...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Thursday, March 16, 2006

வயிற்றுப்பாடு



இரு வேளை சோறு
இன்றாவது கிடைக்குமா
ஏங்கியதே மனம்

கணக்கராய் ஓர் வேலை
என் பசி தீர்ந்து
இன்னும் ஓர் உயிருக்கு
என்னிடம் காசு


கால் கடுக்க நடந்து
ஊழியம் பார்த்து
வீடு திரும்புகையில்
உடம்பெல்லாம் அசதி

கடன் சொல்லி காலணா வட்டியில்
உடனே ஓர் சைக்கிள்
இனிதாக என் பயணம்

முச்சந்தி கடக்கையில்
என் முன்னே ஓர் பிகர்
கண்ணோடு சேர்ந்ததே -என்
கனவெல்லாம் கலைந்ததே

மறுநாளும் அதே சந்தில்
ஒரே பாதையில்
சினேகமாய் சின்ன பார்வை
அனேகமாய் காதல்தான்

இன்றோடு வாரம் ஒன்று
இன்றேனும் பேச வேண்டும்
என்ன பெயரென்று

குட் மார்னிங்
கொஞ்சம் லேட் போல
ஆமா அம்மாக்கு சுகமில்ல
அதான் கொஞ்சம் லேட்
ஐயம் குமரன் ...நீங்க
நர்மதா..
நைஸ் நேம்
நட்பாய் மாறி நிறைய சந்தோஷத்தில்
இன்று காதலாய்


வெள்ளி கிழமை விநாயகர் கோவிலும்
சனிகிழமை சினிமா தியேட்டரும்
சிக்கனமாய் காதல் படிப்பு

அக்கம் பக்கம் பேசும்முன்
சிக்கலின்றி சிரமமுமின்றி
வக்கனையாய் தட்சணையும்
போய்வர புல்லட்டும்
வேண்டாமென்று

பெற்றோரும் உற்றாரும் சூழ
பெருமாள் முன்னிலையில்
திருநாள் எங்களுக்கு

பிள்ளை இரண்டும்
பள்ளி போய் வர
பைக் போதலையே
பழைய விலையில்
கழிவு விலையில்
எங்கள் வீட்டிலும்
சொந்தமாய் ஓர் கார்
பெண்ணுக்கு கல்யாணம்
கண்ணீர் துளியோடு
புலம் பெயர்ந்த வாழ்க்கை

பையனுக்கு காதல் கல்யாணம்
பைசா செலவில்லாமல்
நைசா என்கிட்ட சொன்னா
நானோ மறுக்க முடியுமா?
அழகான மருமகள்
அமுதாய் குழந்தைகள்
என்னவளாம் மனைவி
என்னுருவம் மகன்
எல்லோரும் இன்புற்றிருக்க


திகிலாய் ஓர் நாள்
சதிராட்டம் என் வாழ்வில்
சர்க்கரை வியாதியம்
சின்ன காய்ச்சலுக்கும்
வண்ண நோவுகள்


ஒரு வேளை சோறு
கிடைக்குமா இன்றாவது?

நன்றி : தமிழோவியம்

Receomand this post to other reades :

Friday, March 10, 2006

சுமை தாங்கி!



நானறிந்த கடவுளில்
நாடறிந்த தெய்வம் நீதானே1
நடை பயின்று உடை கட்டி
நாளும் பொழுதும் நான் வளர
நித்தம் நித்திரை
கடன் தந்த கற்பகமகளே !

நடந்தேன் நடை வண்டியாய்
நான் சொல் பழக
நீ என் குருவாய்
கைவிட்ட கணவனை
கனவில் ஓரம் வைத்து
மடியில் மாதம் பத்து சுமந்தவளே!
தினமெல்லாம் எனக்கு தந்தையாய்
உனையல்லவா கண்டேன்!



காதலித்தேன் கன்னி அவளை
மோதலுக்கு முன்னே
கானல் நீரான என் காதலுக்கு
கரை கண்ட நண்பனாய்!

வேலையிடத்தில் விதமான சண்டைகள்
கலைமகளே கன பொழுதில்
துயரெல்லாம் போனதே
பொறுமை அவசியம்
புத்தி சொன்ன ஆசானே
என் தாயே
உன்னுள் எத்தனை முகங்கள்?

குழந்தையாம் நான்
குழந்தைகளிரண்டு எனக்கு
என்னையும் சேர்த்து
குழந்தைகள் நான்கு
என்ன ஓர் கணக்கு

அழுதேன் நான்
அசடே அமுதே
கிழவன் ஆனாலும்
கிழவியாம் நான்
குழந்தை நீயே
அம்மா தாயே
சுமை தாங்கியே
உன்னோடு நான்
உலகெல்லாம் பவனி வர
காலமெல்லாம் எனக்கு
கரம் தருவாயா?


நன்றி: தமிழோவியம்

Receomand this post to other reades :

Monday, March 06, 2006

வலைப்பதிவர் மாநாடும் துளசி வருகையும்

இதோ வருகின்றேன்! அதோ வருகின்றேன்! என்ற பரபரப்பின் ஊடே ஒரு வழியாக இயக்கத்தின் தலைவி துளசி கடந்த வியாழன் காலை (02.03.2006) சிங்கப்பூர் ஏர்லைன்சில் ட்ரான்ஸ்சிஸ்டில் சிங்கப்பூர் வந்தடைந்தார்.








