள்ள வேண்டாம்
குழந்தை இனிதே
அழகான தூளியில்
அமுதுண்டு சிரிக்கிறான்!


இன்று காலையில்
எனக்கும் ஓர் போன்
புரியாத பாஷையில்
ஹலோ அங்கிள்
நவீன் பேசரேன்!



நன்றி: திசைகள்

Receomand this post to other reades :

Thursday, March 16, 2006

வயிற்றுப்பாடு



இரு வேளை சோறு
இன்றாவது கிடைக்குமா
ஏங்கியதே மனம்

கணக்கராய் ஓர் வேலை
என் பசி தீர்ந்து
இன்னும் ஓர் உயிருக்கு
என்னிடம் காசு


கால் கடுக்க நடந்து
ஊழியம் பார்த்து
வீடு திரும்புகையில்
உடம்பெல்லாம் அசதி

கடன் சொல்லி காலணா வட்டியில்
உடனே ஓர் சைக்கிள்
இனிதாக என் பயணம்

முச்சந்தி கடக்கையில்
என் முன்னே ஓர் பிகர்
கண்ணோடு சேர்ந்ததே -என்
கனவெல்லாம் கலைந்ததே

மறுநாளும் அதே சந்தில்
ஒரே பாதையில்
சினேகமாய் சின்ன பார்வை
அனேகமாய் காதல்தான்

இன்றோடு வாரம் ஒன்று
இன்றேனும் பேச வேண்டும்
என்ன பெயரென்று

குட் மார்னிங்
கொஞ்சம் லேட் போல
ஆமா அம்மாக்கு சுகமில்ல
அதான் கொஞ்சம் லேட்
ஐயம் குமரன் ...நீங்க
நர்மதா..
நைஸ் நேம்
நட்பாய் மாறி நிறைய சந்தோஷத்தில்
இன்று காதலாய்


வெள்ளி கிழமை விநாயகர் கோவிலும்
சனிகிழமை சினிமா தியேட்டரும்
சிக்கனமாய் காதல் படிப்பு

அக்கம் பக்கம் பேசும்முன்
சிக்கலின்றி சிரமமுமின்றி
வக்கனையாய் தட்சணையும்
போய்வர புல்லட்டும்
வேண்டாமென்று

பெற்றோரும் உற்றாரும் சூழ
பெருமாள் முன்னிலையில்
திருநாள் எங்களுக்கு

பிள்ளை இரண்டும்
பள்ளி போய் வர
பைக் போதலையே
பழைய விலையில்
கழிவு விலையில்
எங்கள் வீட்டிலும்
சொந்தமாய் ஓர் கார்
பெண்ணுக்கு கல்யாணம்
கண்ணீர் துளியோடு
புலம் பெயர்ந்த வாழ்க்கை

பையனுக்கு காதல் கல்யாணம்
பைசா செலவில்லாமல்
நைசா என்கிட்ட சொன்னா
நானோ மறுக்க முடியுமா?
அழகான மருமகள்
அமுதாய் குழந்தைகள்
என்னவளாம் மனைவி
என்னுருவம் மகன்
எல்லோரும் இன்புற்றிருக்க


திகிலாய் ஓர் நாள்
சதிராட்டம் என் வாழ்வில்
சர்க்கரை வியாதியம்
சின்ன காய்ச்சலுக்கும்
வண்ண நோவுகள்


ஒரு வேளை சோறு
கிடைக்குமா இன்றாவது?

நன்றி : தமிழோவியம்

Receomand this post to other reades :

Friday, March 10, 2006

சுமை தாங்கி!



நானறிந்த கடவுளில்
நாடறிந்த தெய்வம் நீதானே1
நடை பயின்று உடை கட்டி
நாளும் பொழுதும் நான் வளர
நித்தம் நித்திரை
கடன் தந்த கற்பகமகளே !

நடந்தேன் நடை வண்டியாய்
நான் சொல் பழக
நீ என் குருவாய்
கைவிட்ட கணவனை
கனவில் ஓரம் வைத்து
மடியில் மாதம் பத்து சுமந்தவளே!
தினமெல்லாம் எனக்கு தந்தையாய்
உனையல்லவா கண்டேன்!



காதலித்தேன் கன்னி அவளை
மோதலுக்கு முன்னே
கானல் நீரான என் காதலுக்கு
கரை கண்ட நண்பனாய்!

வேலையிடத்தில் விதமான சண்டைகள்
கலைமகளே கன பொழுதில்
துயரெல்லாம் போனதே
பொறுமை அவசியம்
புத்தி சொன்ன ஆசானே
என் தாயே
உன்னுள் எத்தனை முகங்கள்?

குழந்தையாம் நான்
குழந்தைகளிரண்டு எனக்கு
என்னையும் சேர்த்து
குழந்தைகள் நான்கு
என்ன ஓர் கணக்கு

அழுதேன் நான்
அசடே அமுதே
கிழவன் ஆனாலும்
கிழவியாம் நான்
குழந்தை நீயே
அம்மா தாயே
சுமை தாங்கியே
உன்னோடு நான்
உலகெல்லாம் பவனி வர
காலமெல்லாம் எனக்கு
கரம் தருவாயா?


நன்றி: தமிழோவியம்

Receomand this post to other reades :