செராங்கூன் சாலை கேங்ஸ் இரண்டாம் தளத்தில் சிங்கை முரசின் தலைவர் அன்பு வின் சீறிய ஏற்பாட்டில் வலைபதிவர் மாநாடு சரியாக மதியம் ஒரு மணிக்கு துவங்கியது.சிறப்பு விருந்தினர் துளசி ஜெட் லேக்கையும் பொருட்படுத்தாமல் மாநாட்டுக்கு முன்கூட்டியே வந்து சேர்ந்தார். சிங்கை நண்பர்கள் அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி. தம்பதி சகிதமாக இந்திய பயணம் மேற்கொண்ட தலைவி தனி ஆளாய் சிங்கை வந்து சேர்ந்ததுதான் .
சென்னை சுற்று பயணத்தின் போது நல்லி ,குமரனை நலம் விசாரிக்க செல்கிறேன் என்று லட்சங்களை காலி செய்த தலைவி,அதோடு நிற்காமல் பழகிய நண்பர் RMKV ஓனர் .பாவம் அல்பாயுசுல போயிட்டாரு,நல்ல மனுசனுகெல்லாம் இது காலமில்லப்பா.வந்தது வந்துட்டோம்.அந்த கொடுமையும் கொஞ்சம் விசாரிச்சிட்டு வந்துருவோம்னு சொல்லிட்டு நடையை கட்டி இருக்காங்க. கோபால் மாமாவும் சிவனேன்னு கூடவே போயிருக்காரு.
நம்ம அக்காவுக்கு சொல்லவா வேணும், ஏம்ம்பா தம்பி இந்த அம்பதாயிரம் பொடவையாமே , அத இங்க கொஞ்சம் காமிக்கிறது! அதற்குள் துளசியின் வருகை மேனெஜரில் காதுக்கு செல்ல பலத்த உபசரிப்பின் ஊடே ,இதெல்லாம் வேண்டாங்கம்மா உங்களுக்கு. எல்லாம் ஜோதிகா கட்டி கசங்கி போன புடவைங்க. உங்களுக்காக –ஸ்பெஷல அருவதினாயிரம் கலர்ல ....... அதற்க்குள் நியூசி-லேர்ந்து கோபால் மாமாவுக்கு அவசர போன் கால் வர மாமா அடுத்த பிளைட்டுலேயே கெளம்பி போயிட்டாரு.

பயண காலங்களில் சில திருமண வைபவங்களில் கலந்து கொண்ட அவர் சென்ற இடங்களெல்லாம் சகோதரி தன் கட் அவுட்களை பார்த்து கண் கலங்கி இருக்கிறார்.என் மேல் மதிப்பு வைத்து இருக்கும் தம்பி தங்கைகளுக்கக என்றும் நன் கடமை பட்டு இருப்பதாக அறிவித்தார்.

மாநாட்டின் சிறப்பு பேச்சாளர் ஆட்டோகிராப் சித்ரா துளசிக்கு என்றும் சளைத்தவரில்லை என்ற ரீதியில் அரங்கமே அதிரும் படியாக கலகல உரையாற்றினார். முன்னனி எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் கல்கியில் புதிய படைப்பான அப்பாவின் மனைவிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக செராங்கூன் சாலையிலுள்ள எல்லா நகைக்கடையும் ஏறி இறங்கியும் திருப்திபடாத சிறப்பு விருந்தினர் கடைசியாக தனது கிரிடிட் கார்டை எடுத்து விருப்பபட்டதை வாங்கி கொள்ளுங்கள் என பர்ஸில் இருந்த சில கார்டுகளை ஜெயந்தியின் கைகளில் திணித்தார். மதிய நேரம் தாண்டிவிட்டது மன்னித்து கொள்ளுங்கள் துளசி என்று எல்லோரையும் சப்பிட அழைத்தார் எம்.கே .குமார்.

நன்பர்களே நம் சகோதரியின் ஆசிய – பசிபிக் பயணத்தின் நோக்கங்களை விரைவில் சகோதரி அறிவிப்பார்.அதன் பொருட்டு மதுரையில் தருமியையும் சென்னையில் மதுமிதா .டோண்டு ராகவன்,பெங்களூரில் இளவஞ்சி,ராகவன் ஆகியோரை சந்தித்து இருக்கிரார். பேச்சுவாக்கில் சில செயல் பாடுகளை சுட்டி காடினார்.

இந்தியாவில் இருந்த காலங்களில் தினத்தாள்கள் ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு பரவசப்பட்டிருக்கிறார். மக்கள் சேவை செய்ய இந்தியாவில் அமிர்தானந்தமாயி போன்ற பெருமான்கள் இருப்பதை கண்டு,தமிழ்மணத்தில் நடக்கும் சின்ன சின்ன சச்சரவுகளை தீர்க்கவே தானும் ஏதேனும் செய்யலாம் என்பதே இந்த பயணத்தின் நோக்கமாக தெரிகின்றது. பாரதிராஜாவின் என் இனிய தமிழ் மக்களே என்றழைப்பது போல சகோதரி நம்மையெல்லாம் மக்களே நல்லா இருங்க நீங்கள் கவனித்து இருக்கலாம்.


வியாழன் அன்று அலுவல் நாள் என்பதால் மற்ற நண்பர்கள் தொலை பேசியில் சகோதரியை தொடர்பு கொண்டு தங்கள் இயலாமையை தெரிவித்து கொண்டனர். அன்று இரவே நியூசி விமானம் தயராக இருந்ததால் மாலை மணி 4.30க்கெல்லாம் மாநாடு இனிதே நிறைவு பெற்று பிரியா விடை பெற்றார் நமது சிறப்பு விருந்தினர். இன்னும் சில மாதங்களில் மீண்டும் சுற்று பயணம் இருப்பதாக அறிகின்றோம்.



சிங்கை நண்பர்கள் சார்பில் சிங்.செயகுமார்.

Receomand this post to other reades :